ஜோஹன்ஸ் எலியாஸ் (Johannes Elias Teijsmann -1808–1882) ஒரு டச்சுத் தாவரவியலாளர், தாவரச் சேகரிப்பாளர் மற்றும் தோட்டக்கலை வல்லுநர். நெதர்லாந்தின் Arnhem நகரில் பிறந்த இவர்,1830-ம் ஆண்டு ஜாவாவுக்குச் சென்றார். பிறகு தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜாவாவில் கழித்தார்.
அங்கு அவர் டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநரரான மற்றொரு ஜோஹன்ஸ் வான் டென் (Johannes van den Bosch )என்பவரின் தோட்டக்காரராகப் பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே, இன்றைய இந்தோனேசியாவின் Bogor நகரில் அமைந்திருந்த Buitenzorg Botanic Gardens -ன் பொறுப்பாளராக (hortulanus) நியமிக்கப்பட்டு 1831 முதல் 1869 வரை — சுமார் 38 ஆண்டுகள், அந்தத் தாவரவியல் பூங்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.

தாவரவியல் பூங்காவைப் பராமரித்தது மட்டுமல்லாமல். தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளுக்கு அவர் தாவரச் சேகரிப்புப் பயணங்களையும் மேற்கொண்டார். சுந்தா தீவுகள், மலாய் தீவுக்கூட்டம் மற்றும் அன்றைய Siam (இன்றைய Thailand) உள்ளிட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட பயணங்களிலிருந்து பல தாவரங்களைச் சேகரித்து Bogor தாவரவியல் பூங்காவுக்குக் கொண்டு வந்தார்.
Teijsmann-ன் ஆர்வம் அழகான தாவரங்களைச் சேகரிப்பதில் மட்டுமல்லாமல் மனிதர்களுக்குப் பயன்படும் economically important தாவரங்கள் மீது, குறிப்பாக உணவுப்பயிர்கள் மீதும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.
அன்றைய டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவதை இவரே ஊக்குவித்தார். மேலும், சின்கோனா மரங்களை ஜாவாவில் பயிரிடுவதற்கும் முக்கியப் பங்காற்றினார். இம்மரங்களின் பட்டையிலிருந்து பெறப்பட்டகுயினைன் மலேரியா சிகிச்சையில் பயன்பட்டது.

பனைத் தாவரங்களிலும் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து எண்ணெய்ப்பனை (Elaeis guineensis) இந்தோனேசியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது காலத்தில் Bogor தாவரவியல் பூங்காவின் தாவரச் சேகரிப்பு பெரிதும் விரிவடைந்தது.
அவர் ஓய்வு பெற்ற பிறகும் தாவரச் சேகரிப்புப் பணியை நிறுத்தவில்லை. 1869-ல் பூங்காவின் பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும் Honorary Inspector of Cultures என்ற பதவியில் இருந்து, டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் பல பகுதிகளுக்குச் சென்று தாவரங்களைச் சேகரித்து வந்தார்.
இவரது நினைவாக Teijsmann என்ற பெயர் பல தாவரங்களின் அறிவியல் பெயர்களில் இடம்பெற்றுள்ளது. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானது: Johannesteijsmannia என்னும் Diamond Palm. இது Johannesteijsmannia என்ற பேரினப் பெயர், 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுத் தாவரவியலாளரும் தோட்டக்கலை வல்லுநருமான இந்தஜோஹன்ஸ் எலியாஸ் டெய்ஸ்மானைகௌரவிக்கும் வகையில் வைக்கப்பட்டது.

ஃபிஜியில் பிரபல sleeping giant பூங்காவில் ஜெ வும் சைதன்யாவும் இதனருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப்ப்பார்த்த பின்னர்தான் இதை எழுத நினைத்தேன்
Johannesteijsmannia altifrons தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும் ஒரு அரிய பனை. இதன் மிகப்பெரிய, அகலமான, ஆழமான மடிப்புகளைக் (Pleats) கொண்ட வைரத்தின் வடிவைக்கொண்ட பெரிய இலைகளுக்காக இது Diamond Palm என்று அழைக்கப்படுகிறது.

சிற்றினப் பெயரான altifrons இரண்டு லத்தீன் சொற்களிலிருந்து உருவானது. altus என்றால் “உயரமான” அல்லது “மேல்நோக்கிய” என்றும், frons என்றால் “இலை” அல்லது “இலைத்தொகுதி” என்றும் பொருள். எனவே altifrons என்பதனை “உயர்ந்து நிற்கும் இலைகளைக் கொண்டது” என்று பொருள்படுத்தலாம்.
இதன் மற்றுமோர் சிறப்பு இது ஒரு தண்டற்ற பனை (acaulescent palm) என்பதுதான். “தண்டற்றது” என்றால் தண்டு இல்லாதது என்று பொருள் அல்ல. மிகக்குறுகிய , தரைக்குக் கீழே மண்ணுக்குள் கிடைமட்டமாக படர்ந்து வளரும் தண்டு இருக்கும் ஆனால். வெளியில் இருந்து பார்க்கும்போது தண்டு தெரியாது. நீளமான காம்புகளுடன் வைரம் போன்ற அழகிய மடிப்புகள் கொண்ட இலைகளின் கூட்டமாக மரம் இருக்கும்.
சைதன்யாவுக்கு இந்த புகைப்படங்களுக்காக அன்பும் நன்றியும்.
Leave a Reply
You must be logged in to post a comment.