லோகமாதேவியின் பதிவுகள்

Month: March 2024

ருத்ராக்‌ஷ மரம்!

 இயற்கையின் அம்சங்களான கதிரும், நிலவும், நீரும் உலகெங்கிலும் வழிபடப்படுகிறது. பண்டைய பல நாகரீகங்களில் மர வழிபாடு மிக முக்கியமானதாக இருந்தது, இன்றும் பல தொல்குடியினரின் சடங்குகளில் மர வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் பன்னெடுங்காலமாக பல  தாவரங்கள் புனிதமானவைகளாக இறைவனுடன் தொடர்புடையவைகளாக, இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இருக்கின்றன. இந்துமத புனித தாவரங்களில் துளசி வில்வம் அருகு அரசு இவற்றுடன்  ருத்ரக்‌ஷ மரங்களும் உள்ளன.

 இந்து, புத்த, சீக்கிய மதங்களில் பிரார்த்தனை மாலைகளில் பயன்படுத்தப்படும் விதைகளில் முக்கியமானவை குன்றிமணி மற்றும் ருத்ராக்‌ஷம். இவற்றில் அளவில் பெரியதும் பல்லாயிரமாண்டு கால  பயன்பாட்டை கொண்டிருப்பதும் ருத்ராக்‌ஷங்களே!

Elaeocarpus ganitrus என்னும் மரத்தின் நீலநிற கனிகளின் உள்ளிருக்கும்  கல் போன்ற  கடினமான விதைகளே ருத்ராக்‌ஷம்  எனப்படுகின்றன. ஆசிய பசிபிக் பகுதிகளை சேர்ந்த இம்மரம்  இந்தியா இலங்கை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா,நேபாளம்,  மியான்மர், மேற்கு ஆப்பிரிக்கா,ஹவாய், ஜாவா, சுமத்ரா மற்றும் சீனாவில் காணப்படுகின்றன.

Elaeocarpus, பேரினத்தின் 488 சிற்றினக்களில் 35 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன.   இம்மரத்தின் அறிவியல் பெயுரில்  Elaeocarpus என்பது ஆலிவ் போன்ற கனிகள் என்று பொருள்படும்,  ganitrus. என்பது  இம்மரத்தின் மலாய் மொழிப்பெயர்.

18-25 மீ உயரம் வளரக்கூடிய  பசுமை மாறா இம்மரத்தில்  ஐந்திதழ்களுடன் வெண்ணிற மலர்களும்  உருண்டையான ஊதா-நீலக்கனிகளும் கொத்துக்கொத்தாக உருவாகும்.  மரத்திலிருந்து பலகை வேர்கள் தோன்றும். 4லிருந்து 10 கி எடைகொண்ட நீலக்கனிகளின் உள்ளே கல்போன்ற பல அறைகள் கொண்ட உறையினுள்ளே ருத்ராக்‌ஷ விதைகள் இருக்கும். 

மூன்றிலிருந்து ஆறு வருடங்களில் மலர்ந்து கனியளிக்கத் துவங்கும் இம்மரங்கள் ஒரு வருடத்தில் 1000 த்திலிருந்து 2000 கனிகள் வரை அளிக்கும். ருத்ராக்‌ஷ கனிகளில்  புரதம், மாவுச்சத்து, ஆல்கலாய்டுகள் உள்ளிட்ட பல முக்கியமான வேதிப்பொருட்கள் உள்ளன. பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள இக்கனிகள் மனிதர்கள் உண்ண தகுந்தவை அல்ல.   ஹார்ன்பில் பறவைகளும் பழந்தின்னி வவ்வால்களும், சில விலங்குகளும் கனிகளை விரும்பி உண்ணும்.

எலேயோகார்பஸ் பேரினத்தின் வேறு சில  சிற்றினங்களும், ருத்ராக்‌ஷங்களை அளிக்கின்றன. ருத்ராக்‌ஷங்களை அளிக்கும்  மற்றொரு வகையான E.reticulatus மரத்தின் மலர்கள்  இளஞ்சிவப்பில் இருக்கும்

1979ல் ருத்ராக்‌ஷ கனிகளில்  ருத்ராகைன் (rudrakine) எனப்படும் மருத்துவ பயன்பாடுகள் அதிகம் கொண்டிருக்கும் வேதிப்பொருள் கூடுதலாக கண்டறியபட்டது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத, யுனானி முறைகள் ருத்ராக்‌ஷ கனிகளையும் விதைகளையும் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்துகின்றன.

ஆயுர்வேதம் ருத்ராக்‌ஷ மாலையை அணிந்துகொள்ளுவதே இருதயத்துக்கும் மூளை நரம்புகளுக்கும் நண்மை பயக்கும் என்கிறது 

மலட்டுத்தன்மை, முடக்குவாதம், ஆஸ்துமா,  தூக்கமின்மை மற்றும் ஈரல் குறைபாடுகள், மன அழுத்தம் ஆகியவை தகுந்த ருத்ராக்‌ஷ மாலைகளை அணிவதன் மூலம் குணமாகும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். இவற்றையெல்லாம் அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் ருத்ராக்‌ஷமாலையை அணிந்திருந்தனர்.

ருத்ராக்‌ஷஙக்ளில் இருக்கும் நுண்ணிய மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டு அவை ஒரு முகத்திலிருந்து 21 முகங்கள் கொண்டவை என வேறுபடுகின்றன. பொதுவாக ஒரு ருத்ராக்‌ஷ மாலையில் 108 ருத்ராக்‌ஷங்கள் கோர்க்கப்படுகின்றன.

ருத்ராக்‌ஷங்கள் கருப்பு, சிவப்பு, பழுப்பு, மண் நிறம், ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கின்றன. இவற்றில் பல அளவுகள், வடிவங்கள்  நிறங்கள் இருப்பினும் மிக சிறிய அடர் மண் நிறத்தில் இருப்பவையே விலையுயர்ந்தவையாக கருதப்படுகின்றன.

இவற்றில் ஒரு முகம் மற்றும் பஞ்சமுகம் கொண்ட ருத்ராக்‌ஷங்கள் மிக சக்தி வாய்ந்தவை என்று நம்பப்படுகின்றது.

 இயற்கையின் அம்சங்களான கதிரும், நிலவும், நீரும் உலகெங்கிலும் வழிபடப்படுகிறது. பண்டைய பல நாகரீகங்களில் மர வழிபாடு மிக முக்கியமானதாக இருந்தது, இன்றும் பல தொல்குடியினரின் சடங்குகளில் மர வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் பன்னெடுங்காலமாக பல  தாவரங்கள் புனிதமானவைகளாக இறைவனுடன் தொடர்புடையவைகளாக, இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இருக்கின்றன. இந்துமத புனித தாவரங்களில் துளசி வில்வம் அருகு அரசு இவற்றுடன்  ருத்ரக்‌ஷ மரங்களும் உள்ளன.

 இந்து, புத்த, சீக்கிய மதங்களில் பிரார்த்தனை மாலைகளில் பயன்படுத்தப்படும் விதைகளில் முக்கியமானவை குன்றிமணி மற்றும் ருத்ராக்‌ஷம். இவற்றில் அளவில் பெரியதும் பல்லாயிரமாண்டு கால  பயன்பாட்டை கொண்டிருப்பதும் ருத்ராக்‌ஷங்களே!

Elaeocarpus ganitrus என்னும் மரத்தின் நீலநிற கனிகளின் உள்ளிருக்கும்  கல் போன்ற  கடினமான விதைகளே ருத்ராக்‌ஷம்  எனப்படுகின்றன. ஆசிய பசிபிக் பகுதிகளை சேர்ந்த இம்மரம்  இந்தியா இலங்கை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா,நேபாளம்,  மியான்மர், மேற்கு ஆப்பிரிக்கா,ஹவாய், ஜாவா, சுமத்ரா மற்றும் சீனாவில் காணப்படுகின்றன.

Elaeocarpus, பேரினத்தின் 488 சிற்றினக்களில் 35 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன.   இம்மரத்தின் அறிவியல் பெயுரில்  Elaeocarpus என்பது ஆலிவ் போன்ற கனிகள் என்று பொருள்படும்,  ganitrus. என்பது  இம்மரத்தின் மலாய் மொழிப்பெயர்.

18-25 மீ உயரம் வளரக்கூடிய  பசுமை மாறா இம்மரத்தில்  ஐந்திதழ்களுடன் வெண்ணிற மலர்களும்  உருண்டையான ஊதா-நீலக்கனிகளும் கொத்துக்கொத்தாக உருவாகும்.  மரத்திலிருந்து பலகை வேர்கள் தோன்றும். 4லிருந்து 10 கி எடைகொண்ட நீலக்கனிகளின் உள்ளே கல்போன்ற பல அறைகள் கொண்ட உறையினுள்ளே ருத்ராக்‌ஷ விதைகள் இருக்கும். 

மூன்றிலிருந்து ஆறு வருடங்களில் மலர்ந்து கனியளிக்கத் துவங்கும் இம்மரங்கள் ஒரு வருடத்தில் 1000 த்திலிருந்து 2000 கனிகள் வரை அளிக்கும். ருத்ராக்‌ஷ கனிகளில்  புரதம், மாவுச்சத்து, ஆல்கலாய்டுகள் உள்ளிட்ட பல முக்கியமான வேதிப்பொருட்கள் உள்ளன. பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள இக்கனிகள் மனிதர்கள் உண்ண தகுந்தவை அல்ல.   ஹார்ன்பில் பறவைகளும் பழந்தின்னி வவ்வால்களும், சில விலங்குகளும் கனிகளை விரும்பி உண்ணும்.

எலேயோகார்பஸ் பேரினத்தின் வேறு சில  சிற்றினங்களும், ருத்ராக்‌ஷங்களை அளிக்கின்றன. ருத்ராக்‌ஷங்களை அளிக்கும்  மற்றொரு வகையான E.reticulatus மரத்தின் மலர்கள்  இளஞ்சிவப்பில் இருக்கும்

1979ல் ருத்ராக்‌ஷ கனிகளில்  ருத்ராகைன் (rudrakine) எனப்படும் மருத்துவ பயன்பாடுகள் அதிகம் கொண்டிருக்கும் வேதிப்பொருள் கூடுதலாக கண்டறியபட்டது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத, யுனானி முறைகள் ருத்ராக்‌ஷ கனிகளையும் விதைகளையும் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்துகின்றன

ஆயுர்வேதம் ருத்ராக்‌ஷ மாலையை அணிந்துகொள்ளுவதே இருதயத்துக்கும் மூளை நரம்புகளுக்கும் நண்மை பயக்கும் என்கிறது 

மலட்டுத்தன்மை, முடக்குவாதம், ஆஸ்துமா,  தூக்கமின்மை மற்றும் ஈரல் குறைபாடுகள், மன அழுத்தம் ஆகியவை தகுந்த ருத்ராக்‌ஷ மாலைகளை அணிவதன் மூலம் குணமாகும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். இவற்றையெல்லாம் அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் ருத்ராக்‌ஷமாலையை அணிந்திருந்தனர்.

ருத்ராக்‌ஷஙக்ளில் இருக்கும் நுண்ணிய மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டு அவை ஒரு முகத்திலிருந்து 21 முகங்கள் கொண்டவை என வேறுபடுகின்றன. பொதுவாக ஒரு ருத்ராக்‌ஷ மாலையில் 108 ருத்ராக்‌ஷங்கள் கோர்க்கப்படுகின்றன.

ருத்ராக்‌ஷங்கள் கருப்பு, சிவப்பு, பழுப்பு, மண் நிறம், ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கின்றன. இவற்றில் பல அளவுகள், வடிவங்கள்  நிறங்கள் இருப்பினும் மிக சிறிய அடர் மண் நிறத்தில் இருப்பவையே விலையுயர்ந்தவையாக கருதப்படுகின்றன.

இவற்றில் ஒரு முகம் மற்றும் பஞ்சமுகம் கொண்ட ருத்ராக்‌ஷங்கள் மிக சக்தி வாய்ந்தவை என்று நம்பப்படுகின்றது.

ருத்ராக்‌ஷம் போலவே இருக்கும் விதைகளை அளிக்கும் பத்ராக்‌ஷம் என்னும் விதைகளும் போலியாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒன்று அல்லது இரண்டு முகங்கள் மட்டுமே இருக்கும் பத்ராக்‌ஷம் மேல்பகுதி வளைந்த படகுபோன்ற விதைகளை கொண்டிருக்கும். இவை ருத்ராக்‌ஷங்களை விட எடை மிக குறைவாக இருக்கும் பத்ராக்‌ஷ மரங்களும் மருத்துவ உபயோங்களை கொண்டவை எனினும் அவற்றிலிருந்து கிடைக்கும் விதைகள் ருத்ராக்‌ஷங்களல்ல.

 ருத்ராக்‌ஷ விதைகள் நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் இந்தியா இலங்கையிலிருந்து  பெருமளவில் வணிகம் செய்யபட்டன 

கனிகளை நீரில் ஊறவைத்து சதைப்பகுதியை நீக்கி  எடுக்கப்படும் கொட்டைகள் மெருகேற்றப்பட்டு ருத்ராக்‌ஷங்களாக  பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகள் இக்கனியை உண்டபின்னர் அவற்றின் கழிவுகளில் இருந்தும்,  கனிகளை கடல்நீரில் ஊறவைத்து கழுவியும் ருத்ராக்‌ஷங்கள் எடுக்கப்படுகின்றன. இந்துக்கள் மட்டுமல்லது இஸ்லாமியர்களும் ருத்ராக்‌ஷங்களை மாலையாக கோர்த்து ஜெபமாலையாக பயன்படுத்துகிறார்கள்.

வட இந்தியாவில்  குறிப்பாக இமாலய பகுதிகளில் ருத்ராக்‌ஷ மாலை  அணிந்துகொண்டும்  அம்மாலைகளை கொண்டு ஜெபமும், தியானமும் செய்து கொண்டிருக்கும்  சாதுக்களை அதிகம் காணலாம்

 நூற்றாண்டுகளாக இந்தியாவில் ருத்ராக்‌ஷங்கள் சைவ சமயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சாதுக்கள், துறவிகள், அரசர்கள், முனிவர்கள்  ஆகியோர் ருத்ராக்‌ஷ மாலைகளை அணிந்திருந்தனர்.

பண்டைய இந்தியாவின்  தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்கள் ருத்ராக்‌ஷங்களை குறிப்பிட்டிருக்கின்றன.

குறிப்பாக சிவபுராணம் ருத்ரக்‌ஷங்களின் தோற்றம், வரலாறு பயன்பாடு சக்திகள் முக்கியத்துவம் ஆகியவற்றை விரிவாக பேசுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் மனித குலத்தின் நன்மைக்காக தவமிருந்த சிவன்  கண் விழித்த போது கண்களில் இருந்து பூமியில் விழுந்த இரு கண்ணீர் துளிகள் விதைகளாக மாறி அவை  ருத்ராக்‌ஷ மரங்களாகின என்கிறது சிவபுராணம்.  சமஸ்கிருத சொல்லான ருத்ராக்‌ஷம் எனபதற்கு ருத்ரனின்,  (சிவனின்) விழிகள் என்று பொருள். 

பண்டைய இந்தியாவில் ருத்ராக்‌ஷங்களை அணிந்துகொள்ளுவதே பல நோய்களை தீர்க்கும் என்றும் ருத்ராக்‌ஷங்களை  ஊறவைத்த நீரை அருந்துவது உடலாரோக்கியதை மேம்படுத்தும் எனவும் நம்பிக்கை இருந்தது. மேலும் ருத்ராக்‌ஷங்களின் முகங்களின் எண்ணிக்கைக்கும் அவற்றின் சக்திக்கும் தொடர்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆயுர்வேதமும் இதை உறுதிப்படுத்துகிறது. 

ருத்ராக்‌ஷம் போலவே இருக்கும் விதைகளை அளிக்கும் பத்ராக்‌ஷம் என்னும் விதைகளும் போலியாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒன்று அல்லது இரண்டு முகங்கள் மட்டுமே இருக்கும் பத்ராக்‌ஷம் மேல்பகுதி வளைந்த படகுபோன்ற விதைகளை கொண்டிருக்கும். இவை ருத்ராக்‌ஷங்களை விட எடை மிக குறைவாக இருக்கும் பத்ராக்‌ஷ மரங்களும் மருத்துவ உபயோங்களை கொண்டவை எனினும் அவற்றிலிருந்து கிடைக்கும் விதைகள் ருத்ராக்‌ஷங்களல்ல.

 பத்ராக்‌ஷம்

ருத்ராக்‌ஷ விதைகள் நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் இந்தியா இலங்கையிலிருந்து  பெருமளவில் வணிகம் செய்யபட்டன 

கனிகளை நீரில் ஊறவைத்து சதைப்பகுதியை நீக்கி  எடுக்கப்படும் கொட்டைகள் மெருகேற்றப்பட்டு ருத்ராக்‌ஷங்களாக  பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகள் இக்கனியை உண்டபின்னர் அவற்றின் கழிவுகளில் இருந்தும்,  கனிகளை கடல்நீரில் ஊறவைத்து கழுவியும் ருத்ராக்‌ஷங்கள் எடுக்கப்படுகின்றன. இந்துக்கள் மட்டுமல்லது இஸ்லாமியர்களும் ருத்ராக்‌ஷங்களை மாலையாக கோர்த்து ஜெபமாலையாக பயன்படுத்துகிறார்கள்.

வட இந்தியாவில்  குறிப்பாக இமாலய பகுதிகளில் ருத்ராக்‌ஷ மாலை  அணிந்துகொண்டும்  அம்மாலைகளை கொண்டு ஜெபமும், தியானமும் செய்து கொண்டிருக்கும்  சாதுக்களை அதிகம் காணலாம்.

 நூற்றாண்டுகளாக இந்தியாவில் ருத்ராக்‌ஷங்கள் சைவ சமயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சாதுக்கள், துறவிகள், அரசர்கள், முனிவர்கள்  ஆகியோர் ருத்ராக்‌ஷ மாலைகளை அணிந்திருந்தனர்.

பண்டைய இந்தியாவின்  தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்கள் ருத்ராக்‌ஷங்களை குறிப்பிட்டிருக்கின்றன.

குறிப்பாக சிவபுராணம் ருத்ரக்‌ஷங்களின் தோற்றம், வரலாறு பயன்பாடு சக்திகள் முக்கியத்துவம் ஆகியவற்றை விரிவாக பேசுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் மனித குலத்தின் நன்மைக்காக தவமிருந்த சிவன்  கண் விழித்த போது கண்களில் இருந்து பூமியில் விழுந்த இரு கண்ணீர் துளிகள் விதைகளாக மாறி அவை  ருத்ராக்‌ஷ மரங்களாகின என்கிறது சிவபுராணம்.  சமஸ்கிருத சொல்லான ருத்ராக்‌ஷம் எனபதற்கு ருத்ரனின்,  (சிவனின்) விழிகள் என்று பொருள். 

பண்டைய இந்தியாவில் ருத்ராக்‌ஷங்களை அணிந்துகொள்ளுவதே பல நோய்களை தீர்க்கும் என்றும் ருத்ராக்‌ஷங்களை  ஊறவைத்த நீரை அருந்துவது உடலாரோக்கியதை மேம்படுத்தும் எனவும் நம்பிக்கை இருந்தது. மேலும் ருத்ராக்‌ஷங்களின் முகங்களின் எண்ணிக்கைக்கும் அவற்றின் சக்திக்கும் தொடர்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆயுர்வேதமும் இதை உறுதிப்படுத்துகிறது. 

தெய்வமதி!

சாம்பவி சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு இளங்கலை பொறியியல், தொழில்நுட்ப மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய அளவில் தரப்படுத்தப்பட்ட கணினி அடிப்படையிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை (பயப்பட ஒன்றுமில்லை JEE (Main என்பதை தமிழில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்)  எழுதியிருந்தாள். 

வீட்டில் சரணுக்கு பிறகு சாம்பவிதான் இதை எழுதினாள். தருண் இந்த வழிக்கே போகவில்லை அவனது இலக்கான காட்டியலுக்கான தேர்வை மட்டும் எழுதினான். சரணும் சாம்பவியும் இந்த நுழைவுத்தேர்வுக்கென ஒருபோதும் பிரத்யேகமாக தயாரித்துக் கொள்ளவில்லை இதற்கென இருக்கும் சிறப்பு கட்டண கல்வி வகுப்புகளில் சேரவும் இல்லை. 

சரண் 1 வார க்ரேஷ் வகுப்புகளில் சேர்ந்திருந்தான். முதல்நாளின் முதல் வகுப்பில் ஆசிரியர் தவறாக சொல்லிக் கொடுத்த ஒரு பாடத்தின் பகுதியை வகுப்பில் திருத்தினான் பின்னர் அவனும் வகுப்புகளுக்கு செல்லவில்லை. மிக நல்ல மதிப்பெண்களை பெற்றான்.

சாம்பவி சரண்  தருண் மூவருமே அடிப்படையில் புத்திசாலிகள். தரமற்ற பள்ளிக்கல்வியும், பொருந்தாத வகுப்பறைச்சூழலும் ஆசிரியப்பணிக்கான அர்ப்பணிப்பும் தகுதியுமில்லாத,  தரப்படுகின்ற  சொற்ப சம்பளத்தின் அதிருப்தியை மாணவர்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தும் ஆசிரியர்களுமாக மொண்ணையாக்கியதன் பிறகும் தப்பித்து வந்தவர்கள் மூவரும். 

சரணும் தருணும் ஒரு நல்ல பள்ளியில் பள்ளி இறுதியை கற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள்.ஆனால் சாம்பவி அதை தவறவிட்டாள். வெண்முரசில் அம்பையை’’ நெய்யுண்ட வேள்விச்சுடர் போல்’’ என்று வர்ணிக்கும் ஒரு வரி வரும். அப்படி வீட்டின் கொற்றவையாக குலக்கொழுந்தாக இருக்கும் ஒற்றை மகளை வெளியே எங்கும் அனுப்ப முடியாத, அவள் முகம் காணமுடியாத மாலைகளில் வீடுதிரும்புவதை கற்பனையிலும் காணச் சகியாத விஜி என்னும் தகப்பனின் பலவீனத்தின் பலனை சாம்பவி இந்த இரு வருடங்கள் அனுபவித்தாள். 

 இந்த இருவருடங்களும் அவள் கல்வி கற்ற (அல்லது அவள் இருந்த ) அந்த இடம் அவளை ஏகத்துக்கும் சிதைத்தது. கல்வியை வியாபாரமாக்கிய பல நிறுவனங்களில் அப்பள்ளியும் ஒன்று.   இனி திரும்பக்கிடைக்கவே கிடைக்காத இளமைப்பருவத்தின் அரிய தருணங்களை அவளுக்கான ஓய்வை அவளுக்கான விருப்பங்களை இழந்தாள். தொடர்ந்த கடும் உழைப்பாலும் ஓய்வில்லாதாலும் கேசமிழப்பும் இருந்தது. அவளின் பத்திரத்தை உறுதி செய்யவும் அவள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளவும் விஜியும் இத்தனை ஆண்டுகள் பாடுபட்டதை காட்டிலும் இந்த இருவருடங்கள் கடுமையாக உழைத்தான். 

எளிதாக மகிழ்ச்சியாக பள்ளிக்கல்வியை நிறைவு செய்த காலங்கள் காணாமல் ஆகிவிட்டன. ஒரு விஷக்காய்ச்சல் போல அனைவரும் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டு இந்த இறுதி வகுப்புக்களை கடினமாக்கிக்கொண்டு  குழந்தைகளையும் கொடுமைப்படுதிக்கொண்டு கல்விக்கூடங்களுகு வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

சாம்பவி மிக எளிதாக விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் இந்த தேர்வை எழுதினாள். இந்த குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை அவள் எந்த சிரமமும் இல்லாமல் பெற்றது எனக்கு மகிழ்ச்சி மேலும் இதுபோன்ற சிறப்பு வகுப்புக்களின் அவசியமின்மையையும் இந்த தேர்வு முடிவுகள் காட்டுகிறது. 

சாம்பவி  புறத்தில் மட்டுமல்லாது அகத்திலும் அத்தையின் சாயலை கொண்டிருப்பவள். அவள் ஈடுபட்டிருக்கும் அனைத்திலும் அத்தையை கொண்டுதானே இருப்பாள்? 

தெய்வமதி ஸ்ரீ சாம்பவிக்கு  அன்பும் ஆசிகளும்!

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑