வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.

எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.

பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது
sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட் šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.
57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.

நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !

Cleome monophylla-PC Dr. Sowmiya
நன்றிகள் மேடம்.
ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு வரலாறு, ஒரு மானுடவியல் பின்புலம், ஒரு பொருளாதார தேவை, ஒரு மருத்துவ மற்றும் உணவு சார்ந்த பயன்பாடு, அதனுடன் மற்ற உயிரினங்களின் தொடர்பு…. என பின்னிப்பிணைந்து இருக்கும் இந்த பெரும்வலைப்பின்னல்….
இந்த பேரழகின் ரகசியம் தான் என்ன?
நன்றிகள் மேடம்.
ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு வரலாறு, ஒரு மானுடவியல் பின்புலம், ஒரு பொருளாதார தேவை, ஒரு மருத்துவ மற்றும் உணவு சார்ந்த பயன்பாடு, அதனுடன் மற்ற உயிரினங்களின் தொடர்பு…. என பின்னிப்பிணைந்து இருக்கும் இந்த பெரும்வலைப்பின்னல்…. !
இந்த பேரழகின் ரகசியம் தான் என்ன?
Very nice information thank you
Saw ‘caliente..mx’ mentioned somewhere, but the double dots are throwing me off, is it a typo? What exactly do they offer that differentiates them from the rest? caliente..mx
Think you’re talking about MNL63 Casino lol. Anyway, gave it a shot. Website works seamlessly on my phone and PC. Gameplay is standard, nothing bad to note… Give it a try if you are curious: ml63 casino
Had no problems with 80jili com login. Super straightforward. Let’s see if I can win something tonight! You should take a look: 80jili com login
Solid platform with some really unique features. It feels secure and the bonuses are actually fair compared to other sites. Give inbg678 a try
Finally a version that works perfectly for us here. No more lag or login issues, just pure entertainment. Big thanks to mostbetloginnepal
The community here is great and the rewards keep me coming back every single day. It is more than just a game. Join in6club