லோகமாதேவியின் பதிவுகள்

1492

கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் 1492-ல் ஸ்பேனிஷ் அரசின் நிதி உதவியுடன் சாண்டா மரியா, நீனா, பிண்டோ என்னும் மூன்று கப்பல்களில் மசாலாப்பொருட்களின் வர்த்தகத்துக்காக ஆசியாவுக்கான கடற்பாதையை கண்டுபிடிக்கும் பயணத்தை துவங்கினார். அந்த பயணத்துக்கு தங்கம், அடிமை வர்த்தகம், புதிய தாவரங்கள், புதிய நிலப்பரப்புக்களை கண்டுபிடித்து ஸ்பேனிஷ் அரசுக்கு சொந்தமாக்குவது,கிறுஸ்துவமதத்தை பரப்புவது என பல நோக்கங்கள் இருந்தன.

ஆனால் அந்தப்பயணத்தில் அவர் திசையறிதல் மற்றும் பூமியின் சுற்றளவைக் கணக்கிடுவதில் பல பிழைகள் செய்தார். நிலப்பரப்புக்களைக் கண்டறிவதிலும் பெயரிடுவதிலும் பிழைகள் செய்தார். கரீபியன்தீவுகளை இந்தியா என்று நினைத்து அங்கிருந்த பழங்குடியினர்களை இந்தியர்கள் என குறிப்பிட்டு ஆவணப்படுதினார்.

அரபு மைல்களுக்கும் இத்தாலிய மைல்களுக்குமான வேறுபாட்டையும் அவர் பிழையாகவே புரிந்துகொண்டார் . பசிஃபிக்பெருங்கடல் என்ற ஒன்று இருப்பதையும், அமெரிக்காவையும் அவர் அறியவில்லை கள்ளிக்கற்றாழையான அகாவேவை சோற்றுக்கற்றாழையான ஆலோ என்று ஆவணப்படுத்தினார். மிளகாய்களை குருமிளகென்று கருதினார்.சாதாரண மரப்பட்டையை உரித்து லவங்கப்பட்டை என ஸ்பானிஷ் அரசி இஸபெல்லாவுக்கு அனுப்பினார். இப்படி பல பிழைகள், இனப்படுகொலைகள் கொலம்பஸினால் நிகழ்ந்தன. அவரது பிழையான தாவரக்கண்டுபிடிப்புக்களை பிரதானமாகக் குறிப்பிட்டு அந்தப்பயணத்தை ஒரு தொடராக எழுதுகிறேன். நாளை முதல் அத்தியாயம் வெளியாகிறது.

4 Comments

  1. Dhanasekar R

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  2. நந்தகுமார்

    மகிழ்ச்சி அதே போன்று இந்திய தாவரவியல் நிபுணர் ஜானகி அம்மாள் அவர்களை பற்றி விரிவான கட்டுரையை தாங்கள் எழுத வேண்டும்.
    நன்றி

  3. Mohan

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  4. Mohan

    உங்களுடைய கட்டுரையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑