வெகுநாட்களுக்குப்பிறகு இன்று தியேட்டரில் கருப்பு பார்த்தோம் . மூக்குத்தி அம்மனின் மேல் வர்ஷன் தான் கருப்பு. கோவை பொள்ளாச்சி ஈரோடு என்று கொங்குப் பிரதேசத்தாட்களுக்கு கருப்பு பரிச்சயமானவர் என்பதால் அரங்கில் கொந்தளிப்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால் சென்னைக்காரர்களுக்கெல்லாம் கருப்பன் மிகப்புதியவன்.

அங்கே ஒவ்வொரு ஷோவிலும் ஆணும் பெண்ணுமாகச் சாமிஆடுகிறார்களாம். அம்மனுக்கு பதிலாக அய்யன் என்பதால் ஆண்களுக்கும் சாமி வருகிறது போல.

சூர்யா பொருத்தமாகத்தான் இருக்கிறார் என்றாலும் அவரைக்காட்டிலும் கருப்பனாகக் கார்த்தி பொருத்தமாக இருந்திருப்பார்.

கருப்பு சுருட்டுபிடிக்கையில் எல்லாம் ’’புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்’’ என்று கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் statutory warning போடுவதையெல்லாம் கருப்பன் எப்படி அனுமதித்தான் என்று தெரியவில்லை.

கருப்பன்ங்க!!! சுருட்டு பிடிக்காம எப்படி?

இரண்டாம் பாதியில் கதையைக்குறித்து நிறையக்கேள்விகள் இருக்கின்றன என்றாலும் ஆர் ஜே பாலாஜியிடம் அவர் கேசப்பராமரிப்புக்கு என்ன செய்கிறர் என்று முதலில் கேட்கவேண்டும்.