நெட்டிலிங்க மரங்கள் வரிசையாக நிற்கும் விளையாட்டு மைதானத்திற்குச்செல்லும் பாதையிலிருந்தேன். என்னை இரு மாணவிகள் கடந்துசென்றார்கள்.

ஒருத்தி கொங்குகுலச்செல்வி. அவள் பாஷை அத்தனை அழகு. அவள் மற்றவளிடம்’’’ ஏண்டி அவன் எதுக்குடி உன் கையைத் தட்டறான்? நீ பேசாம வர? நானாயிருந்தா வெடுக் வெடுக்குனு நல்லா கேட்டிருப்பேன், ஆளையும் பாரு அவனையும் பாரு’’ என்றவள். ’’கிறுக்காடி உனக்கு என்கிட்டெ அவன் கையை தட்டிட்டான்னு ரிப்போர்ட் பண்ணிட்டு இப்போ சிரிக்கறே லூஸு’’ என்றாள்.

பதிலே சொல்லாத அந்த மற்றவளின் முகம் மட்டுமல்ல உடலே புன்னகையாலானதாகி, கன்னமேடுகள் சிவக்க தோழியின் கைபற்றிக்கொண்டு என்னை கடந்தாள்.