லோகமாதேவியின் பதிவுகள்

மன்மத ஏசு!!!!

ஆண்டவரே!

உங்கள் மீதான பக்திப்பாடல்களில் கானா வடிவப்பாடல்கள் பல வருடங்களாகவே புழக்கத்தில் இருக்கின்றன. அம்மாடி ,இதுதான் காதலா மெட்டில்

``மாதாவை வணங்கிட வாருங்க அஹ அஹ ஹ அஹஹா!

செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்ணொருத்தி மெட்டில் ``ஏத்திவச்ச மெழுவத்தி எரியுதம்மா வூட்டைசுத்தி

இந்தப்பாடல்களையெல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது என்று நம்புகிறேன் .

இந்த கிருஸ்துமஸ் காலத்தில், சமீபத்தில் பிரபலமான காந்தா ஞானும் வரான் திருச்சூரு பூரம் காணாம் பாடலை சாந்தா, ஞானும் வராம் திருச்சூரு கரோல் காணாம் “என்று மாற்றி மெட்டமைத்ததும் கூட நன்றாகத்தான் இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்

ஆனாலும் மன்மத ராசா மெட்டில் மன்மத ஏசு மன்மத ஏசு'' கொஞ்சம் வரம்பு மீறிவிட்டதுதானே ? இதையெல்லாம் கொஞ்சம் தட்டிக்கேட்கக்கூடதா?

பிதாவே இந்தப்பாவிகளை மன்னிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

1 Comment

  1. செல்வக்குமார்

    எதிர்காலத்தில் தொழில்நுட்பம் அடி முட்டாள்களின் கையில் இருக்கும் என்று ஐன்ஸ்டீன் கூறினார்.

    இப்போது கடவுளும் அவர்கள் கையில்!

    மகான்களுக்கு மன்மதராசா பாடலா? …. Encounter தான் வழி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑