லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 1 of 17)

 லஜ்ஜாவதி என்கிற மைமோசா பூடிகா என்கிற தொட்டால் வாடி!

இன்று ஜெ தளத்தில் மகத்தான நடிப்பு என்னும் பதிவில் தொட்டால் சிணுங்கி என்கிற தொட்டாற்சுருங்கியான, தொட்டல்வாடியாகிய மைமோசா பூடிகாவைப்பற்றி எழுதி இருந்தார். நமஸ்காரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு

நான் அதிகம் அதிசயிக்கும் மகா புத்திசாலித்தாவரங்களில் மைமோஸாவும் ஒன்று.   புறத்தூண்டல்களுக்கு உடனே இலைகளைச் சுருக்கி எதிர்வினையாற்றும் (thigmonasty)  அதன் புத்திசாலித்தனத்தை விட தொடர்ந்து அளிக்கப்படும் பாதகமேதுமில்லாத புறத்தூண்டல்களைப் புரிந்துகொண்டு இலைகளைச்சுருக்காமலிருக்கும் அதன் நினைவாற்றலை நான் எல்லா வகுப்புகளிலும் சொல்லிச்சொல்லி மாய்வேன்.

நித்யவனம் முதல் தாவரவகுப்பு மாணவி ராஜி அங்கேயே இதை நிரூபித்துக்காட்டினாள்.

தொட்டால் சிணுங்கியின் அறிவியல் பெயர் Mimosa pudica. இதில் லத்தீனச்சொல்லிலான பேரினப்பெயர் mimosa என்பதற்கு mime, acting நடிப்பு/  “போலச் செய்தல்” என்று பொருள். விலங்குகளைப் போல இந்தத் தாவரம் தொடுதலுக்கு எதிர்வினை ஆற்றுவதால் இப்பெயர் பெற்றது.-osa என்றால் resembling என்று பொருள்.

ஜெ தலைப்பாக மகா நடிப்பு என்று கொடுத்திருந்தது பெரும் வியப்புண்டாக்கியது, எத்தனை பொருத்தம்.

Pudica என்னும் சிற்றினப்பெயருக்கு லத்தீன் மொழியில்  “வெட்கப்படுபவள்” / “கூச்சப்படுபவள்” (to feel shame/ Bashful/Shrinking) என்று பொருள்.

  என் பித்துக்களிலொன்று இந்த தாவரவியல் பெயர்களின் வேரைத்தேடி வெகுதூரம் செல்வது. அப்படி மைமோஸா பூடிகாவின் பின்னே பலநாட்கள் சென்றிருக்கிறேன். 17-ம் நூற்றாண்டில்தான் லின்னேயஸால் மைமோஸா பெயரிடப்பட்டது.அதன் சுருங்கும் இலைகளைக்கொண்டு விலங்குகளைபோல நடிக்கிறது என்னும் பொருளில் அந்தப்பேரினப் பெயரிடப்பட்டது.

ஸ்பேனிஷ் மொழியில் இதே மிமோஸா பிரியமான -affectionate என்று பொருள் படுகிறது,மேலும் செவ்வியல் லத்தீன மொழியில் இதற்கு Modest, bashful,  shy , Chaste, virtuous,  pure என்றெல்லாம் பொருள் உண்டு

லத்தீனச்சொல்லான pudere,  என்பதற்கு  வெட்கபப்ட வேண்டிய என்று பொருள் அதுதான் இதன்வேர்ச்சொல்லும் கூட.  இத்தோடு icus என்னும் பின்னொட்டைச்சேர்த்து  pudicus  என்னும் ஆண் பால்பெயரும் (masculine), pudica  என்னும் பெண்பால் பெயரும் (feminine), pudicum  (neuter), என்னும் பால் பேதமற்ற பெயரும் உருவாக்கப்பட்டது. தாவர அறிவியல் பெயர்களில் இப்படி பாலினம் இருப்பதை நாம் அறிவோம்.

 இந்த பூடிகா என்னும் பெயருக்கான வேர் மிகச்சுவாரஸ்யமானது. லத்தீனச்சொல்லான pudenda  வெட்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்லது பகுதிகள் என்று பொருள் தருகிறது.  மருத்துவ மொழியில் இடுப்புப் பகுதியிலிருந்து ஜனன உறுப்புகளுக்கு (to and fro) உணர்வுகளைக் கடத்தும் நரம்புக்கு   pudendal nerve என்று பெயர். மகப்பேறு சமயத்தில்  செய்யப்படும் regional anesthesia procedure க்கு  pudendal block என்றுதான் பெயர். பின்னர் நவீன மருத்துவத்துறை உருவான பிறகு international anatomical nomenclature committee  போன்ற அமைப்புகள்  மனித ஜனன உறுப்புக்கள் மறைக்கப்பட வேண்டியவை, வெட்கத்துக்குரியவை எனும் புரிதலைத் தரும் இந்தச்சொல்லை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க பரிந்துரைத்தது. 

(சங்குப்புஷ்பத்தின் அறிவியல் பெயரான Clitoria ternatea அப்பட்டமாக பெண் ஜனன உறுப்பைக் குறிக்கிறது என்று அந்தப்பெயர் வைக்கப்பட்ட காலத்திலெழுந்த எதிர்ப்பைக்குறித்து முன்பு நான் எழுதி இருக்கிறேன்)

பிற்பாடு இதே சொல் மாடஸ்டி, ஹைடிங் என்னும் பொருளில் புழங்கி பின்னர் இறுதியாக வெட்குதலுக்கு வந்து சேர்ந்தது. எனவே தாவரவியல் இருபெயரீட்டு முறை வந்தபோது தொடுதலுக்கு தன் இலைகளை மூடிக்கொள்ளும் இதற்கு பூடிகா என்று லின்னேயஸால் பெயரிடபட்டது

இந்த இலைகள் மூடிக்கொள்வதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலையும் பார்த்துவிடலாம்

இதன் இலைகள் சுருங்குவதற்குப் பின்னால் ஒரு வியக்கத்தக்க உடலியல்  மற்றும் மின்-வேதியியல் செயல்பாடு உள்ளது.   தொட்டால் சிணுங்கிச்செடியின் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் பல்வைனஸ்  எனப்படும் மெல்லிய செல்கள் உள்ளன. இவை நீரைத் தங்களுக்குள் நிரப்பி, நல்ல அழுத்தத்துடன்  இலைகளை நிமிர்த்தி விறைப்பாக வைத்திருக்கும். நாம் இலையைத் தொட்டவுடன், ஒரு மின் வேதியியல் சமிக்ஞை இலைக்காம்பின் அடிப்பகுதிக்கு வேகமாகப் பாய்கிறது.

இந்த சமிக்ஞை கிடைத்தவுடன், பல்வைனஸ் செல்களில் உள்ள பொட்டாசியம் அயனிகளும் (K⁺), குளோரைடு அயனிகளும் (Cl⁻) திடீரென செல்களுக்கு வெளியே  தள்ளப்படுகின்றன. இதனால், செல்களுக்குள் இருந்த நீர் மூலக்கூறுகள் ஆஸ்மாசிஸினால் திசுக்களை விட்டு வெளியேறுகின்றன.

நீர் வெளியேறியவுடன் செல்கள் தங்களின் உள்அழுத்தத்தை இழந்து சட்டெனச் சுருங்குகின்றன. இதனால் இலைகள் அப்படியே வாடி கீழே தொங்கிவிடுகின்றன. மீண்டும் நீர் உள்ளே சென்று இலைகள் நிமிர 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். அவ்வளவுதான்.

இந்தத் தாவரம் தன் ஆற்றலை ஏராளமாகச் செலவழித்து ஏன் இப்படிச் சுருங்க வேண்டும் என்பதற்குப் பரிணாம ரீதியாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:

 தாவரங்களை உண்ணும் பூச்சிகளோ அல்லது விலங்குகளோ தொடும்போது, தாவரம் சட்டெனச் சுருங்கி வாடிப் போவது போலக் காட்சியளிக்கும். இதனால் “இது காய்ந்த, உண்ணத் தகுதியற்ற தாவரம்” என நினைத்து விலங்குகள்  சென்றுவிடும்.  

 இலையின் மீது அமரும் சிறிய தீமை விளைவிக்கும் பூச்சிகளை, இலைகள் சட்டென மூடுவதன் மூலம் கீழே உதிர்த்துத் தள்ள இது உதவுகிறது.

தாவர அறிவியல் வரலாற்றில்  ராபர்ட் ஹூக்  போன்ற தொடக்கக்கால அறிவியல் அறிஞர்கள் தாவரங்களுக்கும் விலங்குகளைப் போல நரம்பு மண்டலம் இருக்கிறதா என்று ஆராயத் தூண்டுகோலாக இருந்ததே இந்த ‘பூடிகா’  தான். 

தன் மார்பகங்களையும் ஜனன உறுப்பையும் கைகளால் மூடிக்கொண்டிருகும் வீனஸ் தேவதையின் சிலையின் அந்தக்குறிப்பிட்ட போஸுக்கு வீனஸ் பூடிகா என்றுதான் பெயர்.

காலையில் மகா நடிப்பு வாசித்ததிலிருந்து மனம் இந்த வேர்ச்சொற்களின் பின்னால் சென்று விட்டது. 

அதழ் அகராதி G

1.      Gabonensis – of or from Gabon, Africa – காபோன் (ஆப்பிரிக்கா) பகுதியைச் சார்ந்த.

2.      Gaertneri – named for Joseph Gaertner, 18th-century German botanist – ஜோசப் கெர்ட்னர் நினைவாக.

Gaertner was a German botanist who essentially founded the field of Carpology (the study of fruits and seeds). His magnum opus, De Fructibus et Seminibus Plantarum (1788–1792), was a revolutionary shift in botanical science.The Carpological Shift: Before him, most botanists focused on flowers. Gaertner argued that the fruit and seed provided more stable, fundamental clues to a plant’s true identity and evolutionary relationships.Microscopic Precision: He was one of the first to use a microscope systematically to describe the internal anatomy of seeds, identifying the embryo, endosperm, and cotyledons with incredible accuracy

3.      Gagea / Gageana – named for Sir Thomas Gage, 19th-century Irish botanist – தாமஸ் கேஜ் நினைவாக.

Sir Thomas Gage was a quiet, meticulous  botanist who lived for the study of the overlooked—specifically lichens and rare flora.Gage was not just a collector; he was a pioneer of Lichenology. At a time when many viewed lichens as mere “crust” on rocks, Gage recognized them as complex, structured biological systems.Lichen Geometry:  Gage’s work on crustose lichens (which form intricate, mosaic-like patterns on stone) is a direct historical link to natural structural models.Gage’s Herbarium: He maintained one of the most comprehensive private herbaria in England, documenting species that were being lost to early industrialization.

4.      Gagnepainii – named for Francois R. Gagnepain, French botanist – காக்னெபெய்ன் நினைவாக.

François Raymond Gagnepain (1866–1952) was a prolific French botanist whose work is foundational for anyone studying the flora of Southeast Asia and East Asia.He is best known for his monumental work on the flora of former French Indochina (modern-day Vietnam, Laos, and Cambodia). He was a key author and editor of the Flore Générale de l’Indo-Chine, a massive multi-volume series that remained the primary reference for the region for decades.

5.      Gaguedi – from the vernacular Tigrana (Ethiopian) name for this protea – எத்தியோப்பிய நாட்டுப்புறப் பெயர்.

6.      Gahnia – named for Dr. Henricus Gahn, Swedish student of Linnaeus – ஹென்ரிகஸ் கான் நினைவாக.

Dr. Henricus (Henrik) Gahn (1747–1816) was a distinguished Swedish physician and botanist who moved in the most elite scientific circles of the 18th century. He is a fascinating link between the “Age of Linnaeus” and the development of modern medical and botanical practices.Gahn was a student of the famous Carl Linnaeus at Uppsala University. He was part of the generation of “Linnaean apostles” and students who expanded on the binomial nomenclature system.His brother, Johan Gottlieb Gahn, was a world-renowned chemist who discovered the element manganese.

7.      Gaillardia – named for M. Gaillard de Marentoneau, French patron of botany – கெய்லார்ட் நினைவாக.

8.      Gairdneri – named for Dr. Meredith Gairdner, Scottish naturalist – மெரிடித் கெய்ர்ட்னர் நினைவாக.

9.      Galacifolia / Galacifolium / Galacifolius – having leaves resembling the genus Galax – கேலக்ஸ் தாவர இலை போன்ற.

10.  Galactia – from Greek gala (milk), referring to milky sap – பால் போன்ற சாறுகொண்ட பேரினம்.

11.  Galactina / Galactinum / Galactinus – milky in appearance or nature – பால் போன்ற.

12.  Galactites – referring to milky-white leaf veins – பால்போன்ற வெண்ணிற இலை நரம்புகள் கொண்ட.

13.  Galanga – from Arabic khulendjan; mild ginger – சித்தரத்தை போன்ற இஞ்சி வகை.

14.  Galanthus – from Greek gala (milk) and anthos (flower); “Snowdrop” – பால் போன்ற வெண்ணிற மலர் (பனிச்சொட்டு மலர்).

15.  Galapageium – of or from the Galápagos Islands – கலாபகஸ் தீவுகளைச் சார்ந்த.

16.  Galax – from Greek gala (milk), referring to white flowers – பால்போன்ற தாவரப் பேரினம்.

17.  Galbana – from Latin galbanum, a gum resin – தாவரப்பிசின் போன்ற.

18.  Galbraithiae / Galbraithiana – named for Jean Galbraith, Australian botanist – ஜீன் கல்பிரைத் நினைவாக.

19.  Galbulus – a modified cone where the scales are enlarged or fleshy – உருண்டையான தடித்த கனி.

20.  Gale – from the Old English name Gagel; helmet-shaped or a small shrub – தலைக்கவச வடிவம் அல்லது சிறு புதர்.

21.  Galeandra – helmet-shaped cap over the stamen – தலைக்கவசம்போன்ற மகரந்தப்பை மூடி.

22.  Galearis – helmet-like appearance of the flower – தலைக்கவசம்போன்ற மலர்.

23.  Galeata / Galeatum / Galeatus – helmet-shaped – தலைக்கவச வடிவமுடைய.

24.  Galega – from Greek gala (milk); stimulator of milk production – பால் உற்பத்தியைத் தூண்டும் தாவரம்.

25.  Galegifolia / Galegifolium / Galegifolius – leaves resembling the genus Galega – காலேகா தாவர இலை போன்ற.

26.  Galenia – possibly named for the Greek physician Galen – மருத்துவர் காலன் நினைவாக.

Aelius Galenus (often known as Galen of Pergamon, 129–c. 216 AD) is perhaps the most influential figure in the history of medicine, whose ideas dominated the Western world for over 1,500 years. Galen is a complex figure: he is both a titan of science and a primary reason why medical progress “stalled” for centuries.In Galen’s era, a physician was by necessity a botanist. He refined the “Hippocratic” system, but his true contribution was his focus on Pharmacognosy (the study of medicines derived from natural sources).

27.  Galeobdolon – smells like a weasel – கீரிபோன்ற மணம் கொண்ட.

28.  Galeopsis – resembling a weasel – கீரிபோன்ற தோற்றமுடைய பேரினம்.

29.  Galeottiana / Galeottii – named for Henri Galeotti, French botanist – ஹென்றி காலியோட்டி நினைவாக.

Henri Guillaume Galeotti (1814–1858) is a quintessential figure for your research on the global distribution of plants and the intersection of botany and engineering.He is credited with introducing a vast number of Mexican succulents and cacti to Europe. His collections fueled the “cactomania” that gripped European botanical gardens in the mid-19th century.  He described hundreds of new orchid species. His work in the high-altitude cloud forests of Mexico provided the first scientific look at these complex ecosystems.He was one of the first to study how soil composition and rock formations (geology) dictated the “branching architecture” and survival of specific plant groups.

30.  Galericulata / Galericulatum / Galericulatus – small cap or hat-shaped – சிறிய தொப்பி போன்ற அமைப்பு.

31.  Galiaceae – a synonym for the family Rubiaceae – காஸியம் தாவரக்குடும்பம்.

32.  Galinsoga – named for Mariano Martinez Galinsoga, Spanish physician – கலிசோகா நினைவாக.

33.  Galioides – resembling Galium (bedstraw) – கேலியம் தாவரத்தை ஒத்த

34.  Galium – from Greek gala (milk); used to curdle milk – பாலை உறைய வைக்கும் தாவரம்.

35.  Gallica / Gallicum / Gallicus – of or from France (Gaul) – பிரான்சு நாட்டைச் சார்ந்த.

36.  Gallinopes – shaped like a chicken foot – கோழியின் கால் போன்ற வடிவம்.

37.  Galphimia – anagram of Malpighia – மால்பிஜியா தொடர்புடைய பேரினம்.

38.  Galpinii – named for Ernest Edward Galpin, South African botanist – கால்பின் நினைவாக.

39.  Galtonia – named for Sir Francis Galton, British explorer – சர் பிரான்சிஸ் கால்டன் நினைவாக.

40.  Galvestonensis – of or from Galveston, Texas – கால்வெஸ்டன் பகுதியைச் சார்ந்த.

41.  Galvezia – named for Jose Galvez, Spanish administrator – ஜோஸ் கால்வெஸ் நினைவாக.

42.  Gambelii – named for William Gambel, American naturalist – வில்லியம் கேம்பெல் நினைவாக.

43.  Gamblei – named for James Sykes Gamble, English botanist – ஜேம்ஸ் சைக்ஸ் கேம்பிள் நினைவாக.

44.  Gamete – a reproductive cell (egg or sperm) – இனச்செல்.

45.  Gametophyte – the haploid, gamete-producing phase of a plant – இனச்செல் தாவரகம்.

FeatureGametophyteSporophyte
Ploidy LevelHaploid ($n$): Contains one set of chromosomes.Diploid ($2n$): Contains two sets of chromosomes.
ProductProduces Gametes (sperm/eggs) via mitosis.Produces Spores via meiosis.
OriginGrows from a germinating spore.Grows from a fertilized zygote.
Structural RoleThe “sexual” phase.The “asexual” phase.

46.  Gamochaeta – bristles united at the base – அடிப்பகுதியில் இணைந்த தூவிகள்.

47.  Gamolepis – referring to united bracts – இணைந்த பூவடிச் செதில்கள்.

48.  Gamopetalous – a corolla with united or fused petals – இணைந்த அல்லியிதழ்கள்.

49.  Gamophylla / Gamophyllum / Gamophyllus – fused or joined leaves – இணைந்த இலைகள்.

50.  Gamosepala / Gamosepalum / Gamosepalus – united or fused sepals – இணைந்த புல்லியிதழ்கள்.

51.  Gandavense / Gandavensis – of or from Ghent, Belgium – பெல்ஜியம் பகுதியைச் சார்ந்த.

52.  Ganderi – named for Frank Forrest Gander, American botanist – பிராங்க் கேண்டர் நினைவாக.

Frank Forrest Gander (1899–1976)  was a polymath who bridged the gap between zoology and botany in a way that few scientists do today.Gander was a pioneer in nature education. He was a key leader in the “Junior Naturalist” programs, dedicated to teaching children how to record and identify plants in the field.

53.  Gandogeri – named for Abbot Michel Gandoger, French botanist – மிஷெல் காண்டோஜர் நினைவாக.

54.  Gangetica / Gangeticum / Gangeticus – of or from the Ganges River (India) – கங்கை நதி பகுதியைச் சார்ந்த.

55.  Garberi / Garberia / Garberiana – named for Dr. Abram Paschal Garber, American botanist – ஆப்ராம் கார்ஃபர் நினைவாக.

56.  Garcinia – named for Laurent Garcin, French botanist – கார்சினியா நினைவாக.

57.  Gardenia – named for Alexander Garden, physician and botanist – கார்டன் நினைவாக.

58.  Gardenii – specifically named in honor of Dr. Alexander Garden – கார்டன் சார்ந்த.

59.  Gardneriana / Gardnerianum / Gardnerianus / Gardnerii – named for Hon. Edward Gardner – எட்வர்ட் கார்ட்னர் நினைவாக

60.  Garganica / Garganicum / Garganicus – of or from Mt. Gargano (Italy) – இத்தாலி பகுதியைச் சார்ந்த.

61.  Garibina – from Khoi name Gariep (large) – பெரிய என்ற பொருள்படும் பெயர்.

62.  Gariepensis – of or from the Gariep River, South Africa – தென்னாப்பிரிக்கா பகுதியைச் சார்ந்த.

63.  Garnotia – named for Prosper Garnot, French naturalist – கார்னோ நினைவாக.

64.  Garrettia / Garrettiana / Garrettianum / Garrettianus – named for H.B. Garrett, British botanist – காரெட் நினைவாக.

65.  Garryaceae / Garrya – named for Nicholas Garry; a natural order of dicotyledons – காரியா தாவரக்குடும்பம்.

66.  Gasteria – from Greek gaster (stomach), referring to the swollen base – வயிற்று வடிவம் கொண்ட கற்றாழை.

67.  Gasteromycetes – fungi where spores are produced inside the fruiting body – அக வித்துரு பூஞ்சைகள்.

68.  Gaya – named for Claudio Gay, 19th-century French botanist – கிளாடியோ கே நினைவாக.

69.  Gelatinous – having the consistency of jelly – கூழ்மமான (கூழ்மப் போன்ற).

70.  Geminate – occurring in pairs; twins – இரட்டையான.

71.  Gemma – a small mass of vegetative tissue for asexual reproduction; a bud – முகுளம் / அரும்பு (அரும்புகள் / மொட்டுகள்).

72.  Gemmation – the arrangement or expansion of buds; the process of budding – மொட்டு விரிதல் (மொட்டு விடுதல்).

73.  Gemmule – a small bud or reproductive corpuscle – நுண்முகுளம்.

74.  Gene – the basic unit of heredity – மரபணு.

75.  General – investiture of parts at the base of an umbel – பொதுவான.

76.  Geniculata / Geniculatum / Geniculatus – bent abruptly like a knee joint – முட்டி போன்ற வளைவு (முழங்கால் போன்ற வளைவுடைய).

77.  Geniculum – a node or joint of a stem – தண்டுக்கணு.

78.  Genista – the Broom genus – ஜெனிஸ்டா புதர் வகை.

79.  Genotype – the genetic makeup of an organism – மரபணுவகை.

FeatureGenotypePhenotype
Simple DefinitionThe internal genetic code (the “instructions”).The external physical expression (the “result”).
CompositionThe specific alleles (e.g., $AA$, $Aa$, $aa$) inherited from parents.The observable traits (height, leaf shape, flower color).
VisibilityInvisible to the naked eye (requires DNA sequencing).Visible and measurable in the field.
ChangeabilityRemains constant throughout the plant’s life.Can change due to environmental factors (Plasticity).

80.  Gens – a taxonomic synonym for a tribe – இனக்குழு.

81.  Gentianaceae / Gentiana – the Gentian family – ஜென்சியானேசி குடும்பம்.

82.  Genus – a taxonomic rank between family and species – பேரினம்.

83.  Geoblastus – embryo with underground cotyledons – தரைக்கீழ் முளைத்தல்.

84.  Geocarpy / Geocarpus – fruit produced or ripening underground (e.g., Peanut) – நிலக்கனி விளைதல் (நிலத்தினடியில் கனியும்).

85.  Geonasty – nastic movement in response to gravity – புவிசார் வளைவு.

86.  Geophilous – plants with underground fruiting organs – தரைக்கீழ் வாழும் உறுப்புகள் கொண்ட தாவரம்.

87.  Geophyte – a plant that survives via underground buds – தரைக்கீழ் மொட்டுத் தாவரம்.

88.  Geotactic – response of a whole organism to gravity – புவிசார் நகர்வு.

89.  Geotropism / Geotropic – growth or turning in response to gravity – புவிநாட்டம் (புவி நாட்டமுடைய).

90.  Geraniaceae / Geranium – the Geranium family; from Greek geranos (crane) – ஜெரானியேசி குடும்பம்.

91.  Germ pore – a hole in pollen for the pollen tube – முளைப்புத் துளை.

92.  Germen – a synonym for the ovary – சூலகம்.

93.  Germination – the beginning of seed growth; development into a plant – முளைத்தல்.

94.  Gesneraceae – a natural order of dicotyledons – ஜெஸ்னேரேசி குடும்பம்.

95.  Gibba / Gibbosa / Gibbous – swollen on one side – ஒருபக்க வீக்கம் (ஒரு பக்கம் வீங்கிய).

96.  Gigantea / Giganteum / Giganteus / Gigantic – very large; exceeding relative dimensions – பிரம்மாண்டமான (மிகப் பெரிய).

97.  Gilliesiaceae – a small order of monocots – ஜிலீசியேசி குடும்பம்.

98.  Gills – vertical plates under a mushroom cap – காளானின் வித்துத் தட்டுகள்.

99.  Gilvus – dirty yellow color – அழுக்கு மஞ்சள் நிறம்.

100.                   Githagineus – greenish-red color – பசுமைகலந்த சிவப்பு.

101.                   Glabra / Glabrate / Glabrous – smooth; without hairs – மென்மையான பரப்பு (ரோமங்களற்ற வழவழப்பான).

102.                   Glacialis – from icy regions – பனிப்பிரதேசத்தைச் சார்ந்த.

103.                   Gladiata / Gladiate / Gladiolus – sword-shaped leaves – வாள் வடிவம் (வாள் வடிவ இலைகள்).

104.                   Gland / Glandular / Glandulosa – a secreting organ; provided with glands – சுரப்பி (சுரப்பிகள் உடைய).

105.                   Glandaceus – reddish-brown mixed with yellow – செம்பழுப்பு நிறம்.

106.                   Glans – a dry, one-seeded fruit in a cup – அகரணிக்கனி.

107.                   Glauca / Glaucous – whitish-blue waxy coating; blue-green with a waxy bloom – சாம்பல்கலந்த நீலநிறப் பூச்சு (நீலப்பச்சை மெழுகுப் பூச்சு).

108.                   Gleicheniaceae – a family of ferns – கிளிகேனியேசி பெரணி குடும்பம்.

109.                   Glittering – surface with non-uniform lustre – மின்னுதல்.

110.                   Globose / Globular / Globulosus – spherical in shape – கோள வடிவம்.

111.                   Globulariaceae – a natural order containing Globularia – குளோபுலேரியேசி குடும்பம்.

112.                   Globule – spherical reproductive organ in Characeae – சிறுகோளம்.

113.                   Globuline – transparent granules in tissue – நுண் உருண்டை புரதம்.

114.                   Globulus – a small globule or shield – சிறு உருண்டை.

115.                   Glochis / Glochideous – barbed point or bristles – முள் போன்ற தூவி.

116.                   Glomeratus – collected into a close head – திரளான.

117.                   Glomerulis – a small head or soredium – சிறுதிரள்.

118.                   Glomus – a synonym for a capitulum – மலர்க்கொத்து.

119.                   Glossology – explanation of technical terms – கலைச்சொல்லியல்.

120.                   Glucose – a simple sugar from photosynthesis – குளுக்கோஸ்.

121.                   Glue – viscid plant secretion – தாவரப்பசை.

122.                   Glumaceous – chaffy like grass scales – உமிபோன்ற.

123.                   Glume – outermost husk of a grass spikelet – உமி.

124.                   Glumella – innermost scale in grasses – உள் உமி.

125.                   Gluten – viscid substance in flour – கோதுமைப்புரதம்.

Gluten is not a single protein; it is a composite of two primary groups of storage proteins found in the endosperm of the grass family (Poaceae), specifically in the tribe Triticeae: These provide viscosity (the ability to flow). They are monomeric proteins that act like a lubricant.

126.                   Gnawed – irregularly jagged margin – கடிக்கப்பட்டது போன்ற விளிம்பு.

127.                   Gnetaceae – a natural order of Gymnosperms – நீட்டேசி குடும்பம்.

128.                   Gnomonicus – stalk bent abruptly at a high angle – செங்கோண வளைவு.

129.                   Goblet-shaped – hemispherical and concave – கோப்பை வடிவம்.

130.                   Gongylodes – knob-like in appearance – முடிச்சு போன்ற.

131.                   Gongylus – rounded reproductive corpuscles in algae – பாசி வித்துரு.

132.                   Gonnophorum – elevated receptacle bearing stamens and carpels – வித்துரு தாங்கி.

133.                   Goodeniaceae – a natural order of dicotyledons – குடீனியேசி குடும்பம்.

134.                   Gossypinus / Gossypium – cottony; the Cotton genus – பருத்தி போன்ற (பருத்தி பேரினம்).

135.                   Gottlebei – named for Gunter Gottlebe – காட்லீப் நினைவாக.

136.                   Goudeyi – named for Christopher J. Goudey – கவுடி நினைவாக.

137.                   Goulimyi – named for Dr. C.N. Goulimis – கவுலிமிஸ் நினைவாக.

138.                   Gounellei – named for Pierre-Emile Gounelle – கவுனல் நினைவாக.

139.                   Gourd – fleshy fruit with parietal placentation – சுரைவகைக்கனி.

140.                   Govaniana / Govanianum / Govanii – named for George Govan – ஜார்ஜ் கோவன் நினைவாக.

George Govan (1791–1865) was a Scottish surgeon and botanist whose work laid the foundation for our understanding of the Himalayan flora.Govan was one of the first Western scientists to systematically collect plants from the Sirmur region of the Himalayas.

141.                   Graciflora / Graciliflora / Graciliflorum / Graciliflorus – having graceful, slender flowers – அழகிய மெல்லிய மலர்களுடைய.

142.                   Gracile / Gracilenta / Gracilentum / Gracilentus / Gracilis – slender; thin; graceful – மெலிதான.

143.                   Gracilidelineata – slender or graceful line – மெல்லிய கோடு போன்ற.

144.                   Gracilifolia / Gracilifolius – slender-leaved – மெல்லிய இலைகளுடைய.

145.                   Gracilior / Gracilius – thinner; more graceful – மிகவும் மெலிதான.

146.                   Gracilipes – graceful foot (stalk) – மெல்லிய காம்புடைய.

147.                   Gracilispinus – slender or graceful spines – மெல்லிய முட்களுடைய.

148.                   Gracilistyla / Gracilistylum / Gracilistylus – having a slender, graceful style – மெல்லிய சூல்தண்டுடைய.

149.                   Gracillima / Gracillimum / Gracillimus – most graceful, slender – மிகவும் மென்மையான.

150.                   Graeca / Graecizans / Graecum / Graecus – of or from Greece; Grecian – கிரேக்க நாட்டைச் சார்ந்த.

151.                   Graessneri – named for Richard Graessner – கிரெஸ்னர் நினைவாக.

152.                   Graft – portion of a plant inserted into a stock – ஒட்டுக்கிளை.

153.                   Grahamii – named for Edward Graham – கிரஹாம் நினைவாக.

154.                   Graminaceae / Gramineae / Graminae – former names for the Poaceae (grass) family – புற்கள் குடும்பம் (புல் குடும்பம்).

155.                   Graminea / Gramineum / Gramineus – grass-like – புல் போன்ற.

156.                   Graminicola / Graniferus – bearing grains; grass-dweller – தானியம் தாங்கிய.

157.                   Graminifolia / Graminifolium / Graminifolious – grass-like leaves – புல் போன்ற இலைகளுடைய.

158.                   Grammatocymbidium – intergeneric orchid hybrid – கலப்பின ஆர்க்கிட்.

159.                   Grammatophyllum – from Greek for “grass” and “leaf” – புல் இலை போன்ற பேரினம்.

160.                   Grammicus – marked with lines resembling letters – வரிபோன்ற குறி.

161.                   Grammitis – referring to elongated sori – வரி போன்ற வித்துருக்கள்.

162.                   Granadense / Granadensis / Grenadense / Grenadensis – from Grenada, Central America – கிரெனடா பகுதியைச் சார்ந்த.

163.                   Granadilla / Granadillo – fruits with many seeds – அதிக விதையுடைய கனி.

164.                   Granata / Granatum / Granatus – many seeds – அதிக விதைகளுடைய.

In the botanical world, Granata (derived from the Latin granatum, meaning “seeded”) is a term deeply intertwined with the history of the Pomegranate (Punica granatum).The city of Granada in Spain takes its name and its heraldic symbol from this fruit. It was brought there via the Silk Road and the Moorish missions, representing one of the most successful transcontinental plant distributions in history.In a literal intersection of botany and engineering, the military “grenade” was named after the pomegranate (granata) because the early versions of the weapon were shaped like the fruit and designed to scatter “seeds” (shrapnel) upon impact.

165.                   Grande / Grandis – large; spectacular – பெரிய / பிரம்மாண்டமான.

166.                   Grandialata – large-winged – பெரிய சிறகு போன்ற.

167.                   Grandicapute / Grandicaputis / Grandiceps – large-headed – பெரிய தலை போன்ற.

168.                   Grandicorne / Grandicornis – large-horned – பெரிய கொம்பு போன்ற.

169.                   Grandicostatus – large ribs; large-ribbed – பெரிய நரம்புடைய.

170.                   Grandidens – large tooth – பெரிய பற்களுடைய.

171.                   Grandidentata / Grandidentatum / Grandidentatus – having big teeth – பெரிய பற்களுடைய.

172.                   Grandidieri – named for Alfred Grandidier – கிராண்டிடியர் நினைவாக.

173.                   Grandiflora / Grandiflorum / Grandiflorus – with large flowers – பெரிய மலர்களுடைய.

174.                   Grandifolia / Grandifolium / Grandifolius – large-leaved – பெரிய இலைகளுடைய.

175.                   Grandifoliolata – large leaflets – பெரிய சிற்றிலைகளுடைய.

176.                   Grandilobum – large-lobed – பெரிய மடல் போன்ற.

177.                   Grandiscapa – large-scaped (long flower stalk) – பெரிய பூமலர் தண்டுடைய.

178.                   Granitcum / Granitica / Graniticolus / Graniticolum / Graniticus – growing in granite crevices; granite-dweller – கிரானைட் பாறையில் வளரும்.

179.                   Grantianus / Grantii – named for James Augustus Grant – ஜேம்ஸ் கிராண்ட் நினைவாக.

180.                   Granulata / Granulatum / Granulatus / Granular – grain-like; covered with small grains – குருணையுள்ள முடிச்சுகள் (குருணையுள்ள).

181.                   Granule – a small grain, such as in pollen – நுண்குருணை.

182.                   Granulo-leprosum – grainy-scaly – குருணை செதில்களுடைய.

183.                   Granulosa / Granulosum / Granulosus – grain; granular – குருணையுள்ள.

184.                   Graptopetalum – painted or variegated petals – வண்ண இதழ்களுடைய.

185.                   Graptophyllum – painted or variegated leaves – வண்ண இலைகளுடைய.

186.                   Grata / Gratum / Gratus – pleasant; charming – அழகான.

187.                   Gratiae – grace – மென்மையான.

188.                   Gratianopolitanus – from Grenoble, France – பிரான்ஸ் பகுதியைச் சார்ந்த.

189.                   Gratiola / Gratioloides – pleasant medicinal herbs – மருத்துவ குணமுடைய தாவரம்.

190.                   Gratissima / Gratissimum / Gratissimus – most pleasing – மிகவும் ரம்மியமான.

191.                   Graveolens – heavy-scented; unpleasant smell – கடுமையான மணம் கொண்ட.

192.                   Gravis – heavy; weighty; large – பெரிய அளவுள்ள.

193.                   Greasy – a surface that feels oily – பிசுபிசுப்பான.

194.                   Greatheadii – named for Dr. J.B. Greathead – கிரேட்ஹெட் நினைவாக.

195.                   Greenei / Greenii – named for Edward Greene or Dave Green – கிரீன் நினைவாக.

196.                   Greenovia – named for George Greenough – கிரீனோ நினைவாக.

George Bellas Greenough (1778–1855) is primarily remembered as a geologist, he was a pioneer in stratigraphy and mapping, which provided the structural foundation for how we understand plant distribution and the earth’s natural models. He published a massive, detailed geological map of England and Wales in 1819. While he famously clashed with William Smith (another “crushed” figure of history) over mapping techniques, Greenough’s map was a masterpiece of data visualization and structural layout.

197.                   Greenwayi – named for Dr. Percy Greenway – கிரீன்வே நினைவாக.

198.                   Gregaria / Gregarium / Gregarius – growing in clusters – கூட்டமாக வளரும்.

199.                   Greggiana / Greggii – named for Josiah Gregg – ஜோசையா கிரெக் நினைவாக.

200.                   Gregorii – named for John Walter Gregory or Augustus Charles Gregory – கிரிகோரி நினைவாக.

201.                   Greigia / Greigii / Grieggii – named for Samuel Greig – கிரிக் நினைவாக.

202.                   Grenadina – from Grenada, Caribbean – கிரெனடா பகுதியைச் சார்ந்த.

203.                   Greuteri / Greuteriana – named for Dr. Werner Greuter – கிரூட்டர் நினைவாக.

204.                   Grevillea – named for Charles Francis Greville – கிரெவில்லியா பேரினம்.

205.                   Grewia – named for Nehemiah Grew – க்ரூவியா பேரினம்.

206.                   Grey / Grisea / Griseum / Griseus – gray in color – சாம்பல் நிறமான.

207.                   Greyia – named for Sir George Grey – சர் ஜார்ஜ் கிரே நினைவாக.

208.                   Grias – from the Greek graen (to eat); edible fruit – உண்ணக்கூடிய கனி.

209.                   Grielum – sun-loving – சூரிய ஒளி விரும்பி.

210.                   Griffinia – named for William Griffin – கிரிஃபின் நினைவாக.

211.                   Griffithia / Griffithiana / Griffithianum / Griffithianus / Griffithii – named for Dr. William Griffith – வில்லியம் கிரிஃபித் நினைவாக.

212.                   Griffithsii – named for Dr. David Griffiths – டேவிட் கிரிஃபித்ஸ் நினைவாக.

213.                   Grindelia – named for David Grindel – கிரைண்டல் நினைவாக.

214.                   Griselinia – named for Francesco Griselini – கிரிசெலினி நினைவாக.

215.                   Griseo-argentea – silvery-gray – வெள்ளி சாம்பல் நிறம்.

216.                   Groenewaldii – named for B.H. Groenewald – குரோனிவால்ட் நினைவாக.

217.                   Groenlandica / Groenlandicum – from Greenland – கிரீன்லாந்து பகுதியைச் சார்ந்த.

218.                   Gronophyllum – cave-leaf – குகை இலை பேரினம்.

219.                   Grossedentata / Grossedentatum / Grossedentatus – with large teeth – பெரிய பற்களுடைய.

220.                   Grosseri – named for W.C. Grosser – குரோசர் நினைவாக.

221.                   Grosseserrata / Grosseserratus – large saw-like (serrated) teeth – பெரிய வாள் பற்களுடைய.

222.                   Grossification – swelling in the ovary after fertilization – கருவுற்றபின் சூலகம் வீங்குதல்.

223.                   Grossulaceae / Grossularia – the Currant tribe; gooseberry genus – திராட்சைவகை குடும்பம் (நெல்லிக்காய் பேரினம்).

224.                   Grossulariifolia / Grossulariifolium / Grossulariifolius / Grossulariaefolia – gooseberry-like leaves – நெல்லிக்காய் இலை போன்ற.

225.                   Grossularioides – resembles Grossularia – நெல்லிக்காய் செடியை ஒத்த.

226.                   Grumous / Gruina / Gruinum / Gruinus / Gruinalis – shaped like a crane’s bill; clustered fleshy grains – கொக்கின் அலகு போன்ற வடிவம் (திரளான சதைப்பற்றுள்ள பகுதி)

227.                   Grusonia / Grusonii – named for Hermann Gruson – குரூசன் நினைவாக.

228.                   Grypoceras – hooked horn – வளைந்த கொம்பு போன்ற.

229.                   Guachipensis – from Costa Rica – கோஸ்டாரிகா பகுதியைச் சார்ந்த.

230.                   Guadalajarana / Guadalajaranum / Guadalajaranus – from Guadalajara, Mexico – மெக்சிகோ பகுதியைச் சார்ந்த.

231.                   Guadalupense / Guadalupensis – from Guadalupe Island – குவாடலூப் தீவைச் சார்ந்த.

232.                   Guadua – vernacular bamboo name – மூங்கில் வகை.

In the “engineering” of the natural world, Guadua is the most important genus of bamboo .Known as “Iron Grass” or “Vegetable Steel,” this Neotropical bamboo is a masterpiece of structural architecture and sustainable construction.From a structural perspective, Guadua angustifolia (the most famous species) is a marvel of biomimicry. It has a tensile strength greater than steel and a compressive strength higher than many concretes, yet it is incredibly lightweight.  The nodes (the rings) and internodes (the hollow spaces) act as natural bulkheads. In engineering terms, these nodes prevent the tube from buckling under pressure, allowing it to bend significantly without snapping—a perfect model for earthquake-resistant architecture. Its fibers are concentrated on the outer skin, where the most structural stress occurs. This is the exact principle used in modern hollow-section engineering.

233.                   Guaiacum – Latinized form of South American “guaiac” – குவாயகம் பேரினம்.

234.                   Guajava – Guava – கொய்யா பழம் சார்ந்த.

235.                   Guanabarica – from Rio de Janeiro – பிரேசில் பகுதியைச் சார்ந்த.

236.                   Guanaiensis – from Guana Island – குவானா தீவைச் சார்ந்த.

237.                   Guanchica – Canary Island people – கேனரி தீவு தொடர்பான.

238.                   Guangxiense / Guangxiensis – from Guangxi, China – சீன மாகாணத்தைச் சார்ந்த.

239.                   Guanicense – from British Guiana – கயானா பகுதியைச் சார்ந்த.

240.                   Guapira – from the vernacular name – குவாபிரா பேரினம்.

241.                   Guaranitica / Guaraniticum / Guaraniticus – of the Guarani Indians – குவாரானி பழங்குடி தொடர்பான.

242.                   Guarea – common name for a genus of evergreen trees – குவாரியா பேரினம்.

243.                   Guarianthe – a genus of Central American orchids – ஆர்க்கிட் மலர்.

244.                   Guarume – from Guarume Island, Panama – பனாமா பகுதியைச் சார்ந்த.

245.                   Guatemalense / Guatemalensis – of or from Guatemala – குவாத்தமாலா நாட்டைச் சார்ந்த.

246.                   Guazuma – Latinized form of a Mexican plant name – மெக்சிகோ தாவரப் பெயர்.

247.                   Guelzowiana – named for Robert Gülzow – குல்சோ நினைவாக.

248.                   Guettarda – named for Jean-Étienne Guettard, French naturalist – கெட்டார்ட் நினைவாக.

249.                   Guianense / Guianensis – of or from French Guiana – கயானா பகுதியைச் சார்ந்த.

250.                   Guichenotia – named for Antoine Guichenot, French gardener – கைசெனோட் நினைவாக.

251.                   Guiengola – from Guiengola, Mexico – மெக்சிகோ பகுதியைச் சார்ந்த.

252.                   Guihaia – Latinized form of a Chinese name; a genus of palms – சீனப் பெயர் சார்ந்த பேரினம்.

253.                   Guilfoylei – named for William Robert Guilfoyle, Australian botanist – கில்ஃபாயில் நினைவாக.

254.                   Guillaumetii / Guillauminiana – named for botanists Guillaumet or Guillaumin – கில்லாமின் நினைவாக.

255.                   Guineense / Guineensis – of or from Guinea, West Africa – கினி பகுதியைச் சார்ந்த.

256.                   Guizhouense / Guizhouensis – of or from Guizhou, China – சீன மாகாணத்தைச் சார்ந்த.

257.                   Guizotia – named for Francois Guizot – கிசோட் நினைவாக.

258.                   Gulubia – Latinized form of an Indonesian name; a genus of palms – இந்தோனேசியப் பெயர் சார்ந்த பனை.

259.                   Gumbletonii – named for William Gumbleton, Irish horticulturist – கம்பிள்டன் நினைவாக.

260.                   Gummifer / Gummifera / Gummiferum – gum-bearing; producing resin – பிசின் சுரக்கும்.

261.                   Gundelia – named for Andreas Gundelsheimer, German botanist – குண்டல்ஷைமர் நினைவாக.

262.                   Gunnera – named for Johann Ernst Gunnerus, Norwegian botanist – கன்னரஸ் நினைவாக.

263.                   Gunniana / Gunnii – named for Ronald Campbell Gunn – கன் நினைவாக.

264.                   Gunnisonii – named for Captain John W. Gunnison – கன்னison நினைவாக.

265.                   Gurania – an anagram of the genus name Anguria – அங்குரியா எழுத்து மாற்றப் பெயர்.

266.                   Gustavia – named for King Gustav III of Sweden – மன்னர் குஸ்டாவ் நினைவாக.

267.                   Guthrieae / Guthriei – named for Francis Guthrie – கத்ரி நினைவாக.

268.                   Gutierrezia / Gutierreziana / Gutierrezii – named for the Gutierrez family – குட்டரெஸ் நினைவாக.

269.                   Guttata / Guttatum / Guttatus – spotted or speckled – புள்ளிகளுடைய.

270.                   Guttulatum – with very small spots – சிறு புள்ளிகளுடைய.

271.                   Guzmania – named for Anastasio Guzman, Spanish pharmacist – குஸ்மான் நினைவாக.

272.                   Gymnadenia – from Greek gymnos (naked) and aden (gland) – மூடாச் சுரப்பிகளுடைய.

273.                   Gymnanthera – having bare or “naked” anthers – மூடா மகரந்தப்பை மலர்.

274.                   Gymnanthes – from Greek gymnos (naked) and anthos (flower) – மூடா மலர் பேரினம்.

275.                   Gymnasta / Gymnaster – naked or bare – மூடா அல்லது திறந்த.

276.                   Gymnocalycium – “naked calyx” (referring to flower buds without hair or spines) – மூடா மொட்டுடைய கற்றாழை.

277.                   Gymnocarpium – “naked fruit” (spore cases without a covering) – உறை அற்ற கனி.

278.                   Gymnocephala / Gymnocephalum / Gymnocephalus – having a naked or bare head – திறந்த தலைப்பகுதி உடைய.

279.                   Gymnoclada / Gymnocladum / Gymnocladus – having naked or leafless branches – இலையற்ற கிளைகளுடைய.

280.                   Gymnopoda / Gymnopodum / Gymnopodus – having a naked foot or stalk – திறந்த அடிப்பகுதி உடைய.

281.                   Gymnopogon – “naked beard” (referring to the flower parts) – திறந்த தாடி போன்ற அமைப்பு.

282.                   Gymnoschoenus – a genus with naked, leafless stems – இலையற்ற தண்டுடைய பேரினம்.

283.                   Gymnosora – having naked sori (spore clusters) – உறை அற்ற வித்துருக்கள்.

284.                   Gymnosperma – having naked seeds – திறந்த வித்துடைய.

285.                   Gymnostachyum – having naked or bare flower spikes – மூடா மலர்க்கதிர் உடையது.

286.                   Gymnosteris – having a naked stem – திறந்த தண்டு.

287.                   Gynandra / Gynandrum / Gynandrus – having united female and male reproductive parts – இணைந்த இனப்பெருக்க உறுப்புகள்.

288.                   Gynandriris – an Iris relative with united pistil and stamens – இணைந்த உறுப்புகளைக் கொண்ட ஐரிஸ்.

289.                   Gynatrix – having a hairy ovary – தூவிகளுடைய சூலகம்.

290.                   Gynostemma – “female crown” (referring to the reproductive structure) – சூலக மகுடம் போன்ற.

291.                   Gynura – “ovary-tailed” (referring to the long style) – வால் போன்ற சூல்முடி.

292.                   Gypsacea / Gypsaceus – resembling gypsum; chalky – ஜிப்சம் போன்ற.

293.                   Gypsicola – growing in lime or gypsum soils – சுண்ணாம்பு மண்ணில் வளரும்.

294.                   Gypsophila – “gypsum-loving” (plants that thrive in alkaline soil) – ஜிப்சம் நிலத்தை விரும்பும்.

295.                   Gypsophiloides / Gypsophilum / Gypsophilus – resembles or loves chalky/gypsum soil – சுண்ணாம்புத் தன்மை விரும்பும்.

296.                   Gyrans – revolving or moving in a circle – சுழலும்.

297.                   Gyrocarpus – having fruit that turns or revolves when falling – சுழலும் கனியுடைய பேரினம்.

பெயோட்டி

அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. சுமார் 30 பங்கேற்பாளர்கள் அந்த பெரும்பாலையில் சிறு சிறு குழுக்களாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் வழிகாட்டி அந்த பாலை நிலத்தில் மண்டியிட்டு பிரார்த்தித்து, அங்கே சிறு சிறு பொத்தான்களை போல வளர்ந்திருந்த  கள்ளிகளை பறித்து அவற்றின் மேற்புறத்தில் இருந்த சிறிய வளரிகளை துடைத்து நீக்கிவிட்டு எப்படி உண்ணவேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.  பங்கேற்பாளர்கள் யாரும் அந்த கள்ளிகளை ஒருபோதும் திரும்பும் பயணத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டனர்.சில மணி நேரம் கழித்து அனைவரும் சேகரித்த கள்ளிகளுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்தார்கள்.

இரவுதான் அந்த நிகழ்வு நடைபெறும் என்பதால்  அந்த வெட்டவெளியில் வானின் கீழ், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக தோன்றுவதை பார்த்தபடி தங்களுக்கான இடங்களை தேர்ந்தெடுத்து கம்பளிகளை விரித்து அமர்ந்தனர்.  மெழுகுவர்த்தி, கொஞ்சம் கொக்கோ கனிகள், பீன்ஸ், வெண்ணிற மலர்கள் ஆகியவற்றுடன் அவர்களுக்கு  நம்பிக்கை இருக்கும் கடவுள் மற்றும் குடும்பத்தினர் புகைப்படங்களையும் முன்னால் இருந்த சிறு மரப்பலகையில் ஒவ்வொருவரும் அமைத்தார்கள்.

ஒரு பழங்குடியின ஆண் அனைவருக்கும் விறகு கூட்டிய அடுப்பில் தேநீர் தயாரிக்க தொடங்கினார், இரு பெண்கள் இரண்டு தொல் இசைக்கருவிகளை முடுக்கி தயாராக்கினர்.

அதுவரை வீசிக்கொண்டிருந்த இளங்காற்று குளிராக மாறத்தொடங்கியது.நிலவு எழுகையில் அனைவர் முன்பும் நெருப்பு வளர்க்கப்பட்டது.

நள்ளிரவானதும் அனைவருக்கும் சிறு கரண்டியில் பசைபோல மிக மிக கசப்பான கள்ளிப்பசையும், அதை விழுங்கிய பின்னர் ஒரு கள்ளித்தேநீரும் அளிக்கப்பட்டது அந்த தேநீர் வயிற்றுக்குள் இறங்காமல் தொண்டையிலேயே நின்றிருந்த பசையை உள்ளே இறக்கியது. அந்த தாளக்கருவிகள் வட்டமாக அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களிடம் தரப்பட்டது.  வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் அதை அவர்களுக்கு தெரிந்தாற்போல் இசைத்து ஒருசில பாடல்வரிகளை அவரவர் மொழிகளில் பாடினர்

பழங்குடியின தலைவர் அவர்களது தொல்மொழியில் அங்கு அனைவரும் கூடியிருக்கும்படி அனுமதித்த இயற்கைக்கு நன்றி தெரிவித்தார். பின்னணியில் பழங்குடியினர் சிலர் இணைந்து பாடினர்.

‘’நான் மிக லகுவாக இருக்கிறேன்
இதோ இப்போது பறக்கவிருக்கிறேன்
என் துயர்களிலிருந்து விடுபட்டு
மேலே மேலே பறக்க விருக்கிறேன்
இனி அனைவரும் ஒன்றே,

நாமனைவரும் ஒன்றே
நாமே மருந்து, நாமனைவரும் மருந்து
வாருங்கள், ஒருவருக்கொருவர்
சிகிச்சையளித்து கொள்ளுவோம்
இதோ, விண்மீன்களுக்கு அடியில்
பாலையின் காற்றில், தூரத்தே
ஏதோ முழக்கமொன்றை கேட்டபடிக்கு
நாம் ஒருவருக்கொருவர் இணைந்து கொள்வோம்
ஒருவரை ஒருவர் சிகிச்சை அளித்து மீட்போம்’’

என்னும் பொருளில் கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நட்சத்திரங்கள் அருகில் அமைந்திருந்த அந்த நள்ளிரவில் அப்பாடல் மிக இனிமையாக ஒலிக்கிறது.

ஆச்சரியப்படும் விதமாக அங்கு அவர்களின் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  இதுபோன்ற நிகழ்வுகளில் எதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, அவர்களின் கலாச்சாரத்தில் இதுபோன்ற முக்கியமான சடங்குகளில் குழந்தைகள் பங்கு கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்றும், தொல்மரபின் நீட்சியான அச்சடங்கு, கட்டாயம் குழந்தைகளின் முன்னிலையிலேயே வழக்கமாக நடத்தப்படும் ஏனென்றால் அவர்களும் அம்மரபின் நீட்சிதான் என்று பதிலளிக்கப்பட்டது.

ஒருமணி நேரத்தில் குமட்டலும் வாந்தியும் அனைவருக்கும் உண்டாகின. சிறிது நேரத்தில் சிலர் விசும்பி அழுது கொண்டிருந்தனர். பலர் காலடியில் வேர்கள் வளர்வதை உணர்வதாக கூறினர். அனைவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அதிகாலையில் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர்.

தனித்தனியே அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிகழ்வு முடியும்போது ஒரே குடும்பமாகி இருந்தனர். நிகழ்வை பாரம்பரிய முறைப்படி பழங்குடியின தலைவர் முடித்து வைத்ததும் அனைவரும்  அங்கிருந்த நெருப்புக்கும் நீருக்கும் இசைக்கருவிகளுக்கும் வணக்கமும் நன்றியும் சொல்லி விடைபெற்றார்கள். அத்தனை பேரும் புத்தம் புதிதாக பிறந்தவர்கள் போல் இருந்தார்கள்.

அந்த கள்ளிப்பசை உள்ளிருந்து நமது ஆணவத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது என்கிறார்கள் பழங்குடியினர். அக்கள்ளி  உண்மையில் நாம் யாரோ அதை நமக்கு காட்டி கொடுக்கிறது என்கிறார் ஒரு பங்கேற்பாளர் பரவசமாக

இந்த அனுபவங்கள் எல்லாம் மெக்ஸிகோவில் நடைபெறும் பெயோட்டி  சுற்றுலாவில் ஒரு சிறு கள்ளியை உண்ணும் ஒரு சடங்கு மற்றும் பிரார்த்தனை நிகழ்வில் கிடைப்பதுதான். அந்த சிறு பொத்தான்களை போலிருந்த கள்ளியின் பெயர் ’’பெயோட்டி’’

பெயோட்டி

பெயோட்டி (Peyote cactus) கள்ளியின் அறிவியல் பெயர் Lophophora williamsii. 

 பெயோட்டி என்னும்  மெக்ஸிகன் பொது வழங்கு பெயர்  நாவாட்(டு)ல் மொழி   (Nahuatl) வேர்கள் கொண்ட  ’’கம்பளிப்புழு கூடு’’ என்னும் பொருள் கொண்டிருக்கும் ஸ்பானிஷ் சொல்.  

அமெரிக்க பழங்குடியினர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இக்கள்ளியின், சிகிசையளிக்கும், மன அமைதி உண்டாக்கும், புலன்களைக் கூராக்கும் அரிய பண்புகளை  அறிந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பழங்குடியின கலாச்சாரத்தில் பெயோட்டிக்கு ஒரு பிரத்யேக புனிதமான இடமுண்டு. வட அமெரிக்கா, மேற்கு கனடா பகுதிகளின் சுமார் 40 பழங்குடியினத்தவர்களின் சடங்குகளில் பெயோட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

 சில இனத்தவர்கள் இதை ஆன்மீக அனுபவத்தின் பொருட்டு உண்ணுகையில், தியானம் மற்றும் மந்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றை செய்கிறார்கள். மேலும் சிலரோ முழுக்க முழுக்க நோய் தீர்க்கும் சடங்காக மட்டுமே இதை உண்ணும் நிகழ்வை நடத்துகிறார்கள். ஒவ்வொரு பழங்குடிக்கும் பெயோட்டியை பயன்படுத்துவதில் அவர்களுக்கே உரித்தான தனித்த வழிமுறைகள் உள்ளன.

சில பழங்குடி இனத்தில் பெயோட்டி பாம்புக் கடிக்கு முறி மருந்தாகவும் அளிக்கப்படுகிறது, இன்னும் சிலர் இதை இரத்த சர்க்கரை மற்றும் சருமவியாதிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகின்றனர்

 ’வேட்டை’ என குறிப்பிடப்படும் பெயோட்டியை கண்டுபிடித்து சேகரித்து கொண்டுவரும் நிகழ்வும் சடங்கின் ஒரு பகுதியாக நடக்கும்.  

பலர் நினைப்பதுபோல பெயோட்டி கள்ளி  உண்ணுதல், போதை உண்டாக்கும்  நிகழ்வல்ல, அது ஆன்மீக வேர்களை கொண்டிருக்கும் ஒரு அனுபவம்

மெக்ஸிகோ பழங்குடியினர் இதை ஒரு குணமாக்கும் சிகிச்சை அனுபவமென்றே குறிப்பிடுகின்றனர். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்தையும் ஆன்மாவையும் குணமாக்கும் சிகிச்சை இது.

ஹிக்குரி (Hikuri) என்றும் அழைக்கப்படும் பெயோட்டி கள்ளி ஒரு அரிய தாவரம் எனவேதான் அப்பிரதேசத்தின் பழங்குடியினர் அதை பாதுகாப்பதில் மிக கவனமாக இருக்கின்றனர்.

முது தந்தை எனப்பொருள்படும்  ‘Abuelo’,  என்னும்  இதன் பிறிதொரு பெயர் அக்கள்ளியின் ஆண்மை நிறைந்த ஆற்றலையும் குலமூத்தோரின் அறிவையும் உணர்த்துகிறது. பல இனங்களில் பெயோட்டி சொர்க்கத்தின் கதவுகளை திறக்கும் சாவி என கருதப்படுகிறது  

20ம் நூற்றாண்டில் இது அறிவியல் ரீதியாக வகைப்படுத்தப்பட்ட பின்பு உலகெங்கிலும் பெயோட்டி பிரபலமாகி இருக்கிறது.

 அமெரிக்காவின்  போதைப்பொருள் அமலாக்கத்துறை (Drug Enforcement Administration – DEA)  பெயோட்டியை , Schdule 1 drug என பட்டியலிட்டிருந்தும் பல அமைப்புகள் இந்த நெறியினை பின்பற்றுவதில்லை. உதாரணமாக அமெரிக்க  பூர்வகுடி அமைப்புக்கள் பலவற்றின் சடங்குகளில்  பரவலாக இக்கள்ளி  உபயோகிக்கபடுகிறது. 

பெயோட்டியில் இருக்கும் ஆல்கலாய்டான மெஸ்கலைன் அதன் விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது (mescaline). மெஸ்கலைன் நேரடியாக மூளையில் செயல்புரிகிறது. LSD மற்றும் சைலோசைபின் காளான்களும் இப்படித்தான் நேராக மூளையில் விளைவுகளை உண்டாக்கும். மெஸ்கலைன் செயற்கையாக தயாரிக்கப்பட்டு போதைப் பொருளாகவும் பயன்பாட்டில் இருக்கிறது

பெயோட்டியின் உலர்ந்த உச்சிப்பகுதியை உண்ணுவது, பெயோட்டியை கொதிக்கும் நீரில் வேகவைத்து உண்ணுவது, பெயொட்டியிலிருந்து தேநீர் தயாரித்து அருந்துவது அல்லது பெயோட்டி தூள் அடைக்கப்பட்டிருக்கும் கேப்ஸ்யூல்களை விழுங்குவது என்று பலவிதங்களில் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில குழுக்கள் உலர்த்தி பொடியாக்கிய பெயோட்டிகளை சிகரெட்டை போல புகைப்பதுமுண்டு 

 பெயோட்டியை உண்டதும் உடனே அதன் விளைவுகள் உடலில் உண்டாகும், அவ்விளைவுகள் சுமார் 12 மணி நேரம் உடலில் இருக்கும். இதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். புலன்களை கூர்மை கொள்ள வைப்பது மெஸ்கலைனின் இயல்பு என்பதால் பலர் ஒலியை பார்த்ததாகவும்  சிலர் பலவித நிறங்களை வடிவங்களை உணர்ந்ததாகவும் சொல்கின்றனர்.  காட்சிகள் (visions) எனப்படும் இல்பொருள் தோற்றங்கள் மெஸ்கலைனின் விளைவுகளில் முதன்மையானது, பலருக்கு சில மிகப் பழைய நினைவுகள் மின்னல் போலமனதில் வந்து போவது மிக சாதாரணமாக நிகழும்

இதன் விளைவுகள் எத்தனை உச்சம் சென்றாலும் அவை தற்காலிகமானவையே மெஸ்கலைனின் வீரியம் குறையும் போது அவையும் குறைந்துவிடும்

அதிக பெயோட்டி உண்டதால் ஏதும் ஆபத்துக்கள் உண்டானதில்லை. அரிதாகவே ஒருசிலருக்கு மெஸ்கலைன் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 

புகையிலை மற்றும் பிற போதை பொருட்களை போல அல்லாது மெஸ்கலைன் அடிமையாதல் என்பதும் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது. எனினும் சிலர் இதை போதைப்பொருளாகவும் உபயோகப்படுத்தி கொண்டிருக்கின்றனர்

தாவரவியல் இயல்புகள்

பெயோட்டி டெக்சாஸ் மற்றும் தெற்கு மெக்ஸிகோவை தாயகமாக கொண்டது. வடக்கு மெக்சிகோவின் சிகுவாஹுவான் பாலையில் மிக அதிக எண்ணிக்கையில் இவை காணப்படும். 

தட்டையான மேற்பரப்பை கொண்டிருக்கும் சாம்பல் பச்சை அல்லது நீலப்பச்சை  நிறத்தில், முட்கள் இல்லாத அழகிய சிறுதட்டையான உருண்டைவடிவ  இக்கள்ளிகள் தரையோடு தரையாக  வளர்பவை, 

பெயோட்டிகள்  entheogen எனப்படும் சமயச்சடங்குகளில் பயன்படும்  மனம் மயக்கும் தாவர வகையை சேர்ந்தவை. கூட்டங்களாக வளரும் இயல்புடைய இக்கள்ளிகள் 2-7 செ மீ உயரமும் 10-12 செ மீ சுற்றளவும் கொண்டிருப்பவை. மேலிருந்து கீழாக அமைந்திருக்கும் புடைத்த வரிகள் கள்ளியின் மேற்புறத்தை சுளைகள் போல பிரித்திருக்கும். முட்களற்ற இக்கள்ளிகளில் இளமஞ்சள் கம்பளி நூல் போன்ற மென்வளரிகள் கொத்தாக வளர்ந்திருக்கும். இவற்றில் மார்ச்சிலிருந்து மே வரை  சிறிய இளஞ்சிவப்பு மலர்கள் உருவாகும்.

இவற்றின் மகரந்த தாள்கள் தொடுதல் மூலம் தூண்டப்பட்டு மகரந்தங்களை விடுவிக்கும் வகையை சேர்ந்தவை. thigmotactic anthers  எனப்படும்  இவ்வகை கள்ளிகளின் மகரந்தங்களை குறித்து முதன் முதலில் சார்லஸ் டார்வின் கண்டறிந்தார்

கரிய விதைகளை கொண்டிருக்கும்  சிறு இளஞ்சிவப்பு வெடியாக்கனிகள் உருவாகும் .

சுண்ணாம்பு மண்ணில் இவை செழித்து வளரும். இயற்கையான வாழிடங்களில் இவை மிக மிக மெதுவாக, சுமார் 16 வருடங்கள் முதிர்வதற்கு எடுத்துக்கொண்டு வளரக்கூடியவை. அறுவடைகளுக்கு இடையில் 8 வருடங்களாவது காத்திருந்தாலே மீண்டும் வேர்கிழங்குகளிலிருந்து கள்ளிகள் முளைத்து  வரும். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இவை 3 வருடங்களில் முதிர்ந்து மலர துவங்குகிறது

பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரத்தில் பல்லாயிரமாண்டுகளாக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த கள்ளி இப்போது மிக அதிக, முறையற்ற அறுவடையாலும் பெயோட்டி சுற்றுலாக்களின் பிரபலத்தாலும் அருகிவரும் இனத்தின் தாவரமாக பட்டியிலிடப்பட்டிருக்கிறது

வரலாறு

வட அமெரிக்காவின் பழங்குடியின வரலாற்றுடன் இணைந்திருக்கிறது இந்த பெயோட்டியின் வரலாறும். பல பழங்குடி இனங்களில் புனிதமான தாவரமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயோட்டி இருக்கிறது. வட அமெரிக்காவின் தொல்குடிகளான Huichol, Tarahumara, Cora ஆகியோர் இக்கள்ளியுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள்..

 19 ம் ஆண்டில் நிறுவப்பட்ட  அமெரிக்க பூர்வீக தேவாலயம் (Native American Church-NAC ) மற்றும்  Huichol  பழங்குடியினர் இக்கள்ளிகளுடன் மிக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள். இந்த தேவாலயம் கிறுஸ்துவத்தை பழங்குடியின சடங்குகளுடன் கலந்து இக்கள்ளிகளின் பயன்பாட்டுடன் இணைந்த பெயோட்டி மதத்தை உருவாக்கி இருக்கிறது. ஹூசோல் (Huichol) பழங்குடியினரின் நான்கு முதன்மை தெய்வங்கள்  நீல மான், பெயோட்டி கள்ளி,மக்காச்சோளம் மற்றும் கழுகு ஆகியவை.

2005ல் டெக்சாஸில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த இரு பெயோட்டி காளன்களின் உலர்ந்த துண்டுகளில் நடந்த ரேடியோ கார்பன் ஆய்வுகள் அவை  பொது யுகத்துக்கு சுமார் 3660 வருடங்களுக்கு முற்பட்டவை என உறுதி செய்தன அத்தனை வருட பழமையான அவற்றிலிருந்து 2.5மிகி மெஸ்காலைன் ஆல்கலாய்டும் எடுக்கப்பட்டது ஏறக்குறைய அதே சமயத்தில் மெக்ஸிகோவின் பழங்கால கல்லறை குழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெயோட்டிகள் பொ யு 810-107 வை சேர்ந்தவை என கணக்கிடப்பட்டன.   எனவே அமெரிக்க பழங்குடியினர் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயோட்டி கள்ளிகளை பயனபடுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

19 ம் நூற்றாண்டை சேர்ந்தவரான ஜான் (john Raleigh Briggs ) என்பவரே பெயோட்டி கள்ளிகளை குறித்த அறிவியல் கவனத்தை முதன் முதலில் ஈர்த்தவர்.  லூயி (Louis Lewin) என்னும் அறிவியலாளர் 1888ல் Anhalonium lewinii என்னும் பெயோட்டி வகையை  தாவரவியல் ரீதியாக விவரித்தார். இனப்பெருக்கவியலாளரான  ஹேவ்லாக் (Havelock Ellis)  சுயமாக பெயோட்டியை உண்டு அதன் விளைவுகளை  1898ல் அறிக்கையாக வெளியிட்டார்.  அவரைப்போலவே  பெயோட்டியிலிருந்து மெஸ்கலைனை பிரித்தெடுத்த  Arthur Heffter  சுயமாக பெயோட்டி உண்டு அதன் விளைவுகளை 1897ல் கட்டுரயாக வெளியிட்டார்.

நார்வீஜியாவை சேர்ந்த இனவரைவியலாளரான கார்ல் (Carl Sofus Lumholtz)  மெக்ஸிகோவின் இந்தியர்கள் பெயோட்டியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை முதன்முதலில் கட்டுரையாக எழுதி வெளியிட்டார். மேலும் அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது வேறு நச்சுப்பொருட்கள் கிடைக்காததால் எதிர்தரப்பினர் ஒரு படைப்பிரிவினரின் குடிநீர் தொட்டியில் ஊறவைத்த பெயோட்டியை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டதையும் அக்கட்டுரையில் அவர்  குறிப்பிட்டிருந்தார்.

1845ல் பிரெஞ்ச் தாவரவியலாளர்  சார்லஸ் ஆண்டனியினால் ( Charles Antoine Lemaire)  Echinocactus williamsii என பெயரிடப்பட இக்கள்ளிகள் 1894ல்  Lophophora என்னும் பேரினத்தில் அமெரிக்க தாவரவியலாளர் ஜான் மெரில் என்பவரால் சேர்க்கப்பட்டது.( John Merle Coulter)

 மெஸ்கலைன்

மெஸ்கலைன்  முதன்மையாக புலன் கூர்மை கொள்ளுதல்,   ஒலிகளை காணுதல், கண்முன்னே இல்லாத  நிறங்களை வடிவங்களை காணுதல் (synesthesia) என்னும் விளைவுகளை அளிக்கிறது.

20 கிராம் உலர்ந்த பெயோட்டி சுமார் 200லிருந்து 400 மி கி மெஸ்கலைன் கொண்டிருக்கும்.இதனுடன்  hordenine  என்னும் ஆல்கலாய்டும் உள்ளது.

பட்டியலிடப்பட்ட போதைப்பொருளாக பெயோட்டி இருப்பினும் 1994  அமலுக்கு வந்த American Indian Religious Freedom Act,ன்  படி பழங்குடியினர் மதம்சார்ந்த சடங்குகளில் இதை பயன்படுத்த அரசு அனுமதித்திருக்கிறது

அருகிவரும் பெயோட்டி

2023 ஜனவரியில்   அமெரிக்க பூர்வகுடி தேவாலயத்தின் (Native American Church of North America  – Nacna)  உறுப்பினர்கள் வாஷிங்டனுக்கு சென்று சட்ட வல்லுநர்களை சந்தித்து பெயோட்டியின் பாதுகாப்பை குறித்தும் அது தொடர்பான பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரின் நம்பிக்கையை குறித்தும் பேசினர். தொடர்ந்து பல அதிகார மட்டங்களிலிருக்கும் ஆளுமைகளை சந்தித்த அவர்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் பெயோட்டியின் வாழ்விட அழிப்பை காட்டும் புகைப்படங்களையும் அவர்களுடன் பகிர்ந்து   உரையாடினார்கள்.

டெக்சாஸை சுற்றி இருக்கும் பல ஏக்கர் நிலப்பரப்பில் root plowing எனப்படும் பெயோட்டியை வேருடன் பிடுங்கி அறுவடை செய்யும் பல புகைப்படங்கள் அவை அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்த்தியது.  தலைப்பகுதியை மட்டும் வெட்டி எடுக்கையில் வேர்க்கிழங்குகள் காய்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து கள்ளிகள் உருவாகும். ஆனால் வேருடன் பிடுங்கி எடுக்கும் இந்த முறை அமெரிக்க தொல்குடிகளின் 6000 ஆண்டு தொன்மையான  மரபொன்றின் வேர்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.  

டெக்சாஸ்-மெக்சிகோ எல்லையின் இருபுறங்களிலும் இருக்கும் பெயோட்டி வயல்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிதறி வளர்ந்திருக்கும் பெயோட்டிகளை காணலாம். இப்பிரதேசத்தில் பெயோட்டிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய உரிமம் வைத்திருப்போர்  peyoteros எனப்படுகின்றனர் இவர்கள் கள்ளியின் மேற்புறத்தை மட்டும் கவனமாக அறுவடை செய்து மீண்டும அடியிலிருந்து பெயோட்டிகள் வளர்வதை உறுதி செய்வார்கள்.

 கடந்த 50 வருடங்களில் டெக்சாஸில் பெயோட்டி கள்ளிகளின் இயற்கையான வாழிடங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன

 கள்ளிகளின் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவன் (Steven Van Heiden) நகரமயமாக்கல், கால்நடைகளின் மேய்ச்சல், காற்றாலைகள் ஆகியவற்றால் பெயோட்டிகள்  பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன என்கிறார்

 சட்டபூர்வமாகவும், அனுமதியின்றியும் இவை அதிக அளவில் முறையில்லாமல் அறுவடை செய்யபடுவதும் இவை அருகி வருவதற்கு மற்றுமோர் முக்கிய காரணம்

2013ல் பெயோட்டி கள்ளிகள் அழியும் அபாயத்திலிருப்பதாக அறிவித்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) , 2017 ல் இவற்றின் 3% முழுவதுமாக அழிந்துவிட்டது என்றும்  அறிவித்திருக்கிறது 

 பெயோட்டியுடன் ஒரு மரபும் அழிந்து கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலைக்குரியதாகி விட்டிருக்கிறது. பெயோட்டிகளின் பயன்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமின்றி அவை வெகு வேகமாக அழிந்துகொண்டு வருகின்றன 

 The Indigenous Peyote Conservation Initiative (IPCI) என்னும் பழங்குடியின பெயோட்டி பாதுகாப்பு அமைப்பும்  இக்கள்ளிகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெக்ஸாசில் தற்போது பெயோட்டிகளை நர்சரிகளில் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. மரங்களினடியில் வளர்க்கப்படும் சிறு பெயோட்டிகள் பின்னர் மீண்டும் எடுக்கப்பட்டு அவற்றின் இயற்கை வாழிடங்களில் வளரச்செய்யப்படுகின்றன

பழங்குடியினரிடம் இந்த பெயோட்டிகளை அளித்து அவர்கள் வீட்டிலும் அவற்றை வளர்க்கச் செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது

இதன் பாதுகாப்பிற்கெனவே அரசு இதன் பயன்பாடுகளை கட்டுபடுத்த சட்டங்களை பிறப்பித்தது, எனினும் பழங்குடியினர் அத்தகைய சட்டங்கள் அவர்களின் கலாச்சார உரிமைகளுக்கு எதிரானது என எண்ணுவதால் பெயோட்டியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

பெயோட்டியின் பிரபலம் அதிகரித்து அதன் தேவைகளும் அதிகரித்திருப்பதால் அவற்றை அழிவிலிருந்து காக்கவேண்டிய அவசியம்  உண்டாகி இருக்கிறது

சட்டரீதியான பல கட்டுப்பாடுகள், கலாச்சார மாற்றங்கள், வாழிட அழிப்பு என பல அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் பெயோட்டி மிகச்சக்தி வாய்ந்த ஒரு கலாச்சார குறியீடாகவும், பல்லாயிரக்கணக்கான பழமையுள்ள  பழங்குடியின மரபின் தொடர்ச்சியாகவும் திகழ்கிறது. நோய் சிகிச்சைகளில், குறிப்பாக ’உணர்வுரீதியான நலவாழ்வு’ எனப்படும் emotional well being என்பதில் இவற்றின் தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது.

மெஸ்கலைனின் பயன்பாடு குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மெஸ்கலைன் பயன்பாடு  சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெயோட்டி கள்ளி அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான அமைப்பான  Convention on the International Trade in Endangered Species (CITES) மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இந்ததாவரம் தொடர்ந்து பூமியில் வாழ்வதற்கான அதன் தேவைகளுக்கும், இத்தாவரத்திற்கான் மனிதனின் தேவைகளுக்குமான இடைவெளியில் காத்துக்கொண்டிருக்கிறது இதன் பாதுகாப்பின் உத்திரவாதம் வருங்காலத்தில் பெயோட்டி கள்ளிகளுடன் இணைந்த கலாச்சாரங்களை பாதுகாப்பதையும், பெயோட்டி கள்ளிகளை பாதுகாப்பதும் மிக இன்றியமையாததாகி விட்டிருக்கிறது. தொடர்ச்சியான செயல்பாடுகள், சட்டபூர்வமான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் பெயோட்டியை  சுற்றியுள்ள சிக்கல்களை தீர்த்து அவற்றிற்கான இயற்கையான  நிலப்பரப்பில் அவை வளர்வதை உறுதி செய்வதின் மூலம், தொடரும் தலைமுறைகளுக்கு அதன் கலாச்சார முக்கியத்துவதை கடத்தவும் முடியும்.

லக்கி குளோவர்!

விலக்கப்பட்ட கனியைப் புசித்ததற்காக ஏதேன் தோட்டத்திலிருந்து பூமிக்குச் செல்லும்படி தண்டிக்கப்பட்டார்கள் ஆதாமும் ஏவாளும். ஏதேன் தோட்டத்தின் பசுமையையும் அழகையும் விட்டுப் பிரிய மனமில்லாத ஏவாள் தன்  இடுப்பில்  நான்கு இலைகள் கொண்ட லக்கி குளோவர் செடியொன்றை மறைத்துக்கொண்டு பூமிக்கு வந்தாள் என்று ஒரு கிறிஸ்தவ தொன்மம் இருக்கிறது.

இதனாலேயே  சாதாரணமாக மூவிலை கொண்ட லக்கி குளோவர் செடியில் அரிதாகத் தென்படும் நான்கு இலைகள்  கிடைத்தால், சொர்க்கத்தின் ஒரு துண்டையே கையில் வைத்திருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை உலகெங்கும் நிலவுகிறது.

இளைய குளோவர் என்று பொருள் படும் Shamrock என்னும் சொல் பல வகைச் செடிகளின் மூவிலைகளுக்கும் பொருந்தும் என்றாலும் அவற்றின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது இந்த வெள்ளைக்குளோவரான ட்ரைஃபோலியம் தான்.

ஐந்தாம் நூற்றாண்டில் புனித பேட்ரிக், அயர்லாந்து பாகன் பழங்குடியினருக்கு இந்த மூவிலைக் குளோவரைக் காட்டித்தான் அதி புனிதத்திரித்துவத்தை விளக்குவார். தனித்தனியே அமைந்திருக்கும் அதன்  மூன்று  இலைப் பாகங்களும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது, மூன்றும் ஒற்றைக்காம்பில் இருப்பது இறைவனின் அந்த மூன்று நிலைகளும் ஒன்றே என்பதை காட்டுகிறது  எனவே மூவிலைக் குளோவரை வைத்திருப்பது மிக அதிர்ஷ்டம் என்று பேட்ரிக் சொல்லிச்சொல்லி பிரசிங்கித்தார், அப்போதிலிருந்துஇந்த குளோவர் கிருஸ்தவத்தில் மிகச்சிறப்பான இடம் பெற்றது. 

பிறகு வந்த காலங்களில்  ஏதேன் தோட்டத்து நாலிலைக் குளோவரை வைத்திருப்பது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாது அது பல அமானுஷ்ய சக்திகளை கொடுக்கும், சாதாரணமாகப் பார்க்க முடியாத தேவதைகளை இதை வைத்திருப்பவர்கள் பார்க்க முடியும்,  செல்லும் பாதையில்  சூனியக்காரிகள்  உருவாக்கும் மாயத்தோற்றங்களைக் கண்டறிந்து அவற்றை உடைத்து முன்னேறிச் செல்லமுடியும் என்னும் நம்பிக்கைகள்  வெகுவாகப் புழங்கின. மேலும் அத்தனை ஆயிரம் மூவிலைகளுக்கிடையில் அரிதாகத் தென்படும் நாலிலை குளோவரைக் காண்பது கடவுளின் மீதான விசுவாசம் எத்தனை இருக்கிறதோ அதைப்பொருத்து என்னும் நம்பிக்கையும் நிலவியது.

உலகமெங்கிலும் இந்த நான்கு இலைகளுக்கு அன்பு , கடவுள் மீதான விசுவாசம், அதிர்ஷ்டம், நம்பிக்கை ஆகியன குறியீடாகச் சொல்லப்படுகிறது.

 நாலிலைக் குளோவரின் அதிர்ஷ்டத்தைக் குறித்து மற்றுமொரு கட்டுக்கதையும் வெகுவாக புழக்கத்தில் இருந்தது. ஒரு மாபெரும் புல்வெளியில் நடைபெற்ற கடும் போரின் நடுவில் நெப்போலியன் கீழே இருந்த ஒரு நாலிலைக் குளோவரைப் பார்த்து அதை எடுக்கக் குனிந்த மறு நொடி அவரை நோக்கி வந்த ஒரு துப்பாக்கித்தோட்டா அவரது தலையைத் தாண்டிச்சென்றது அவர் மட்டும் குளோவரை எடுக்க குனியாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்தத் தோட்டா அவர் உயிரை எடுத்திருக்கும்,  நாலிலைக் குளோவரின் அதிர்ஷ்டம் தான் நெப்போலியனைக் காப்பாற்றியது என்னும் இந்தக் கதை மிக வலுவாக வேர் பிடித்திருந்தது.

ஐரோப்பாவையும் மத்திய ஆசியாவையும் பூர்வீகமாகக் கொண்டது  இந்த மூவிலைக் குளோவர்.  உணவாகவும்  கால்நடைத் தீவனமாகவும் இதன் பயன்களைத் தெரிந்துகொண்ட ஐரோப்பியக் குடியேறிகள் இதன் விதைகளை வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா,ஜப்பான் மற்றும்  நியூசிலாந்துக்கு கொண்டு வந்து சாகுபடி செய்தார்கள். மேலும் உலகின் பிற பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த குளோவர் விதைகள் அறிமுகமாகின.  

ஐரோப்பிய குடியேற்றம் நடந்த இடங்களிலெல்லாம் குளோவர்களும் வளர்ந்ததால் இதை, காலடி பட்ட இடமெல்லாம் வளரும் தாவரம் என்னும் பொருளில் White Man’s Foot: என்றழைத்தார்கள்.

 இந்தத் தாவரத்தின் அறிவியல் பெயரில் உள்ள  Trifolium  என்றால் மூவிலைகள். repens என்றால் படர்ந்து வளருகிற என்று பொருள். இந்தத் தாவரத்துக்கு  Dutch Clover, Ladino Clover  என்றும் புழங்கு பெயர்கள் உண்டு.

உலகின் மிகப் பயனுள்ள களைச்செடியாக இந்த குளோவர் கருதப்படுகிறது. பயறு வகைக் குடும்பமான ஃபேபேசியைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை சேர்த்துவைக்கும் ரைசோபியம் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. எனவே இதன் வேர்களில் மிக அதிக அளவு நைட்ரஜன் இருக்கும். இந்தத் தாவரம் மடிந்தபின்னர் நிலத்தில் அந்த நைட்ரஜன் சத்து சேர்ந்து நிலத்தை வளமாக்குகிறது. இதனால் தான் ட்ரைஃபோலியம் வளர்ந்திருக்கும்  மேய்ச்சல் நிலங்கள் வழக்கத்தைக் காட்டிலும் பசுமையாக செழிப்பாக  இருக்கின்றன. 

ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 545 கிலோ குறைந்தபட்சமாக 170 கிலோ நைட்ரஜனைக் இந்தக் குளோவர் தாவரம் சேமிக்கிறது. வெள்ளைக்குளோவர் பெரும்பாலும் Lolium perenne  போன்ற தீவனப்புற்களுடன் கலந்தே வளர்க்கப்படுகிறது.  இதனால் மிக அதிகமாக குளோவரை உண்ணும் கால்நடைகளுக்கு வரும் வயிற்று உபாதைகள்  தீவனப்புல்லைத் தின்பதால் குணமாகிறது.

முழுத்தாவரமுமே உண்ணக்கூடியது குறிப்பாக மலர்த்தலைகள் எனப்படும் இதன் அழகிய மஞ்சரிகள் மிகுந்த சத்துக்கள் கொண்டது. இதன் இலைகளை அப்படியே சாலட்களில் சேர்த்து பச்சையாகவே சாப்பிடலாம் என்றாலும்  5-லிருந்து 10 நிமிடம் வேகவைத்து சாப்பிடுகையில் ஜீரணமாவது எளிதாக இருக்கும். லேசான இனிப்புச்சுவை கொண்ட மலர்த்தலைகளில் தேநீர் தயாரித்து அருந்தலாம், அவற்றை உலர்த்தி வறுத்துப்பொடித்து பிற உணவுகளுடனும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெப்பம் அதிகரித்திருக்கும் நாட்களில் சில இயற்கையாக வளர்ந்திருக்கும் காட்டுக் குளோவர் செடிகள்  பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சயனைடுக்கு இணையான நச்சுப் பொருட்களை  (linamarin & lotaustralin) உருவாக்கி இருக்கும் எனவே அச்சமயங்களில் இதை   குறைவாகச் சாப்பிடலாம். மேய்ச்சல் நிலமெங்கும் பரவி வளர்ந்து, ஏராளமாக மலர்ந்திருக்கும் இவற்றின் மலரமுதை உண்ணும் தேனீக்கள் சேர்த்துவைக்கும்  மிகச்சுவையான சத்துக்கள் நிறைந்த குளோவர் தேன் கடைகளில் கிடைக்கிறது..

1950 வரைக்கும் உலகெங்கிலும் மேய்ச்சல் நிலங்களுக்கு புல் விதைகள் வாங்குவோர் விரும்பிக்  கேட்டதால் உடன் குளோவர் விதைகளும் கலக்கப்பட்டே விற்பனை செய்யப்பட்டது. குளோவர் வளரும் புல்வெளி மிகப்பசுமையாக, மிக மிகச் செழிப்பாக இருக்குமென்பதால் இது பெரிதும் விரும்பப்பட்டது.  

அப்போது புற்களே இல்லாமல் முழுக்க முழுக்க குளோவர்களே நிறைந்திருந்த மேய்ச்சல் நிலங்களும் ஏராளமாக இருந்தன. ஆனால் 1950-க்குப்பிறகு உபயோகத்துக்கு வந்த 2,4D போன்ற அகன்ற இலைத்தாவரங்களுக்கான பிரத்யேகக் களைக்கொல்லிகள் மேய்ச்சல் நிலங்களில் இருந்த  குளோவர்களையும் டேண்டெலியன்களையும் அடியோடு அழித்து ஒழித்தன.

மிகப் பயனுள்ள குளோவர்கள் அழிந்துகொண்டிருப்பதை மக்கள் உணராவண்னம் களைக்கொல்லி நிறுவனங்கள் குளோவரென்னும் மோசமான களையை அழிக்க களைக்கொல்லிகளை வாங்கச்சொல்லி மக்களை ஊக்குவித்தன. மக்களும் அதை நம்பினார்கள். மிகப்பெரிய அளவில் குளோவர்கள் அழிந்தபின்னரே  “clover lawn movement” என்னும்  மேய்ச்சல் புல்வெளிகளில் குளோவர்களை மீட்டெடுக்கும் இயக்கம் தொடங்கி அவை மெல்ல மெல்ல மீட்டெடுக்கப்பட்டன.

ட்ரைஃபோலியம்   சிற்றினங்களில் இலைக்காம்பின் நீளத்தைப்பொறுத்து இவை சிறிய, நடுத்தரமான, பெரிய என்று மூன்று வகைகள் இருக்கின்றன இது ஒரு பல்லாண்டுத் தரைபடர் தாவரம். தண்டுக்கிழங்குகள் கணுக்கள் மண்ணில் படும் இடமெல்லாம் வேர் பிடித்து வளர்ந்து பரவிக் கொண்டே இருக்கும்.  மலரத்தலைகள் வெண்ணிறத்தில் சிறிது இளஞ்சிவப்பும் பாலாடை நிறமும் கலந்தாற் போலிருக்கும்.

வெள்ளை குளோவரின் ஒவ்வொரு இலைஇதழின் நடுவிலும் வெளிறிய வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் ‘V’ போன்ற ஒரு கோடு இருக்கும். இதைத் தாவரவியல் “Watermark” என்று குறிப்பிடுகிறது.  மற்ற வகைக்குளோவர்களின் முட்டை வடிவ மூவிலைகளில் சில சமயம் ஆங்கில V வடிவ வெண்ணிறக் கோடுகளும், தீற்றல்களும் இருக்கும்.பல சிற்றினங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வெண்ணிறத் தீற்றல் உருவாகி பின்னர் மறைவதும் உண்டு.

சிக்கலான வலைப்பின்னல் போல அடர்ந்து வளர்ந்து நிலத்தை மூடியிருக்கும் குளோவர்களிலிருந்து அடர்த்தியாக உருவாகும் மலர்த்தலைகளில் 20-லிருந்து 40 சிறுமலர்கள் அமைந்திருக்கும் மலர்கள் மெல்லிய தேன் வாசனை கொண்டிருக்கும். மகரந்தச்சேர்க்கைக்குப் பிறகு காம்பற்ற, இதய வடிவிலிருக்கும்  மஞ்சள் அல்லது பழுப்பு நிற சிறு கனிகளும் அவற்றினுள் நுண் விதைகளும்இருக்கும்.

குளோவரில் கீழ்க்கண்ட வகைகள் உலகமெங்கும் இருக்கின்றன.

  • Trifolium repens subsp. macrorrhizum (Boiss.) Ponert
  • Trifolium repens var. nevadense (Boiss.) C.Vicioso
  • Trifolium repens var. ochranthum K.Maly
  • Trifolium repens var. orbelicum (Velen.) Fritsch
  • Trifolium repens var. orphanideum (Boiss.) Boiss.
  • Trifolium repens var. pipolina
  • Trifolium repens subsp. prostratum Nyman
  • Trifolium pratense subsp. pratense

Trifolium pratense, என்னும் சிற்றினம்  Red Clover என்று சொல்லப்பட்டாலும் இதன் மலர்த்தலை இளஞ்சிவப்பில்தான் இருக்கும்.

பம்பிள் தேனீக்கள் இவற்றில் மகரந்த சேர்க்கை செய்கின்றன.உலகெங்கிலுமே இவை தீவனப்பயிராக மேய்ச்சல் நிலங்களில் பயிர்செய்யப்படுகின்றன. குளோவர் இது அயர்லாந்து நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மிக முக்கியமான சின்னமாகவும் இருக்கிறது.

இதன் நைட்ரஜனை சேமிக்கும் இயல்பால் தானியப்பயிர்கள் புல்வெளிகள் மற்றும் காய்கறி பயிரிடும் நிலங்களில் துணைப் பயிராகவும் குளோவர் பயிர் செய்யப்படுகிறது. இவை அடர்ந்து பரவி வளருவதாலும் மிக அழகிய மலர்த்தலைகள் நெருக்கமாக உருவாவதாலும் வேறு களைச்செடிகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது எனவே பெரும் பசும்புல்வெளிகளில் குளோவரையும் சேர்த்தே வளர்க்கிறார்கள். ஒரு சில பழங்குடியினர் இதன் மலர்த்தலைகளை உலர்த்தி  அகலமான இலைகளுக்குள் பொதிந்து புகையிலையைப் போல புகைக்கிறார்கள் இந்தப்புகை போதை தராது எனினும்   சிறிது மன அமைதி தருவதாகச் சொல்லபடுகிறது.

இந்தியாவில் இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குளோவர்கள் பொதுவாக மூன்று அரிதாக நான்கு மேலுமரிதாக திடீர் மாற்றங்கள் மற்றும் சூழல் மாற்றங்களால் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கக்கூடும் ஜப்பானில் இந்த வெள்ளைக் குளோவர்களில் அதிகம் திடீர் மாற்றம் எனப்படும் மியூட்டேஷன் நடக்கிறது.

ஜப்பானைச்சேர்ந்த ஷிகியோ ஒபாரா (Shigeo Obara) என்னும் தாவரவியலாளர் குளோவரை பயிர்பெருக்கம்  செய்து ஏராளமான ஆய்வுகளையும் அதில்  செய்தவர். இவர் தாவர மரபியலையும் தாவரவியலையும் இணைத்து பல ஆய்வுகள் செய்துகுளோவரில் பல சிறிய இலைகளை உருவாக்கினார்.  60 ஆண்டுகளாக குளோவரில் ஆரய்ச்சிசெய்யும் இவர், மலர்த்தலைகளில்  கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்து இதன் இலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து கின்னஸ் சாதனையை இவரே மூன்று முறைச் செய்தார்.

2002-ல் ஒரு இலைக்காம்பில் 18 சிற்றிலைகள்

2008-ல் அந்த சாதனையை அவரே முறியடித்து ஒரு இலைக்காம்பில் 21 சிற்றிலைகள்.

2009- மீண்டும் முந்தைய சாதனையை அவரே முறியடித்து ஒரு காம்பில் 56 சிற்றிலைகள் கொண்ட குளோவரை உருவாக்கி சாதனை படைத்தார்.

இவாரது மறைவுக்குப்பின் 15 ஆண்டுகள் இந்தச் சாதனை மூறியடிக்கப்படாமல் இருந்தது.

2024-ல் தான் ஜப்பானின் யோஷி கரு என்பவர் ஒரே காம்பில்  63 சிற்றிலைகளை உருவாக்கி அந்த சாதனையை முறியைடித்தார். குளோவர் பயிர்ப்பெருக்கம் உலகெங்கிலும் பலருக்கு பிடித்தமான ஒரு கலையாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் நாலிலைக் குளோவரை ஒரு மணிநேரத்தில் சேகரிக்கும் சாதனைகளும் உலகெங்கிலும் நடக்கிறது. 

அமெரிக்கரான Gabriella Gerhardt  இந்த கின்னஸ் சாதனையை 5முறை செய்திருக்கிறார். முழு நிலவொளியில் நாலிலைக் குளோவரை சேகரிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும் என்று ஒரு நம்பிக்கை இருந்து பலர் இரவில் அதைத்தெடிச்சென்றிருக்கிறார்கள். பல உலகப்புகழ்பெற்ற நிறுவனங்களிலும் இந்த நாலிலை குளோவர் வடிவம் லோகோவாக இருக்கிறது.

நாலிலைக்குளோவரைக் கண்டால் கொஞ்ச நேரத்திலேயே நல்லசெய்தி வரும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது. முன்பு பத்தாயிரம் மூவிலைகளில் ஒன்று நாலிலையாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொன்னது, இப்போது அது குறைந்து ஐந்தாயிரம் மூவிலைகளில் ஒன்று நாலிலையாக இருக்கும் எனப்படுகிறது.

பழங்கால மக்கள் குளோவர் இலைகளை வைத்து வானிலையைக் கணித்தனர். மழை வரப்போகிறது என்றால், இந்த இலைகள் நேராக நிமிர்ந்து நிற்கும் என்று நம்பப்பட்டது.குளோவரின் மலர்களில் மோதிரம் அணிந்துகொள்வது மலர்த்தலைகளைக் கோர்த்து மலர்க்கிரீடம் அணிந்துகொள்வது ரோஜாக்களைப் போல் இவற்றை சூடிக்கொள்வது என இதன் கலாச்சார அந்தஸ்தும் குறிப்பிடத்தக்கது. 

சீட்டுவிளையாட்டின் கார்டுகளில், விவசாயிகளை,  பயிர்ச்சாகுபடி செய்யப்படும் நிலத்தை குறிக்கும் க்ளப் என்றழைக்கப்படும் கார்டில் இருக்கும் சித்திரம் சிறு இலைக்காம்புடனிருக்கும் மூவிலைக் குளோவர்தான்.  (சீட்டுவிளையாட்டின் ஒவ்வொரு வகை கார்டுகளுக்கும் அவை குறிப்பிடுவதென்ன என்பதற்கு பிரத்யேகமான வரலாறு இருக்கிறது)

புனித பேட்ரிக்கின் நாளான மார்ச் 17 அன்று உலகெங்கிலுமே வெள்ளைக்குளோவரின் மலர்களையும் இலைகளையும் சூடிக்கொள்கிறார்கள்.  தமிழில் அருகு போல்வேரோடி ஆல்போல் தழைத்து என வாழ்த்துவது போல் ஐரோப்பாவெங்கும் நீண்ட ஆயுளுக்கும் நிறைவாழ்வுக்குமான வாழ்த்தாக   “to be in clover” என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது.

பல தமிழ்த்திரைப்படங்களில் ஐரோப்பா மற்றும் இந்திய மலைவாசஸ்தலங்களில் எடுக்கபட்ட பாடல் காட்சிகளில் லக்கி குளோவரின் அழகிய மலர்ப்படுக்கைகள் தெரியும். உதாரணமாக ’’புல்வெளி புல்வெளி தன்னில்’’ பாடலைச் சொல்லலாம்,

தேவன் தேடுங்கள் கிடைக்கும் என்றார் எனவே இனி மேய்ச்சல் நிலங்களில் குளோவர்களைக் கண்டால்  நாலிலைகளைத் தேடுங்கள் சொர்க்கத்தின் இலையொன்று கிடைக்கலாம்.  

அச்சுதனும் ரீடியும்!

கொச்சியிலிருந்த பிரம்மாண்டமான அந்த டச்சுக்கோட்டை முழுக்க உப்புக் காற்றின் ஈரம் நிறைந்திருந்தது. கொச்சி ஆளுனரான வான் ரீடி மிகுந்த மனவருத்தத்துடன் ஒரு சாளரத்தின் அருகே அமர்ந்து வெளியே விரிந்திருந்த அரபிக்கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.  

அது 1674-ம் ஆண்டு. ஐரோப்பிய இறைப்பணியாளர் மேத்யூவின் உதவியுடன் மலபார் பகுதியின் தாவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த வான் ரீடி, அது ஏறக்குறைய முழுமையடைந்து  கையில் கிடைத்தபோது தாவரங்களின் வகைப்பாட்டில் பிழைகள் இருந்ததையும், பல சித்திரங்கள் துல்லியமாக இல்லாததையும் கண்டு மனமுடைந்து போனார். 

அதுவரையிலும் ஐரோப்பிய தாவரவியலாளர்களை மட்டுமே நம்பி இருந்த வான் ரீடி, மலபார் பகுதியின் தாவரங்களை  எப்படியாவது முறையாக ஆவணப்படுத்த முடிவுசெய்து, தனது நண்பரான கொச்சி அரசரின் உதவியை நாடிச் செல்ல முடிவுசெய்தார். என்ன கேட்டாலும் மறுக்கவே முடியாத உதவியொன்றை அரசருக்கு வான் ரீடி முன்பு செய்திருப்பதால், நிச்சயம் அவரிடம் உதவி கிடைக்கும் என அறிந்திருந்ததால், உடனே கொச்சி அரசரைச் சந்திக்கப் புறப்பட்டார். குதிரையில் செல்லும் வழியில் பழைய நினைவுகளை அவரது மனம் அசைபோட்டது.

1660-களில் கொச்சியில் போர்த்துகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே கடும் போர் நிலவியது. அதே சமயம் கொச்சி அரச குடும்பத்திலும் வாரிசுரிமைப் போட்டி தீவிரமாக நடந்தது. அரச குடும்பத்தினரை முழுவதுமாகக் கொல்ல போர்த்துகீசியர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஒரு பழைய கோவிலில் கொச்சி ராணி கங்காதர லக்ஷ்மி ஒளிந்திருந்தார். அப்போது மிக இளைஞராக இருந்த வான் ரீடி, அந்த கோவிலுக்குச் சென்று கொச்சி ராணியை ஒரு பிராமணரின் முதுகில் சுமக்கச்செய்து டச்சு முகாமிற்கு   தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றினார்.

ராணியைக் காப்பாற்றியதால், டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த வீரகேரள வர்மாவை அரசராக நியமிக்கும் உரிமையை டச்சுக்காரர்கள் அடைந்தார்கள். கைம்மாறாக வீரகேரள வர்மா வான் ரீடியுடன் நல்ல நட்புக் கொண்டிருந்ததோடு, அவரைத் தனது பிரதான ஆலோசகராகவும் நியமித்துக்கொண்டார். இந்த நட்புதான் டச்சுக்காரர்கள் கொச்சியில் உறுதியாகக் காலூன்ற உதவியது.

மிளகு, லவங்கப்பட்டை வணிகத்திற்காக டச்சுக்காரர்கள் சில ஒப்பந்தங்களைக் கொச்சி அரசருடன் ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வான் ரீடிக்குக் கேரளா முழுவதும் பயணம் செய்யவும், தாவரங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் தேவையான அதிகாரமும் பாதுகாப்பும் கிடைத்தன.

1656-ல் நெதர்லாந்தின் பிரபு குடும்பத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரரான வான் ரீடி (Hendrik Adriaan van Rheede tot Drakenstein), கப்பலில் இந்தியாவிற்கு வந்தார். போர்ச்சுகீசியர்களுக்கு எதிரான பல கடும் போர்களில் ரீடியின் தீரத்தைக்கண்ட டச்சு அரசு அவருக்கு பல  பதவி உயர்வுகள் அளித்தது, விரைவில் ரீடி மலபாரின் ஆளுநராக  வந்து சேர்ந்திருந்தார்.

இளவயதிலேயே தாய் தந்தையை அடுத்தடுத்து இழந்த ரீடி அனாதையானார். உறவினர்களால் வளர்க்கப்பட்ட அவர், இளமையில் பெரும் கலகக்காரராகவே அறியப்பட்டார். தன்னுடைய 20-வது வயதில் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்திலும் அவர் துணிச்சல் மிக்க  போர்வீரராகவும், முரட்டுத் துணிச்சல் மிக்கவராகவும் அறியப்பட்டார்.

அப்போது கேரளக் கடற்கரை  முழுவதுமே ஐரோப்பியர்களால் ‘மலபார் பகுதி’ என்று அழைக்கப்பட்டது. தாவரவியலில் முறையான படிப்போ அல்லது பயிற்சியோ வான் ரீடிக்கு இல்லை என்றாலும், மலபார் பகுதியின் தாவர வளம் அவருக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டியது.  நெதர்லாந்தில் வான் ரீடியின்  தந்தை வன அதிகாரியாக இருந்ததே, ரீடிக்குத் தாவரங்களின் மீது ஈர்ப்பு உண்டாக ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். உள்ளூர்வாசிகள் பல நோய்களுக்கு எளிய மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை பெற்று குணமடைவதையும் அவர் கவனித்தார்.

வான் ரீடி மலபார் தாவரங்களை ஆவணப்படுத்த விரும்பியதில் அவரது ஆர்வம் மட்டுமல்லாது அரசியலும் கலந்திருந்தது. ரீடியின் மேலதிகாரி ரைக்ளாப் வான் கோயன்ஸ் (Rijcklof van Goens), டச்சு தலைமையகத்தை இலங்கையின் கொழும்புப் பகுதியில் அமைக்க விரும்பி அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். 

அவருடன் முன்விரோதம் கொண்டிருந்த ரீடி, அதனை முறியடித்து, தனது விருப்பப்படி மலபாரில் தலைமையகத்தை அமைக்க வேண்டி, கொழும்புவைக் காட்டிலும் மலபார் வளம் நிறைந்தது என நிரூபிக்க அப்பகுதியின் அரிய தாவரங்களை ஆவணப்படுத்தி, ஐரோப்பாவிற்கு அனுப்பநினைத்தார், ஆனால் அவர் நினைத்த துல்லியம் அந்தத்தயாரிப்பில் இல்லை.

கொச்சி அரசரிடம்  ரீடி விஷயத்தைச் சொன்னதும், அவர் உடனே மற்ற குறுநில அரசர்களிடமிருந்தும், உள்ளூர் மக்களிடமிருந்தும் தாவரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும், அரண்மனை வைத்தியர்களையும், ஈழவ சமூகத்தைச் சேர்ந்த கொச்சியின் மிகப்புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர் இட்டி அச்சுதனையும் வான் ரீடியிடம் அவர் அறிமுகம் செய்து வைத்தார். 

அரசரின் அழைப்பின் பேரில் கோட்டைக்கு இட்டி அச்சுதன் முழு அரசு மரியாதையுடன் வரவழைக்கப்பட்டார். அவைக்கூடத்தின் அந்தச் சந்திப்பை பலர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வான் ரீடி மிக உயரமாக, கட்டுமஸ்தான உடலமைப்புடன், ஐரோப்பியப் பட்டு அங்கியும் பொய்முடியும் அணிந்து கம்பீரமாகக் காட்சியளித்தார். அதற்கு நேர் எதிராக, கொச்சி மண்ணின் மைந்தனான இட்டி அச்சுதன் வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு, கைகளில் பழைய பனை ஓலைச் சுவடிக்கட்டுகளுடன் வந்திருந்தார்.

அவர்கள் இருவருக்குமிடையில் மொழிப் பிரச்சனை இருந்ததால், துபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இம்மானுவேல் என்னும் பல மொழிகள் பேசத் தெரிந்த உள்ளூர்க்காரர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அச்சுதனின் எளிய தோற்றம், அவரது தாவர அறிவைக் குறித்த சந்தேகத்தை வான் ரீடியிடம் உண்டாக்கியது. அவர் அச்சுதனின் அறிவைச் சோதிக்க நினைத்தார்.

ரீடியிடம் இருந்த பிழைகள் கொண்டிருந்த படைப்பில் இருந்த சித்திரங்களைப் பார்த்து, அவற்றின் வாழிடம், வளரியல்பு, மருத்துவப் பண்புகள், அவை வளரும் மண் வகை மற்றும் அவற்றின் மலரும் காலம் ஆகியவற்றைப் பற்றி இட்டி அச்சுதன் மிகத் தெளிவாகக் கூறினார். தோற்றத்தை வைத்து அவரைக் குறைவாக எடைபோட்டிருந்த வான் ரீடி வாயடைத்துப் போனார். ஐரோப்பியர்கள் தாவரங்களை வகைப்படுத்துதலை இன்னும் முழுமையாக செய்து முடிக்காதிருக்கையில், இட்டி அச்சுதனின் இயற்கை அறிவும் வகைப்பாட்டியல் அறிவும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தலைமுறைகளாக பாரம்பரிய வைத்தியர்களாக இருந்த அச்சுதனின் குடும்பத்திற்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான பழைய பனை ஓலைச் சுவடிகள் இருந்தன. அவற்றில் மூலிகைத் தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், தாவரத்தின் எந்தப் பாகம் மருத்துவப் பயன்களைக் கொண்டது, மருந்துகளைத் தயாரிக்கும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை விளக்கமாக எழுதப்பட்டிருந்தன. அவற்றை ரீடிக்கு அச்சுதன் விளக்கினார்.

வான் ரீடி தயாரிக்கவிருந்த மலபாரின் தாவர ஆவணத்திற்காகத் தயாரித்து வைத்திருந்த லத்தீன் மொழியிலான அட்டவணைகளையும் பட்டியல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க அச்சுதனின் தாவரவியல் அறிவை மட்டுமே சார்ந்திருக்க அன்றே முடிவு செய்தார்.

வான் ரீடி இட்டி அச்சுதனுக்கு முழு அதிகாரமும் முழு மரியாதையும் அளித்து, அவருக்குத் தேவையான குழுவையும் முறையாக உருவாக்கிக் கொடுத்தார். ஐரோப்பியர்கள் இந்தியர்களை இப்படி நடத்தியது அக்காலத்தில் மிக அரிதாகவே நடந்தது. காலனித்துவ வரலாற்றாளர்களால் வியந்து பேசப்படும் ஒரு விஷயம்  வான் ரீடிக்கும் இட்டி அச்சுதனுக்கும் இடையே நிலவிய மிகச் சிறப்பான இந்த அறிவார்ந்த நட்புத்தான்.

17-ம் நூற்றாண்டின் கடுமையான சாதியக் கட்டமைப்புகள் மற்றும் நிறவெறி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பரஸ்பரப் புரிதலும் நட்பும் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது.

இது அக்காலத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது; ஏனெனில், அச்சுதன் அக்காலக் கேரள உயர்சாதியினரால் ஒதுக்கப்பட்ட ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய வைத்தியர். இப்போது ‘சேர்த்தலா’ என்று அழைக்கப்படும் முந்தைய ‘கடகரைப்பள்ளி’ என்னும் கடற்கரை கிராமத்தில் பிறந்தவர். பிராமண அறிஞர்கள் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் இருந்த அதே குழுவில், அவர்களுக்கு இணையான இடத்தில் அச்சுதனை வான் ரீடி அமர வைத்தார். ஒரு  வைத்தியரை, ஆதிக்கச் சமூக அறிஞர்களுக்குச் சமமாக  ஒரு உயர்பதவியிலிருந்த ஐரோப்பியர் அங்கீகரித்தது, 17-ம் நூற்றாண்டின் சமூகச் சூழலில் ஒரு புரட்சிகரமான செயலாகக் கருதப்படுகிறது.

அச்சுதன், தனது குடும்பச் சொத்தாகத் தலைமுறை தலைமுறையாக வைத்தியர்களாக இருந்து வந்த தனது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பனையோலைச் சுவடிகளிலிருந்து, வான் ரீடிக்குத் தேவையான அனைத்துத் தாவரவியல் தரவுகளையும் வழங்கினார். அந்தப் பனையோலைகளில் இருந்த மருத்துவ ரகசியங்களே ‘ஹோர்டஸ் மலபாரிகஸ்’ உருவாக முக்கிய அடிப்படையாக அமைந்தன.

அக்காலத்தின் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும், இட்டி அச்சுதனின் ஆழமான அறிவின் மீது வான் ரீடி பெரும் மரியாதை கொண்டிருந்தார். வான் ரீடியும் அச்சுதனும் இந்த ஆவணப்படுத்துதல் பணிக்காக, மலபாரின் சதுப்பு நிலங்களிலும் அடர் காடுகளிலும் இணைந்து பயணித்தனர். பல நாட்கள் காடுகளிலேயே தங்கி, அங்கிருந்த அரிய வகைத் தாவரங்களைச் சேகரித்து, அவற்றின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்தினர்.

வான் ரீடி அமைத்த அந்த ஆய்வுக்குழுவில் ரங்க பட், விநாயக பண்டிட் மற்றும் அப்பு பட் ஆகிய மூன்று கொங்கணி பிராமண அறிஞர்களும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் வான் ரீடியும் அச்சுதனும் தொகுத்த தகவல்களைத் தங்களின் அறிவுப்புலத்தைக் கொண்டு சரிபார்த்து உறுதி செய்தனர்.

வான் ரீடியின் நண்பரான யோகன்னஸ் காசேரியஸ் (Joannes Casearius) முழு ஆவணப்படுத்துதலையும் மேற்பார்வையிட்டார். குழுவினர் அடர் காடுகளில் தேடி அலைந்து நேரிடையாகத் தாவரங்களைக் கொண்டு வந்தனர். இட்டி அச்சுதன் அவற்றின் அடையாளங்களைக் கண்டு பெயரிட்டு, பிற தகவல்களையும் அளித்தார். அவருடன் இத்தாலிய கத்தோலிக்க இறைப்பணியாளரான பாதர் மேத்யூஸ் (Father Matheus) இருந்தார். இவ்வாறு பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்ட அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அறிவியல் ஆவணத்திற்காக உழைத்தது அந்த காலத்தின்மிக அரிதான ஒரு நிகழ்வு.

தாவரங்களைப் பறித்துச் சென்று உலர வைத்து (Herbarium) அவற்றை பார்த்து வரைவதற்குப் பதிலாக, வான் ரீடி, தாவரங்கள் வளரும் இடத்திற்கே ஓவியர்களை அழைத்துச் சென்றார். குழுவினர் அடர் காடுகளில் தேடி அலைந்து நேரிடையாகத் தாவரங்களைக் கொண்டு வந்தனர். இட்டி அச்சுதன் அவற்றின் அடையாளங்களைக் கண்டு பெயரிட்டு, பிற தகவல்களையும் அளித்தார்.

மலபாரைச் சேர்ந்த ஓவியர்கள் தாவரத்தின் கிளைகள், இலைகளின் அமைப்பு மற்றும் பூக்கள் விரியும் விதம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக வரைந்தனர். தாவரத்தின் நிஜமான அளவை (Life-size) அப்படியே காகிதத்தில் கொண்டு வர அவர்கள் முயன்றனர். இதற்காகப் பெரிய அளவிலான காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன.

 அச்சுதன் மலையாளத்தில் சொல்லச் சொல்ல, பலமொழி அறிஞர்கள் அவற்றை அவரவர் மொழிகளில் எழுதிக்கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாவரவியலாளர்களும் அக்குழுவில் இருந்தனர்.

200 நபர்கள் தாவரங்களைத் தேடிக் கொண்டு வரும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அப்படிச் சேகரித்தவற்றின் பல விதைகள் டச்சு அரசிற்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்தன. அவற்றில் பல தாவரங்கள் மிக அரியவை என ஐரோப்பியத் தாவரவியலாளர்களால் அடையாளம் காணப்பட்டன.

ஹோர்டஸ் மலபாரிகஸ் நூலின் தாவர வரைபடங்கள் முதலில் செப்புத் தகடுகளில் செதுக்கப்பட்டன. பின்னர், அந்தத் தகடுகளின் மீது மை தடவப்பட்டு, கையால் தயாரிக்கப்பட்ட உயர்தரக் காகிதங்களை அவற்றின் மீது வைத்து அழுத்தம் கொடுத்து அச்சுகள் எடுக்கப்பட்டன. இந்த ‘காப்பர் பிளேட் என்க்ரேவிங்’ (Copper Plate Engraving) முறை காரணமாகவே, 350 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தாவரங்களின் இலை நரம்புகள் முதல் வேர் முடிச்சுகள் வரை மிகத் துல்லியமாக நம்மால் காண முடிகிறது  இம்முறை Intaglio printing  எனப்பட்டது. ஒவ்வொரு செப்புத் தகடு அச்சிலும் அந்தத்தாவரத்தின் பெயர் நான்கு மொழிகளில் (லத்தீன், மலையாளம், தமிழ் மற்றும் அரபி) பொறிக்கப்பட்டது.

17-ம் நூற்றாண்டின் தமிழ் மற்றும் மலையாள எழுத்துருக்கள் அச்சில் ஏறிய முதல் நூல் இதுதான்.   

ஆவணத்திற்காக வான் ரீடி செலவழித்த பெருந்தொகை, அவருடைய உயர் அதிகாரிகளால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நிர்வாக ரீதியாக அவர் கண்டிக்கப்பட்ட போதும், தான் செய்யும் அந்தச் செலவு அச்சுதனின் அனுபவ அறிவை நம்பியே செய்யப்படுவதாகவும், இந்தப் பணி வெற்றிகரமாக முடியும் என்றும் ரீடி உறுதியாகப் பதிலளித்தார்.

ரீடியின் பார்வையில், அச்சுதன் உலகின் ஒட்டுமொத்தத் தாவரங்களையும் அறிந்துவைத்திருந்த ஒரு மாபெரும் அறிஞராகத் தெரிந்தார். அதேபோல், அச்சுதனுக்கு வான் ரீடி என்பவர், தனது குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருந்த மூலிகை ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த ஒரு அறத்தூதராகத் தோன்றினார்.

மிகத் துல்லியமான 794  சித்திரங்களுடனும், 742 தாவரங்களைக் குறித்த விளக்கங்களுடனும்  ஹோர்டஸ் மலபாரிகஸ் முழுமையாக உருவானது.

12 தொகுதிகள் கொண்ட, ‘மலபாரின் தோட்டம்’ என்று பொருள்படும் ஹோர்டஸ் மலபாரிகஸ் (Hortus Malabaricus), 17-ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் தாவரவியல் பொக்கிஷம். இந்தியத் தாவரங்கள் குறித்த ஆவணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மாபெரும் படைப்பை உருவாக்கி முடிக்க சுமார் 30 ஆண்டுகள் (கிட்டத்தட்ட 1674 முதல் 1703 வரை ) ஆனது. தாவரங்களைச் சேகரித்தல், அவற்றை ஓவியங்களாக வரைதல், உள்ளூர் அறிஞர்களான இட்டி அச்சுதன் போன்றவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுதல் மற்றும் அவற்றை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தல் என மிக நீண்ட உழைப்பு இதில் அடங்கியுள்ளது.

இதன் முதல் தொகுதி 1678-ல் வெளியானது. மொத்தம் 12 தொகுதிகள் கொண்ட இந்த வரிசை 1703 வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது

பல்லாண்டு கால உழைப்பில் உருவான ஹார்டஸ் மலபாரிகஸில் 794 செப்புத் தகடு சித்திரங்கள்  இடம்பெற்றுள்ளன.  இது இந்தியாவின் மலபார் கடற்கரைப் பகுதியில் (இன்றைய கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகள்) காணப்பட்ட தாவரங்களைப் பற்றிய உலகின் மிக விரிவான மற்றும் பழமையான அறிவியல் ஆவணம்.

ஹோர்டஸ் மலபாரிகஸின் முன்னுரையில் உள்ளூர் மக்களின் தாவரவியல் அறிவு தன்னைப் பிரமிக்க வைத்ததாக ரீடி குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் உள்ளூர் மக்களை வெறும் “தகவல் தருபவர்கள்” (Informants) என்று குறிப்பிடாமல், அவர்களை “நூலாசிரியர்கள்” (Authors/Masters) என்றே கௌரவித்துக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலின் மிக முக்கியமான வரலாற்று அம்சம், அதன் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள சான்றொப்பங்கள் (Declarations) தான். இதில் இட்டி அச்சுதன் தனது கைப்பட எழுதிய சான்றொப்பம் உலகப் புகழ்பெற்றது. முதல் தொகுதியில் (Volume 1) இட்டி அச்சுதனின் சான்றொப்பம் இடம்பெற்றுள்ளது. இட்டி அச்சுதன் இதனைத் தனது சொந்த மொழியான மலையாளத்தில், அக்காலகட்டத்தின் வரிவடிவமான ‘கோலெழுத்து’ முறையில் எழுதினார்.

 1675 ஏப்ரல் 20-ம் தேதியிட்ட அந்தச் சானறொப்பத்தில், வான் ரீடியின் வேண்டுகோளின்படி மலபார் காடுகளில் உள்ள தாவரங்களின் மருத்துவக் குணங்களையும், பெயர்களையும் தனது குடும்பப் பாரம்பரிய வைத்திய ஏடுகளின் அடிப்படையில் உண்மையாகத் தெரிவித்துள்ளதாகக் இட்டி அச்சுதன் கையொப்பமிட்டுள்ளார். இட்டி அச்சுதனின் அந்த எழுத்துதான், ஒரு இந்தியத் தாவரவியலாளரின் அறிவு ஐரோப்பிய அறிவியல் நூலில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.

அச்சுப்பிரசுரம் அறிமுகமாகியிருந்த அந்தத் தொடக்கக் காலத்தில், அவருடைய கையொப்பமும் குறிப்புகளுமே அந்தப் பிரம்மாண்டமான நூலில் முதல் மலையாள அச்சுப் பதிவுகளாக அமைந்தன.

இட்டி அச்சுதனுடன் பணியாற்றிய மற்ற மூன்று கொங்கணி பிராமணர்களும் அதே முதல் தொகுதியிலேயே தங்களது சான்றொப்பங்களை சமஸ்கிருத மொழியில், தேவநாகரி வரிவடிவத்தில் எழுதியிருக்கின்றனர்.

ஹார்டஸ் மலபாரிகஸ் எத்தனை பிரதிகள் உருவாக்கப்பட்டன என்னும் துல்லியமான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஐரோப்பாவின் முக்கிய  நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்காகச் சில நூறு பிரதிகள் அச்சடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் தாவரவியல் ஆய்வு மையங்களில் இதன் அசல் பிரதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த 12 தொகுதிகளில் பல  ஐரோப்பாவின் டச்சு இளவரசர்கள், ஆம்ஸ்டர்டாம் நகர மேயர்கள் மற்றும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின்  உயர்மட்ட அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இது அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டது.  

முதல் தொகுதி  டச்சு குடியரசின் ஆட்சியாளர்களுக்கும் மற்றும் இளவரசர் வில்லியம் III அவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் தொகுதி ஆம்ஸ்டர்டாம் நகரின் மேயர்களுக்கும்  டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் இயக்குநர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. முதல் தொகுதியின் ஒரு பிரதி, திருவனந்தபுரத்தில் உள்ள அவிட்டம் திருநாள் நூலகத்தில் (Sri Chithira Thirunal Granthasala) இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வான் ரீடி தனது நூலின் மூன்றாவது தொகுதியை  கொச்சி ராஜா வீர கேரள வர்மாவுக்கு அர்ப்பணித்தார். இந்த மூன்றாம் தொகுதியில்தான் வான் ரீடி, மலபார் காடுகளின் அழகு மற்றும் அங்குள்ள தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து மிகவும் உணர்ச்சிகரமான ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறார்.

‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ எந்த அளவுக்குத் துல்லியமாக இருந்தது என்றால், பிற்காலத்தில் தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், தனது வகைப்பாட்டியலை உருவாக்கியபோது இந்த நூலைப் பயன்படுத்திக் கொண்டார். அதைக் கொண்டே நூற்றுக்கணக்கான தாவரங்களுக்கு அவர் இருசொற் பெயரிட்டு (Binomial Nomenclature) வகைப்படுத்தினார். ஒரே ஒரு பக்கத்தில் அந்தத் தாவரத்தின் இலை, மலர், கனி, விதை ஆகியவற்றைப் படம் வரைந்து காட்டியதன் மூலம், ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கே தாவரங்களை ஆவணப்படுத்துதலில் ஒரு வழிகாட்டுதலையும் அந்த ஆவணம் செய்தது. 

காலனி ஆதிக்கத்திற்குப் பல்லாண்டுகள் முன்பாகவே, இந்தியாவில் இருந்த தாவரங்கள் குறித்த மரபார்ந்த அறிவுக்கும் மேற்கத்திய அறிவியலுக்கும் ஒரு பாலமாக ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ திகழ்ந்தது. வரலாற்றிலேயே மலையாள மொழி முதன்முதலில் அச்சில் ஏறியது இந்த நூலின் மூலமாகத்தான். தாவரவியல் ரீதியாக மட்டுமல்லாமல், மொழியியலாளர்களுக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகப் புழக்கத்தில் இருந்த மொழியைப் பற்றிய ஒரு நேரடி ஆவணமாக ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ இன்றைக்கும் இருக்கிறது.

‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ நூலை அடிப்படையாகக் கொண்டு கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்டஸ்மலபாரிகஸ் பூங்கா திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செருதுருத்தி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார்  30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்கா, அந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள 742 தாவரங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இங்கு 1,700-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. குறிப்பாக, அந்த 12 தொகுதிகளில் இட்டி அச்சுதன் அடையாளம் காட்டிய பெரும்பாலான மூலிகைகள் மற்றும் மரங்களை இங்கே நேரிடையாகக் காணலாம

7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அடர்ந்த காடு போன்ற  ரீடியம் என்னும் பகுதி பறவைகளைப் பார்ப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரிய வகைத் தாவரங்களைக் கொண்ட பழமையான பகுதி மலபார் தோட்டம் எனப்பெயரிடபட்டிருக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் இயற்கையுடனான தொடர்பையும் விளக்கும் ஒரு பகுதியாக இப்பூங்காவில் .யோகினி கோயில் அமைந்திருக்கிறது.  

இந்த யோகினி கோவில், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல;  தாவரவியலையும் கலாச்சாரத்தையும் இணைக்கும் ஒரு அற்புதமான இடமாகும். அங்கே அவ்ழிபடு தெய்வமாக தஷபுஷ்பதேவதைகள் இருக்கிறார்கள்.

தசபுஷ்பம் என்பது கேரளாவின் பாரம்பரியத்தில்  பத்து மூலிகைத் தாவரங்களின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துடன் தொடர்புடையவை .(கருக , முயல் செவியன் , திருதாளி , நிலப்பனை, கைய்யுண்ணி, விஷ்ணுகிராந்தி, பூவாங்குருன்னல், முக்குட்டி , உழிஞை ,செருபூளை.)

இந்தப் பூங்காவின் நுழைவாயிலில் அந்தமானுக்குச் சொந்தமான கொடிமூங்கில் படர்ந்திருக்கும் மாமரத்தடியில், வான் ரீடியின் மார்பளவு சிலை இருக்கிறது. 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பூங்காவின் ஒரு பகுதி வான் ரீடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு-ஜெர்மன் தாவரவியலாளரான கார்ல் லூத்விக் ப்ளூம் (Karl Ludwig Blume), ஒரு முக்கியமான ஒப்பீட்டை முன்வைத்தார். 17-ம் நூற்றாண்டிலேயே லின்னேயஸ் (Linnaeus) போன்ற உலகப் புகழ் பெற்ற தாவரவியலாளர்களுக்கு இணையான அறிவை அச்சுதன் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி, உலகம் லின்னேயஸைத் “தாவர வகைப்பாட்டியலின் தந்தை” என்று கொண்டாடும் வேளையில், அதற்கு நிகரான அறிவைக் கொண்டிருந்த அச்சுதனை வரலாறு மறைத்துவிட்டதை அல்லது மறந்துவிட்டதை ஒரு வரலாற்றுத் துரோகம் என்றார் அவர்.

அச்சுதனின் பெருமையை நிலைநாட்ட விரும்பிய ப்ளூம், ஒரு தாவரப் பேரினத்திற்கு ‘அச்சுடேமியா’ (Genus Achudemia) என்று பெயரிட்டு அவரை கௌரவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பாக ஹோர்டஸ் மலபாரிகஸ் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த தாவரங்களைத் தேடும் பணியைத் தாவரவியலாளர்கள் மேற்கொண்டனர். நவீன டி.என்.ஏ பார்கோடிங் (DNA Barcoding) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தத் தாவரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடையாளம் கண்டறியப்பட்டன.  

ஹோர்டஸ் மலபாரிகஸ் ஆவணத்தைத் சுமார் 30 ஆண்டுகள் கடுமையாக முயன்று, லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் முழுமையாக மொழிபெயர்த்த டாக்டர் கே. எஸ். மணிலால் அவர்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த மாபெரும் படைப்பை அவர்  அந்த மூல ஆவணத்தின் நாயகனான இட்டி அச்சுதனுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பு நூலின் முதல் பிரதியானது, இட்டி அச்சுதனின் பூர்வீகமான சேர்த்தலையில் வசிக்கும் அவருடைய நான்காவது தலைமுறை வாரிசுகளிடமே வழங்கப்பட்டது. ஒரு எளிய வைத்தியரின் அறிவுக்கு, நூற்றாண்டுகள் கடந்த பிறகு ஒரு நவீன கால அறிஞர் செய்த மிகச்சிறந்த கௌரவம் இது.

இட்டி அச்சுதனின் இறுதிக்காலம் கொச்சியில்தான் கழிந்தது என்றாலும், அவரது மறைவு குறித்த எந்தத் தகவலும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரது சொந்த கிராமமான கடக்கரைப்பள்ளியில், அவர் டச்சுக்காரர்களால் கப்பல் வழியாக நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயண வழியில் கப்பல் விபத்தில் உயிரிழந்தார் என்றும்;  அவர் ஐரோப்பா சென்றடைந்து அங்குள்ள கடும் குளிரால் நோய்வாய்ப்பட்டு அங்கேயே இறந்தார் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.  ஆனால், 1675 முதல் 1700 வரையிலான  ஐரோப்பாவிற்குச்சென்ற கப்பல் பயணிகளின் பட்டியலில் ‘இட்டி அச்சுதன்’ என்றோ அல்லது ‘வைத்தியர்’ என்றோ ஒரு பெயரும் இல்லை என்பதை மணிலால் தெரிவிக்கிறார். எனவே, அவரது மரணம் இன்றும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.

 ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒரு பெரிய பிரம்புக் கூடையில் போட்டு, தன் பக்கத்து வீட்டிலிருந்த கொங்கணி பிராமணக் குடும்பத்திடம் பத்திரமாகப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டு, தான் தேசாந்திரம் போவதாகச் சொல்லிச் சென்றவர், பின்னர் ஊர் திரும்பவே இல்லை என்றும்  கொச்சிப்பகுதியில் தகவல் சொல்லப்படுகின்றது.

ஒருவேளை ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ உருவாக்கப்பட்ட பிறகு, மேலும் தாவரங்களைத் தேடி  அச்சுதன் ஒரு நீண்ட பயணம் சென்றிருக்கலாம் அல்லது ஏதேனும் அடர் காட்டில் மூலிகைகளைத் தேடிச் செல்கையில் உயிரிழந்திருக்கலாம். ஆனால், அவருக்குப் பிறகு அக்குடும்பத்தின் வைத்திய மரபின் சரடு அறுந்து போனது.

வான் ரீடிக்கு அச்சுதன் உதவிய பனை ஓலைச் சுவடிகள் 1963-ல் முற்றிலுமாக அழிந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக பிரம்புக் கூடையில் அவர் பக்கத்துவீட்டுக்குக் கொடுத்தனுப்பிய ஓலைச் சுவடிகள் மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

இட்டி அச்சுதனுக்குத் திருமணம் நடந்ததா, அவரது மனைவி மற்றும் மக்கள் யார் என்பது போன்ற தகவல்களை இன்று வரை அறிந்து கொள்ள முடியவில்லை. 

இட்டி அச்சுதனின் சொந்த வீட்டையும், மூலிகைப்பூங்கா அமைந்திருந்த  நிலத்தையும், அவரது  நான்காம் தலைமுறை வழித்தோன்றலான புஷ்கரன் கடன் சுமையின் காரணமாக இரண்டு வங்கிகளில் அடமானம் வைத்திருந்தார். நிலத்தை மீட்க முடியாமல் புஷ்கரன் தற்கொலை செய்து கொண்டார். புஷ்கரனின் மனைவி உமாயம்மாவும் குழந்தைகளும் இப்போது கடனில் இருக்கும் அந்த நிலத்தின் பின்புறமாக வசிக்கிறார்கள்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மருந்துகள் தயாரித்துக் கொண்டிருந்த  குரியால எனபப்டும் அந்தச் சிறு குடிசையின் முன்பாக, அவருக்கென்று ஒரு அகல் விளக்கு நாள்தோறும் அவரது அடுத்தடுத்த தலைமுறை உறவினர்களால் இன்றளவும் மாலையில் ஏற்றப்படுகிறது.

சிறிய மரவீடான அது மிகவும் சிதைந்து போய் அழியும் விளிம்பில் இருக்கிறது.

உமாயம்மாவிற்கு ‘ஹோர்டஸ் மலபாரிகஸ்’ என்னும் பெயரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், அவரது முன்னோர்களில் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய புகழ்பெற்ற வைத்தியராக இருந்து, வெளிநாட்டவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, கப்பல் பயணத்தின் போது இறந்தார் என்பது மட்டும்தான் இன்றும் நெதர்லாந்திலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள் என்கிறார் உமாயம்மா

வான் ரீடி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பிரான்சினா (Francina) என்னும் டச்சு-மலபார் பெண்ணை மகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். பிரான்சினா, ரீடியின் இறுதி காலம் வரை அவருடன் இருந்தார். ரீடி மரணமடைந்து அவரது உடல் சூரத்தில் அடக்கம் செய்யப்பட்டபோது பிரான்சினா உடனிருந்தார்.

இலங்கையிலிருந்து சூரத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு கடற்பயணத்தின் இடையில், வான் ரீடி 1691-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று மும்பைக் கடற்கரைக்கு அருகே கப்பலில் மரணமடைந்தார். அதிகாரபூர்வமாக அவரது திடீர் மரணத்திற்குக் காரணம் அம்மை நோய் என்று சொல்லப்பட்டாலும், நேர்மையாக இருந்து பலரின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக்கொண்ட ரீடிற்கு, கப்பலில் நஞ்சூட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

சூரத்தின் மாபெரும் டச்சுக் கல்லறைத்தோட்டத்தில் உள்ள மிகப்பெரிய கல்லறையில், ‘இந்தியத் தாவரவியலின் தந்தை’ எனச் சொல்லுமளவிற்குத் தாவரங்களை ஆவணப்படுத்திய   ரீடிஉறங்குகிறார்.

இட்டி அச்சுதனும் ரீடியும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தாவரங்கள் மீதான ஆர்வம் அவர்களை நண்பர்களாக்கியது. ஒருவரிடம் அனுபவ அறிவும், இன்னொருவரிடம் அதை உலகிற்குச் சொல்லும் வசதியும் இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஹார்டஸ்மலபாரிகஸ் என்னும் அரிய தாவரவியல் தொகுப்பு காலத்தைக் கடந்த ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கிறது. இவர்கள் இருவரின்  மரணமும்  மர்மமாகவே இருக்கிறது.

செம்பருத்தி செம்பருத்தி!

1760-களின் இறுதியில் HMS Endeavour கப்பல் தென்பசிஃபிக் கடலின் மனிதவாசம் படாத பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப்பயணத்தினூடே பழங்குடியினரின் வாழ்விடங்களில் மட்டும் இருந்த செம்பருத்திச் செடியின் விதைகளும் மேற்கத்திய உலகிற்குப் பயணித்தன. 

நம் வீடுகளில் எளிமையாக வளர்ந்து கொண்டிருக்கும் செம்பருத்தி வெறும் தாவரவியல் அற்புதம்  மட்டுமல்ல; அது மனிதத் தேவைகளுக்கும், அந்தத் தேவைகளைத் தீர்ப்பதன் மூலம் தாங்களின் வாழ்வையும் பரவலையும் உறுதிசெய்துகொண்ட  தாவரங்களின் நுண்ணறிவிற்கும் இடையே காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு உயிரியல் ஒப்பந்தமும் கூட.

1769-ல் கேப்டன் ஜேம்ஸ் குக்கும் அவரது கப்பலின் தாவரவியலாளரான ஜோசப் பேங்க்ஸும் தஹிதி தீவில் நுழைந்தார்கள். அவர்களுக்கு அழகிய செம்பருத்தி மலர்களால் ஆன மாலைகளை அணிவித்து அத்தீவின் பழங்குடியினர் வரவேற்பு அளித்தார்கள். மலர்களில் அழகென்றால் ரோஜாதான் என்று அறிந்திருந்த அவர்களுக்கு, இரத்தச் சிவப்பில் மிகப்பெரியதாக இருந்த, மலரின் நடுவில் இருந்து சிறு கம்பி போல நீட்டிக்கொண்டிருந்த மகரந்தக் குழாயுடன் கூடிய அந்த அழகிய மலர் பெரிய தாவரவியல் அதிசயமாகத் தெரிந்தது.

அதை தஹிதி தீவுவாசிகள் ‘கட்டுமர மலர்’ என அழைத்தார்கள். அவர்களின் முன்னோர்களின் கடற்பயணங்களில் கட்டுமரங்களில் அவர்களின் பயணத் துணையாக எப்போதும் இருந்ததால், அம்மலருக்கு அப்பெயர் வந்திருந்தது.

அக்காலத்தில் கடற்பயணங்களில்  உணவுக்காக சேம்பு, கறிப்பலா, மற்றும் வாழை  ஆகியவற்றைப் போலவே,  மருத்துவ உபயோகங்கள் கொண்டிருந்த, அடர்நிறச்  சாயம் அளித்த செம்பருத்தியும்  தவறாமல் கொண்டு செல்லப்பட்டது. கடற்பயணங்களில், கரையொதுங்கிய பல  தீவுகளிலிருந்த  மலர்ச் செடிகளில் செம்பருத்திச்செடியின் ஆதிப்பயிர் கடற்பயணிகளால்  கலப்பினச் சோதனைகளுக்கு உட்பட்டிருக்கலாம்.  நீண்டகாலப்பயணத்துக்குப்பிறகு இவை இந்தியா மற்றும் சீனாவை வந்து சேர்ந்தபோது, மனிதர்களால் முழுமையாக மேம்படுத்தப்பட்ட ஒரு பயிரிடு வகையாக (Cultigen) இப்போதிருக்கும் செம்பருத்திச்செடியாக  மாறியிருக்கக் கூடும்.

குக்கும் பேங்க்ஸும் அந்த மலர்ச்செடி அந்தத் தீவின் காடுகளில் எங்கும் வளர்ந்திருக்கவில்லை என்பதை அறிந்தார்கள். அந்தத் தீவுவாசிகளால் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகிக்கும் ஒரு மலராக அது இருந்ததையும் அவர்கள் கவனித்தார்கள்.

கப்பல் குழுவினர் தஹிதியில் தங்கியிருந்த காலத்தில், அத்தீவுவாசிகள் மரவுரி ஆடைகளில் பிற தீவினரைப் போல சாயக் கற்கள் அல்லது கரியைக் கொண்டு சாயமிடாமல், செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கற்களுக்கடியில் வைத்து நசுக்கிப் பிழிந்து கிடைக்கும் சிவப்புச் சாற்றை, சிறிது நேரத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறம் கொண்டு விடும்போது அதைக்கொண்டு மரவுரிகளுக்குச் சாயமிடுவதை குக்கின் குழுவினர் அதிசயமாகக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே சாயத்தைப் பெண்கள் புருவங்களுக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக்கொள்வதும் குக்கினால் ஆவணப்படுத்தப்பட்டது.

குக் மற்றும் பேங்க்ஸ் வரைந்த நேர்த்தியான செம்பருத்திச் செடியின், மலரின் சித்திரங்களும், அவர்கள் சேகரித்த செம்பருத்திச் செடியின் உலர் தாவரங்களும், விதைகளும் கியூ ராயல் தாவரவியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்தன. பின்னர் உலகின் பல பாகங்களுக்கும் செம்பருத்தி அறிமுகமானது.

செம்பருத்தி மலர் ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. அந்த அழகிய மலர்ச்செடி பசிஃபிக் பகுதியினரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதையும், செம்பருத்தி ஒரு ‘மனிதப்பயிரிடு வகை’ என்பதையும், மனிதர்களால் அவர்களின் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வளர்க்கப்படும், காட்டு மூதாதையர்கள் ஏதுமில்லாத ஒரு தாவரம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகள் எதிலும் செம்பருத்தியின் காட்டு மூதாதையர்கள் இல்லை. எனவே, இவை இந்தியாவையோ அல்லது அந்த நாடுகளையோ பூர்வீகமாகக் கொண்டிருக்க முடியாது. இந்தியப் பெருங்கடல் தீவுகளில் இருந்த H. liliiflorus மற்றும் H. schizopetalus ஆகிய இரு இனங்களின் அழகிய மலர்களைக் கண்ட பண்டைய மாலுமிகள், கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கியவையே இன்றைய செம்பருத்தியின் மூதாதையர்களாக இருக்கக்கூடும். காட்டு மூதாதையர்கள் மட்டுமல்ல, புதைபடிம எச்சங்களும் (Fossils) செம்பருத்திக்கு இல்லை என்பது, இது ஒரு பயிரிடு வகை (Cultigen) என்பதற்குச் சான்றாகும்.

ஜேம்ஸ் குக்கினால் கண்டுபிடிக்கப்பட்ட செம்பருத்தி, பின்னர் வெகுவேகமாக உலகெங்குமே பெருகிப் பரவியது. தொடக்க நாட்களில் குக் ஆவணப்படுத்தியதிலிருந்து, கடற்பயணத் துணையான செம்பருத்தியின் பயன் உலகெங்குமே பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

விழியை இழந்த தாவரவியலாளர் ஜார்ஜ் ஈபர்ஹார்ட் ரம்பீயஸ் (Georg Eberhard Rumphius), 17-ம் நூற்றாண்டில் செம்பருத்திச் சாற்றை அம்போன் தீவுப் பெண்கள் கண் புருவம் மற்றும் தலைமுடிக்குச் சாயமேற்றப் பயன்படுத்துவதைத் தனது Herbarium Amboinense என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

செம்பருத்தி அக்காலத்தில் அழகுத் தாவரமாக மட்டுமல்லாமல், அதன் மருத்துவக் குணங்கள் கொண்ட பிசுபிசுப்பான திரவம், சாயம் மற்றும் தண்டின் நார் போன்றவற்றுக்காகச் சாகுபடி செய்யப்பட்ட ஒரு பணப்பயிராகவே இருந்தது.

உண்மையில் செம்பருத்தி குக்கினால் கண்டுபிடிக்கப்பட்டு உலகளாவிய பயன்பாட்டுக்கு வந்தது என்பது வெறும் தற்செயலான ஒரு தாவரக் கண்டுபிடிப்புத்தான். உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து தாவரப் பொறியியல் மற்றும் கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட, அழகுக்கும் தாவரஅறிவியலுக்குமான உலகளாவிய குறியீடாகவே செம்பருத்தி இன்றுவரை இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் செம்பருத்திக்கென மிகத் தனித்துவமான ஒரு இடம் இருக்கிறது.

கூடவே செம்பருத்தித் தாவரத்தின் புத்திசாலித்தனமும் வியக்கவைக்கும் ஒன்று. மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நறுக்கப்பட்ட தண்டு (Stem cuttings) மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, இயற்கையாகவே வளர்ந்த செம்பருத்திச் செடிகள் மலர்களை உருவாக்கி, மகரந்தச் சேர்க்கையாளர்களைக் கவர்ந்து, பாலினப் பெருக்கம் செய்து விதைகளை உருவாக்கின. விதைகளை உருவாக்கச் செம்பருத்திச் செடிக்கு, பிற செடிகளைப் போலவே ஏராளமான ஆற்றல் தேவைப்பட்டது. உருவாகும் விதைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்து, சந்ததிகளின் வாழ்வை உறுதிப்படுத்தவும் ஆற்றல் தேவைப்பட்டது.

ஆனால் செம்பருத்தி ஒரு பயிரிடு இனமாக மனிதர்களால் மாற்றப்பட்ட பிறகு, அது பாலினப் பெருக்கத்திற்குச் செலவழித்த, 20 விதைகள் கொண்ட கனியை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றல்  அப்படியே மீதமானது. பலமுறை கலப்பினச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதால், 4, 6 அல்லது சில சமயங்களில் 8 ஜோடி குரோமோசோம்களைக் (Polyploidy) கொண்ட செடியாக இருந்ததால், வீரியம் அதிகமுள்ள அதிக வெப்பம் உள்ளிட்ட பல சூழல் சிக்கல்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டிருந்த ஒரு செடியாக மாறிய செம்பருத்திக்கு  விதைகள் உருவாகாத மலட்டுத்தன்மையும் உண்டானது.

தானாகவே மலட்டுத்தன்மையை உருவாக்கிக்கொண்ட செம்பருத்திச் செடியிலிருந்து முளைதிறன் இல்லாத விதைகள் சிறிது காலம் உருவாகின. பிற்பாடு தனது புத்திசாலித்தனத்தினால், முளைக்காத விதைகளை அளிக்கத் தேவைப்பட்ட ஆற்றலை, மலர்களை மிக அழகாகவும் மிகப் பெரியதாகவும் உருவாக்குவதற்குச் செலவழித்து கனிகள் உருவாக்கத்தை நிறுத்திக்கொண்டது செம்பருத்தி. 

மனிதர்களின் மலர்களுக்கான ஆசையைத் தூண்டி, அதன் மூலம் தனது இனப்பெருக்கத்தையும் சந்ததிப்பரவலையும் உறுதி செய்துகொண்டது செம்பருத்தி.

செம்பருத்திச் செடி தனது அழகான, பெரிய வண்ணமயமான மலர்களையும், மருத்துவப் பயனுள்ள வழுவழுப்புத் தன்மையையும் மனிதர்களைத் தன்பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு உத்தியாகக் கையாண்டது. 

“நான் உங்களுக்கு அழகையும் பயன்களையும் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் என்னை அழிந்துபோகாமல் அடுத்தடுத்த இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்னும் ஒரு உயிரியல் ஒப்பந்தத்தின் மூலம் இன்றுவரை உலகின் மிக விரும்பப்படும் பாலிலா இனப்பெருக்கம் மூலம் பரவும் செடியாகச் செம்பருத்தி இருக்கிறது.

தனது இனப்பெருக்கத்திற்கு விதைகளை நம்பியிருக்காமல் மனிதனின் தேவையையும் ஆசையையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் பரவிய தாவரங்களில் செம்பருத்தி முதன்மையானது. கடற்பயணங்களில் தேவைப்படும் மருந்துகளுக்கும் சாயத்துக்கும் மிக அவசியமானதொரு செடியாக இருந்ததன் மூலம் தனது கடல்வழிப் பயணத்தையும் செம்பருத்தி உறுதி செய்துகொண்டது.

இதன் புத்திசாலித்தனத்திற்கு இன்னும் ஒரு உதாரணமாகச் செம்பருத்திச் செடி ஒரு ‘பேக்-அப்’ (Back-up) உத்தியையும் வைத்திருக்கிறது. ஒருவேளை மனிதர்களுக்குச் செம்பருத்தியின் மீதான ஆசையோ தேவையோ அற்றுப் போனாலும், மீண்டும் பழையபடி விதைகளை உருவாக்கும் திறனையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. இதை அவ்வப்போது நம் வீடுகளில் இருக்கும் செம்பருத்திச் செடிகள் கனிகளை உருவாக்குவதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

செம்பருத்தி எப்படி விதைகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டுத் தண்டுகள் மூலம் பரவி உலகின் ராணியாக இருக்கிறதோ, அதேபோல மக்காச்சோளமும் மிகத் தடிமனாகவும், பல அடுக்குகளாகவும் இருந்த தனது கதிர் உறையை மெலிதாகவும். எண்ணிக்கை குறைவாகவும் மாற்றி, அதற்குத் தேவைப்பட்ட ஆற்றலைக் கதிர்மணிகளின் நிறம் மற்றும் அளவை அதிகரிக்கப் பயன்படுத்திக்கொண்ட பயிர். மக்காச்சோளமும் மனிதர்கள் இல்லாவிட்டால் உலகெங்கும் பரவ முடியாத ஒரு பயிர். தனித்தன்மை வாய்ந்த மிகப்பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டுச் சோளத்தை (Teosinte), பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் தொடர்ந்து கலப்பின ஆய்வுகளுக்கு உட்படுத்தியதால், விதைகளுக்கான சதவீதத்தை அதிகரித்துக் கொண்ட ஒரு பயிர் இது. 

கடினமான பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டு வாழைப்பழங்களிலிருந்துதான் மனிதர்கள் தொடர்ந்து கலப்பின சோதனைகள் செய்து பார்த்து, மிகச்சிறிய மென்மையான விதைகளும் அதிக சுவையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும் இன்றைய வாழைப்பழத்தை உருவாக்கினார்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ப்ரோக்கலி, என்று இப்படியான கல்டிஜென்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்தத் தாவரங்களின் உயிரியல் ஒப்பந்தம் அவற்றின் தாவரப் புத்திசாலித்தனத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. தங்களுக்கென இருக்கும் பிரத்யேக உயிர்வாழும் உத்தியினால் மனிதர்களுடன் இணைந்து, அவர்களின் வாழ்வியலில் ஒரு தனித்துவமான, பிரத்யேகமான, நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளன இந்தத் தாவரங்கள்.

Hibiscus rosa-sinensis என்னும் தாவரவியல் பெயர் கொண்டியிருக்கும் செம்பருத்தி, இப்போது உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஒரு சாகுபடி மலர். ‘சீனச் செம்பருத்தி’ அல்லது ‘ஷூ பிளாக் பிளாண்ட்’ (Shoeblack plant) என்று அழைக்கப்படும் செம்பருத்தி, பருத்தியின் குடும்பமான மால்வேசியை (Malvaceae) சேர்ந்தது. இது 1.5 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமைமாறாப் புதர்ச் செடி. மிக வளமான நிலங்களில் ஒரு குறுமரமாகவும் வளரும் இயல்பு கொண்டது.

பல்லாண்டுகளாகச் செம்பருத்தி இதழ்களின் வழுவழுப்பான சாற்றைக் கொண்டு, செயற்கை பாலிஷ் கண்டுபிடிக்கப்படும் வரை ஷூக்களைப் பாலிஷ் செய்யப் பயன்படுத்தியதால், இந்தச் செம்பருத்திக்கு ‘ஷூ பிளாக் பிளாண்ட்’  என்று பெயர் வந்தது.

இதன் இலைகள் பளபளப்பாகவும், முட்டை வடிவிலும், விளிம்புகளில் ரம்பம் போன்ற அமைப்பையும் கொண்டவை. இதன் மலர்கள் பொதுவாகச் சிவப்பு மற்றும் பல அழகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. மலர்கள் 10–15 செ.மீ விட்டம் கொண்டவை; ஐந்து இதழ்கள் மற்றும் ஒரு நீளமான மகரந்தத் தூணைக் (Staminal column) கொண்டவை.

இது ஆண்டு முழுவதும் பூத்தாலும், அரிதாகவே கனிகளை உருவாக்குகிறது. அவ்வாறு உருவாகும் முட்டை வடிவக் கனிகள், ஐந்து பகுதிகளாகப் பிரிந்து, 20 விதைகள் வரை கொண்டிருக்கும். வெப்பமண்டலக் காலநிலையில் செழித்து வளரும் இத்தாவரம், முழுமையான சூரிய ஒளியை விரும்புகிறது. 

ஐரோப்பிய ஆய்வாளர்கள் சீனக் கோவில்களுக்கு அருகில் இதன் பல சாகுபடி வகைகளைக் கண்டறிந்தனர். எனவே இதன் பூர்வீகத்தை உறுதி செய்துகொள்ளாமல், தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், 1753-ம் ஆண்டில் (லின்னேயஸின் Species Plantarum வெளியானது 1753-ல் தான்) இதற்கு அதிகாரப்பூர்வமாக Hibiscus rosa-sinensis என்று பெயரிட்டார்.

இந்த பிழையான பெயரிடலை 18-ம் நூற்றாண்டின் கடற்பயணங்கள் எப்படி நவீனத் தாவரவியலை வடிவமைத்தன என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். லின்னேயஸ் ஒருவேளை மலர்ந்த புத்தம் புதிய செம்பருத்தியைப் பார்த்திருப்பாரேயானால், அதன் மகரந்தத் தூணைப் பார்த்து அது ரோஜாக்களில் ஒன்றல்ல என்பதை எளிதில் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், சீனத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் வந்த தாவரங்களில் ஒன்றாகச் செம்பருத்தி இருந்ததாலும் அவரிடம் வந்து சேர்ந்த போது மலர்கள் வாடித்துவண்டு போயிருந்ததாலும், லின்னேயஸ் அதைச் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவரம் எனக் கருதினார். பிற்பாடு அறிவியலாளர்கள் இதன் கொடிவழியைத் தேடிச் சென்று, செம்பருத்தி மொரிஷியஸ் தீவுகளுக்கு அருகில் இருக்கும் மஸ்கரீன் தீவுகளைச் (Mascarene Islands) சேர்ந்தது என்று கண்டறிந்தார்கள்.

அந்தத் தீவுகளிலிருந்துதான் கடற்பயணங்களின் வழியாக, ஐரோப்பியத் தாவரவியலாளர்கள் மற்றும் கடற்பயணிகளால் பார்க்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மற்றும் சீனாவிற்கு இது அறிமுகமாகியிருக்க வேண்டும்.

கேப்டன் குக்கிற்குப் பிறகு, 1731-ல் பிலிப் மில்லர் (Philip Miller) இதனை இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் இதன் உலகளாவியப் பரவல் வேகம் எடுத்தது. 1810-ல் ஜான் ரீவ்ஸ் (John Reeves) சீனக் கலைஞர்களைக் கொண்டு இதன் பல்வேறு வகைகளை ஆவணப்படுத்தினார்.

1900-களின் தொடக்கத்தில் புதிய கலப்பினங்களை உருவாக்குவதில் ஹவாய் முக்கியப் பங்காற்றியது. 1923-இல் செம்பருத்தி ஹவாயின் மாநில மலராக மாறியது. 1950-களில் ‘அமெரிக்கன் ஹைபிஸ்கஸ் சொசைட்டி’ (American Hibiscus Society) உருவாக்கப்பட்ட பிறகு, இதன் வகைகள் தரப்படுத்தப்பட்டு இன்று உலகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இன்றைய நவீன செம்பருத்திகளின் மரபணுத் தளம் எட்டு அசல் இனங்களைக் கொண்டது. இவற்றிலிருந்தே ஆயிரக்கணக்கான செம்பருத்தி வகைகள் உருவாக்கப்படுகின்றன:

  • மொரிஷியஸ்: H. fragilis, H. genevii, H. liliiflorus
  • மடகாஸ்கர்: H. schizopetalus
  • ஹவாய்: H. arnottianus, H. kokio
  • பிஜி: H. storckii
  • சீனா/இந்தியா: H. rosa-sinensis

அலங்கார அழகைத் தாண்டி, இது இயற்கைச் சாயத்துக்காகவும், பாரம்பரிய மருத்துவத்திலும், தேநீர் தயாரிப்பிலும், நிலப்பரப்பு வடிவமைப்பிலும் (Landscaping) பயன்படுகிறது. இந்தியாவில் காளி தேவிக்கு உகந்த புனித மலராகவும், ஹவாயில் அழகின் அடையாளமாகவும், பல்வேறு கலாச்சாரச் சடங்குகளிலும் இது ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில், மனநலம் குன்றியவர்களுக்கு அதன் இயற்கையான அமைதிப்படுத்தும் (Natural Calmative), பதற்ற எதிர்ப்பு (Anti-Anxiety) மற்றும் மனச்சோர்வு எதிர்ப்பு (Antidepressant) இயல்புகளினால் செம்பருத்தி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, கேரளாவில் “காதில் செம்பருத்தி வைப்பது” (செவியில் செம்பருத்தி வைப்பது) என்பது, தமிழில் “தலையில் எலுமிச்சை தேய்த்துக்கொள்வது” என்னும் சொலவடையைப் போல, மனநலம் குன்றியதைக் குறிக்கும் கிண்டலாக இருக்கிறது.

1958-ல் மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர், தேசிய மலரைத் தேர்வு செய்ய மல்லிகை, தாமரை மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட ஏழு மலர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இவற்றில் அனைத்து வீடுகளிலும் எளிதாக வளரும், மிக அழகிய மலர்களைக் கொண்டிருப்பதோடு, மக்களையும் இணைக்கும் ஒரு காரணியாகச் செம்பருத்தி இருந்ததால், அதுவே தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் ஐந்து முக்கியக் கொள்கைகளுக்கான குறியீடாக செம்பருத்தியின் ஐந்து இதழ்கள் கருதப்படுகின்றன. “Bunga Raya” என்பது மலாய் மொழியில் தேசிய மலரான சிவப்புச் செம்பருத்தி மலரைக் குறிக்கும்.

பல பண்டைய இந்திய நூல்களில் செம்பருத்தி ‘ஜப புஷ்பம்’ (Japa Kusuma) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியக் கடவுளுக்கான ‘ஆதித்ய ஹ்ருதயம்’ நூலின் முதல் வரி:

“Japa Kusuma Sankarsham” – “செம்பருத்தியைப் போல் ஒளிர்பவனே!” எனச் சூரியனைப் போற்றுகிறது.

பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் சிவனுக்கான மலராக ‘ருத்ர புஷ்பம்’ எனச் செம்பருத்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டில் உருவான சுஸ்ருத மற்றும் சரக சம்ஹிதைகளில், செம்பருத்தி ‘பித்த தோஷ’ சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பண்டைய சித்த மருத்துவ நூல்களும் தலைமுடி அலசிக் குளிக்கவும், தலைமுடி கருப்பாக இருக்கவும் செம்பருத்தியைப் பரிந்துரைக்கின்றன.

பண்டைய சீனத்தில் மண்பாண்டங்களில் செம்பருத்தியின் சித்திரங்கள் அதிகமாக வரையப்பட்டன. சீனக் கவிதைகளிலும் செம்பருத்திக்கு முக்கியமான இடமிருந்தது.  பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு 16-ம் நூற்றாண்டில் (1578-ல் நிறைவுபெற்ற) சீன மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான மற்றும் விரிவான தாவரவியல் கலைக்களஞ்சியமான ‘பென்காவ் காங்மு’ (Bencao Gangmu), புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளரான லி ஷிஜென் (Li Shizhen) என்பவரால் தொகுக்கப்பட்டது. இந்த மூலிகை மருத்துவ நூலில், ஐரோப்பியர்களால் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்பே செம்பருத்திச் சாற்றின் கூந்தல் ஆரோக்கியம் மற்றும் நிறம் தரும் பண்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதன் இதழ்களைச் சாப்பிடுவது இளமையைத் தக்கவைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

தாவரமும் மனிதனும் ஒன்றையொன்று சார்ந்து பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் இணைப் பரிணாமக் கொள்கைக்கான (Co-evolution) மிகச்சிறந்த உதாரணம் செம்பருத்திதான். ஒரு தாவரம் தனது உயிர்வாழ்தல் மற்றும் பரவலுக்காக மனிதனைப் பயன்படுத்துகிறது; மனிதன் தனது தேவைக்காகத் தாவரத்தைப் பயன்படுத்துகிறான். இது ஒரு உயிரியல் ஒப்பந்தம் மட்டுமல்ல, “கொடுத்தல்-வாங்கல்” (Mutualistic contract) ஒப்பந்தமும்கூட.

விதைகளை நம்பியிருக்காமல், தாவரத்தின் தண்டுப்பகுதியைக் (Stem cuttings) கொண்டு புதிய செம்பருத்திச் செடிகள் உருவாக்கப்படுவதால், அந்தத் தாவரத்தின் அசல் மரபணுக்கள் மாறாமல் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு கடற்பயணி தனது கட்டுமரத்தில் எடுத்து வந்த அதே செம்பருத்தியின் மரபணுவை, இன்று நம் தோட்டத்தில் உள்ள செடியிலும் காண முடியும்.

“பரவுக” என்னும் கட்டளை ஒவ்வொரு தாவரத்திற்கும் இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளையின்படி, சொந்த நிலமற்ற ஒரு மலர்ச்செடி  மனிதர்களை உபயோகித்துக்கொண்டு உலகெங்கிலும் பரவி இருப்பது எப்பேற்பட்ட ஒரு ஆச்சரியம்.

மாதொருபாகன் மிளகாய்!

சமீபகாலங்களில் இணையச் செய்திகள் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இணைய ஊடகங்களுக்கு அடிமையாவதும் மிக விரைவாக நடக்கிறது. எல்லோரும் எல்லாத் துறைகளிலும் கருத்துச் சொல்லி, அது பரவி ஆயிரக்கணக்கிலான அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லாமல் அது நம்பவும், கடைபிடிக்கப்படவும் செய்கிறது. தாவரவியல் பிழைகளில் மட்டும் நான் ஒருசில சமயங்களில் தாங்க முடியாமல் இடைபடுகிறேன்.

காந்தள் மலர்ச் செடியின் (Gloriosa superba) ஆங்கில V வடிவக் கிழங்குகளின் நச்சுத்தன்மையைக் குறித்து எதுவுமறியாத யாரோ ஒருவர், அதன் கிழங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என வாட்ஸ்அப்பில் சொல்ல, அதை நம்பிய ஓர் ஆம்பூர் இளைஞர் போன வருடம் அப்படியே செய்து உயிரிழந்தார்.

நான் இளங்கலை தாவரவியல் படிக்கையில் என்னுடன் இருந்த சில நண்பர்கள் ஒரு புலனக்குழுமம் (whats app Group) தொடங்கி அதில் என்னையும் இணைத்திருந்தார்கள். ஒரு சமயம் ஒரு நண்பர் அதில் சைகஸ் (Cycas) ஆண் கூம்பின் படத்தைப் பகிர்ந்து, இது மேருமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் “சிவலிங்க மலர்”, அனைவரும் வழிபட்டு தொழுது முடிந்த வரை பலருக்கும் பகிரவும் என்னும் செய்தியைப் படத்தோடு (அவருக்கு எங்கிருந்தோ வந்ததை) பகிர்ந்திருந்தார்.

நான் சும்மா இருக்க முடியாமல், “அது நாமெல்லோருமே படித்த ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperm) வகையைச் சார்ந்த, ஒரு கூம்புத் தாவரமான சைகஸின் மேல் கூம்பு (Male cone). நம் லேபில் கூட ஃபார்மலினில் ஊறிக்கொண்டு அது இன்னும் இருக்கிறது” என்று சொல்லி, அப்படிச் சிவலிங்கப் பூ என்று ஒன்றுமில்லை என்றும், உலகில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூக்களும் எங்குமில்லை என்றும் விளக்கினேன். தாவரங்கள் Annual, Biennial, Perennial, Monocarpous வகைகள்தாம் என்று விளக்கிய பின், குழுவில் மரண அமைதி.

பிற்பாடு அவர்கள் என்னிடம் பேசுவதை மெல்ல மெல்ல நிறுத்திவிட்டார்கள். நான் துறைத் தலைவரானதற்கு சம்பிரதாயமாக ஒரு விருந்து கேட்டார்கள். நான் மகிழ்ந்து அளிப்பதாகச் சொன்ன பின்னரும், அவர்கள் என்ன காரணத்தாலோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி அதை தவிர்த்தார்கள் நானும் விட்டுவிட்டேன்.அறிதலுக்கான வாயில்கள் அனைத்தையும் மூடிப் பூட்டி, சாவியை எங்கோ வீசி எறிபவர்களிடம் நான் என்னதான் சொல்வது?

இப்போது இன்ஸ்டாவில் யார் யாரோ தவறான தாவரவியல் தகவல்கள், அற்புதங்கள், மருந்துகள், சடங்குகளைச் சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஒரு தாத்தா பயங்கர ‘டாக்ஸிக்’ (Toxic). எருக்கின் பயன்களை எல்லாம் சொல்லிவிட்டு, அதன் காயை அரைத்துக் குடிக்கலாம் என்று ஒருநாள் சொன்னார். கமெண்ட்டில் “தாத்தா, ஏன் கொலைப்பழிக்கு ஆளாகிறீர்கள்? எருக்கை உள்மருந்தாக அப்படிப் பயன்படுத்தவே கூடாது” என்று பதிவிட்டேன். யாரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஜகஜ்ஜோதியாக ஒரு அம்மா பட்டுப்புடவை, பெரிய மூக்குத்தி, நகைகளுடன் வருவார்கள். வீட்டுக்கு முன்னால் எந்தச் செடியெல்லாம் வைக்கக்கூடாது, எது ‘நெகட்டிவ்’ ஆற்றல் அளித்து வாழ்வை நாசமாக்கும் என்று சொல்லுவார்கள். நான் பார்த்த அன்று வெற்றிலைக்கொடி வைத்தால் வீடு பாழாய்ப்போகும் என்றார்கள். என்னென்னவெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்! கம்பிகட்டும் கதையெல்லாம் .

இப்போது இன்ஸ்டாவில் அதிகமாக வருவது குடைமிளகாயின் ஆண்-பெண் வித்தியாசம் என்னும் ஒரு புளுகு. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய் பெண்ணாம், அது இனிக்குமாம், அதைச் சாலட்களில் அப்படியே சாப்பிடலாமாம்; மூன்று மடிப்புகள் இருப்பது ஆணாம், அதைச் சமைத்துச் சாப்பிட வேண்டுமாம்.

குடைமிளகாய் என்னும் கனி, இருபால் மலரொன்று கருவுற்று உருவாவது. மலரில்தான் பாலினமெல்லாம் கனிகளில் அப்படி எதுவும் இல்லவே இல்லை. மேலும் கனியில் அதில் எத்தனை மடிப்புகள் இருந்தாலும் சுவையோ சத்தோ வேறுபடாது. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய்களில் அதிக இடமிருப்பதால் அதிக விதைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம். எப்படி இப்படியெல்லாம் யோசித்துப் புளுகுகிறார்கள்?

தாவரவியல் ரீதியாக, குடைமிளகாயின் இந்த மடிப்புகளின் (Lobes) எண்ணிக்கை மிளகாய்க்கு மிளகாய் மாறுபடுவதற்குப் பாலினம் காரணம் அல்ல; மலரின் சூலக இலைகளின் எண்ணிக்கைதான் (Carpels) காரணம்.

குடைமிளகாயைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், உள்ளே விதைகள் ஒட்டியிருக்கும் அறைகளைக் (Chambers) பார்க்கலாம். பூவின் பெண் பாகமான சூலகத்தில் உள்ள “சூலக இலைகள்” (Carpels) எனப்படும் பகுதிகளே இந்த அறைகளாக மாறுகின்றன. ஒரு பூ உருவாகும்போதே அதன் சூலகத்தில் எத்தனை இலைகள் இணைகின்றனவோ, அத்தனை மடிப்புகள் கனியில் உருவாகும். பூவில் 3 Carpels இருந்தால் 3 மடிப்புகளும், 4 Carpels இருந்தால் 4 மடிப்புகளும் உருவாகும்.

மேலும், மடிப்புகளின் எண்ணிக்கை பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட மிளகாய் விதையின் வகையைப் பொறுத்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 மடிப்புகள் கொண்ட பெரிய, சதுர வடிவிலான குடைமிளகாய்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் 4 மடிப்புகள் தரும்படி மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட (Bred) விதைகளையே அதிகம் பயிரிடுகின்றனர். சிறிய குடைமிளகாய் வகைகளில் இயற்கையிலேயே 2 அல்லது 3 மடிப்புகள் மட்டுமே இருக்கும்.

ஒரே செடியிலேயே 3 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம், 4 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம்! (இந்தச் செடிக்கு நம் புளுகு மூட்டைகள் ‘மாதொருபாகன் மிளகாய்’ என்று பெயர் வைத்தாலும் வைக்கக்கூடும்).

இதெல்லாம் தப்புத்தப்பாக நன்றாகச்செய்வார்கள் ஆனால் பப்பாளியின் ஆண் மரத்தை மலட்டுமரமென்று வெட்டிவீசுவார்கள் ஒரு பெண் அந்த மலட்டு? மலர்களை முட்டைப்பொரியல் போல் செய்து சாப்பிடும் ரெசிபியை இன்ஸ்டாவில் சொல்லிக்கொடுக்கிறார். அநியாயத்துக்கு அளவேயில்லை,

அப்பாடா! ஒரு இன்ஸ்டா புளுகுக்கே ஒரு பதிவு போட வேண்டும் என்றால், தினம் எத்தனை போடுவது? முடியலை!

பசுமை; மாறாததும், மாறியதும்!

அகராதிப்பணியின் நிறைவில் இருக்கிறேன். ஒரு சில பொருத்தமான எளிய சித்திரங்களையும் ஆங்காங்கே கட்டங்களிட்டு முக்கியத்தகவல்களையும், சில சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

தினமும் மிகப்புதிதான அறிதல்கள் கிடைக்கின்றன. அப்படி இன்றைய அறிதல் evergreen x ailophyllus என்பது குறித்தது.

பொதுவாகவே கூம்புக்காடுகளின் பூவாத்தாவரங்களான பைன் , ஃபிர், ஜூனிபர், குப்ரெஸெஸ் , யூ செடார் போன்றவற்றை இதுநாள் வரையிலும் evergreen என்றே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் மிகச்சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவை எவர்க்ரீன் வகைமரங்கள் அல்ல.

Ever green என்பவை மாமரம் போல வருடம் முழுவதும் அதன் canopy எனப்படும் இலைப்பரப்பு முழுவதுமாக ’இல்லாமல் போகாமல்’, முற்றிலும் வெறுமையாகாமல் வருடா வருடம் பழைய முதிர்ந்த இலைகள் உதிர உதிர, புதுத்தளிர்கள் உருவாகிக்கொண்டெ இருக்கும் வகை மரங்கள்,

பைன் போன்றவைகளை ever green என்றல்லாமல் Aiophyllous என்றே குறிப்பிடவேண்டும். அவற்றின் ஊசி இலைகள் பல்லாண்டுகள் வாழும். இந்தச்சொல் மரத்தின் இலையுதிர்க்கும் இயல்பை அல்லாமல், நீண்ட காலம் உயிர்வாழும் இலையின் இயல்பைக்குறிப்பிடுவது.

உதாரணமாக பைன் மரத்தின் ஊசியிலை சுமார் 30 வருடங்கள் வரை அந்தக் கிளையில் ஒளிச்சேர்க்கையையும், நீர் கடத்துதலையும் ஆரோக்கியமாகச்செய்தபடி உயிருடன் இருக்கும். எனவே ஊசி இலைகளின் இந்த நீடித்திருக்கும் இயல்பு தாவரவியல் ரீதியாக அம்மரத்தை Aiophyllous என்கிறது.

இதோடு இன்னுமொரு திருத்தமும் இருக்கிறது. பண்டைய கிரேக்கச்சொல்லான Aio என்பதற்கு “always” அல்லது “ever.” என்று பொருள். உண்மையில் Aiophyllous என்னும் சொல்தான் சரியானது. எப்படியோ மொழியியல் பிழையினால் இது Ailophyllous ஆகியிருக்கக்கூடும். ஏனெனில் Ailo என்பது Allo என்னும் கிரேக்கச்சொல்லின் மருவூ. Allo என்பது மாற்று அல்லது மற்ற – other என்று பொருள் கொண்டது.

ஏறக்குறைய 35 ஆண்டுகளாக பசுமைமாறாதவை பைன் மரங்கள் என்றும் gymnosperms are evergreen என்றும் கொண்டிருந்த அறிதல் உடைந்து அத்தனுடன் கூடவே குறிப்பிட அதற்கென Ailophyllous என்னும் பிரத்யேகச் சொல் இருப்பதை அறிந்துகொண்டதில் பெரும் ஆச்சர்யம் உண்டாயிருக்கிறது.

எனவே கூம்புத்தாவரங்களை Evergreen என்று மட்டுமல்ல இலைகளின் நீடித்திருக்கும் இயலபைக்குறிப்பிட்டு Ailophyllous என்றும் குறிப்பிட வேண்டும்.

Evergreen vs. Ailophyllous: Botanical Leaf Cycles

Evergreen: This is a general ecological term for a plant that appears green throughout the year by replacing its leaves gradually. The canopy is never bare, but individual leaves may only live for a single year before being swapped for new ones.

Example: The Mango tree (Mangifera indica). It maintains a green canopy year-round, but it is constantly shedding old leaves and growing new ones in a continuous cycle.

Aiophyllous: This is a specific botanical term for a plant whose individual leaves are biologically long-lived, often persisting for several years or even decades. It refers to the “permanent” nature of the leaf itself rather than just the look of the tree.

Example: The Bristlecone Pine (Pinus longaeva). Not only is it evergreen, but its specific needles (leaves) are truly aiophyllous, as a single needle can remain functional and attached to the branch for 20 to 30 years.

Correct Term: Aiophyllous (ai + phyll + us) — “Always-leaved.”

Common Error: Ailophyllous — This would literally translate to “other-leaved” or “different-leaved” (which would actually be Allophyllous).

இன்னுமொன்றும் குறிப்பிடுகிறேன். phyllous -phyllus இந்த இரண்டு சொற்களும் எங்கெங்கு எப்படி குறிப்பிடப்படவேண்டுமென்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

phyllous if you are describing how a plant grows (the trait);\

“The aiophyllous trees of the Western Ghats remain vibrant throughout the year.”

-phyllus if you are writing the scientific name of the plant (the identity);

“The researcher identified the specimen as Rhododendron microphyllus.”

’’கற்றல் எல்லையற்றது. கற்கப்படுவது எதுவாயினும் எந்நோக்கம் கொண்டதாயினும் கல்வி என எழுந்து வந்து முன்னிற்பது முடிவிலியாகிய பிரம்மமே” – வெண்முரசு.

செர்ரி மலருக்குக் கொண்டாட்டம்!

JMC எனப்படும் ஜப்பான் வானிலைக் கூட்டுஸ்தாபனம் (Japan Meteorological Corporation) ஒவ்வொரு வருடமும் செர்ரி மலரும் காலம் மற்றும் இலையுதிர் கால வண்ணங்கள் போன்றவற்றை முன்னறிவிக்கிறது. இந்த முன்னறிவிப்புகள் ஜப்பானிய மொழியில் மட்டுமல்லாது, தமிழ் போன்ற பிற மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த வருடத்திற்கான செர்ரி மலர்கள் மலரத் துவங்குகிற, மரம் முழுவதும் மலர்ந்திருக்கும் காலங்களை ஜப்பானின் முக்கிய நகரங்களில் கணித்து, 23.1.26 அன்று செர்ரி மலரும் முன்னறிவிப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வருட வெப்பம் சற்று உயர்ந்திருப்பதால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செர்ரி மலர்களின் peak flowering காலம் 7-லிருந்து 10-நாட்கள் வரைதான் இருக்குமென்பதால் உலகெங்கிலும் இருந்து ஜப்பானுக்கு செர்ரி மலர்க் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தைத் திட்டமிட வசதியாகத்தான் இந்த முன்னறிப்பு வெளியிடப்படுகிறது.

பொதுவாக மார்ச், ஏப்ரலில் நிகழும் செர்ரி கொண்டாட்டத்துக்குச் சற்று முன்னதாக, பிப்ரவரியில் Kawazu-zakura என்றழைக்கப்படும் அடர் சிவப்பு செர்ரி மலர்கள் மட்டும் டோக்கியோவின் தென் பகுதிகளில் மலர்ந்திருக்கும்.

உலகெங்கிலும் அனைத்து நாகரீகங்களிலும் வசந்த கால மலர்க் கொண்டாட்டங்கள் வெறும் காட்சி இன்பத்திற்காக மட்டுமன்றி, நல்ல அறுவடை, செழுமை மற்றும் இயற்கையின் மறுபிறப்பை உறுதிப்படுத்தும் முக்கியச் சடங்குகளாகவே பண்டைய காலத்திலிருந்து நடைபெறுகின்றன.

பண்டைய தமிழ் நாள்காட்டிகளில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் ‘இளவேனில்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன, பல்வேறு கொண்டாட்டங்களும் அக்காலத்தில் நிகழ்ந்தன. சங்கப் பாடல்கள் வேங்கை மலர்வதைத் திருமணத்திற்கு உகந்த நேரமாகக் குறிப்பிட்டன. ஈழத்தில் பாலைமரங்கள் மலர்வதைக்காண்பது ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

மல்லிகை ஏராளமாக மலர்கையில் நடக்கும் மதுரையின் பிரபல சித்திரைத் திருவிழா, வாழ்க்கையின் சுவைகளை உணர்த்தும் தமிழ்/தெலுங்குப் புத்தாண்டின் வேப்பம்பூ பச்சடி மற்றும் நிலத்தின் வெப்பத்தைத் தணிக்க அம்மனுக்குக் கோடைக்காலங்களில் செய்யப்படும் பூச்சொரிதல் விழா ஆகியவை பண்டைய மலர்த்திருவிழாக்களின் நீட்சியாகத்தான் இன்றும் தொடர்கின்றன.

பண்டைய ரோமானிய மற்றும் ஐரோப்பியச் சடங்குகள்

ரோமானியர்கள் பயிர்களைக் காக்க மலர் தேவதைகளை வழிபட்டனர் :

புளோராலியா (Floralia) என்னும் விழா அவர்களின் மலர்த் தேவதையான ‘புளோரா’வுக்காக ஏப்ரல் இறுதியில் நடத்தப்பட்டது. மக்கள் பல வண்ண ஆடைகளை அணிந்து, மலர்களைச் சூடிக்கொண்டு செழுமையின் அடையாளமாக முயல்களை வீதிகளில் ஓடவிட்டும், அறுவடை நன்கு நடைபெற பீன்ஸ்களைத் தெருவில் வீசி எறிந்தும் கொண்டாடினார்கள்.

ரோசாலியா (Rosalia) என்னும் மற்றுமோர் கொண்டாட்டம் ரோஜாக்கள் ஏராளமாக மலர்கையில் முன்னோர்களை நினைவுகூர நடத்தப்பட்ட வழிபாட்டுடன் இணைந்த கொண்டாட்டமாக அங்கு இருந்தது.

இவற்றோடு பண்டைய கிரேக்கத்தின் மது மற்றும் மலர் விழாவான ஆன்தெஸ்டீரியா, கெல்டிக் மக்களின் நெருப்பு மற்றும் நெருப்பு வண்ண மஞ்சள் மலர் வழிபாடான பெல்டேன் மற்றும் தார்கேலியா ஆகியவையும் முக்கியமானவை.

ட்யூலிப் மலர்த் திருவிழா

இன்று நெதர்லாந்துடன் இணைத்துப் பேசப்படும் ட்யூலிப் மலர்களின் பூர்வீகம் மத்திய ஆசியா மற்றும் துருக்கி… துருக்கிய சுல்தான்கள் தங்கள் தலைப்பாகையில் (Turban) அணிந்ததால், பாரசீகச் சொல்லான ‘டல்பாண்ட்’ என்பது மருவி ‘ட்யூலிப்’ ஆனது.

1634–1637- ல் நெதர்லாந்தில் ஒரு ட்யூலிப் கிழங்கின் விலை ஒரு மாளிகையின் விலைக்கு நிகராக உயர்ந்தது. இதுவே வரலாற்றின் முதல் பொருளாதாரக் குமிழியாகக் கருதப்படும் ட்யூலிப் மேனியா. 1949-லிருந்து நெதர்லாந்தின் பிரம்மாண்ட மலர் பூங்காவான கியூகென்ஹாஃப்-ல் ஒவ்வொரு ஆண்டும் நவீன ட்யூலிப் திருவிழா நடைபெறுகிறது.

1953-லிருந்து கனடாவில் இரண்டாம் உலகப் போரில் உதவியதற்காக நெதர்லாந்து கனடாவிற்கு வழங்கிய நன்றிப் பரிசான ஒரு மில்லியன் ட்யூலிப் மலர்களுக்கான நன்றி தெரிவிக்கும் ட்யூலிப் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டத்திலும் வருடா வருடம் பிரமாண்டமாக ட்யூலிப் விழா கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் ஒரு சிறு பனிப்பொழிவு கூட விளைச்சலைப் பாதிக்கும் என்பதால், மலர்களைப் பாதுகாப்பது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகக் கருதப்பட்டது. இன்று அவை சுற்றுலா மற்றும் நட்புறவின் அடையாளமாக மாறினாலும், அவற்றின் அடிப்படை நோக்கம் இயற்கையின் செழுமையைக் கொண்டாடுவதுதான்.

ஜப்பானில் வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் (Cherry Blossoms) பூத்துக் குலுங்குவதைக் கொண்டாடும் நிகழ்வு ‘ஹனாமி’ (Hanami) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ‘ஹனா’ என்றால் மலர், ‘மி’ என்றால் பார்ப்பது என்று பொருள். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஜப்பானிய கலாச்சாரத்தின் ஆன்மாவோடு கலந்த ஒரு பாரம்பரியம்.

சகுரா கொண்டாட்டத்தின் வேர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை: இம்மரங்கள் வருடா வருடம் பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாகப் பூத்துக்குலுங்கிப் பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தைச் சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

கி.பி. 710–794 இல் ஜப்பானியர்கள் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் ப்ளம் மரங்களின் ‘உமே’ (Ume) மலர்கள் மலருகையில் அந்தக் காலத்தைச் சிறு விழாவாகக் கொண்டாடினர்.

ஹீயன் காலத்தில்தான் (794–1185) சகுரா மலர்கள் முக்கியத்துவம் பெற்றன. கி.பி. 812-ல் பேரரசர் சாகா கியோட்டோவில் உள்ள அரச மாளிகையில் முதன்முதலில் சகுரா மலர் பார்க்கும் விருந்தை நடத்தினார். அதுவே இன்றைய ஹனாமி திருவிழாவின் தொடக்கமாக அமைந்தது.

பண்டைய ஜப்பானிய விவசாயிகள், செர்ரி மரங்களில் ‘காமி’ (Kami) எனப்படும் தெய்வங்கள் வசிப்பதாக நம்பினர். மலர்கள் பூப்பதை வைத்து அந்த ஆண்டின் அறுவடை எப்படி இருக்கும் என்று அவர்கள் கணித்தனர்.

சகுரா மலர்கள் மிகக் குறுகிய காலமே (சுமார் ஒரு வாரம்) பூத்திருக்கும். இது மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிப்பதாக சாமுராய்கள் கருதினர். “வாழும் போது அழகாக வாழ்ந்து, வீழும் போது கௌரவமாக வீழ வேண்டும்” என்ற தத்துவத்தை இம்மலர்கள் அவர்களுக்கு உணர்த்துவதாக நம்பப்பட்டதால் ஹனமி கொண்டாட்டம் ஜப்பானின் பிரிக்கமுடியாத அங்கமானது.

இன்று சகுரா திருவிழா ஜப்பான் முழுவதும் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது :

செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. காட்டுச்செர்ரியான–Prunus avium என்பதுதான் செர்ரிப் பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம். ஜப்பானியர்கள் செர்ரியின் காட்டு மூதாதைகளிடமிருந்து பல நூறு கலப்பின செர்ரி வகைகளை அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர். (ப்ளம் மரங்களான Prunus mume செர்ரி மரங்களிலிருந்து வேறுபட்டது, இரண்டும் ஒன்றல்ல).

செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும். ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும் வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக (sato zakura) சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள் யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை யேசகுரா (yaezakura) என்றும் அழைக்கப்படுகின்றன. இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862-ல் ஜப்பானிலிருந்து வட அமெரிக்காவிற்கு G.R. Hall என்பவர் கொண்டு வந்த பின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata எனப்படும் மலர்களுக்கான செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவைத் தாயகமாகக் கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம் 26–39 அடி வரை வளரும். இம்மரத்தின் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரங்கள் (lenticels) நிறைந்தும் காணப்படும். இலைகள் ஓரங்களில் பற்கள் போன்ற அமைப்புடன் எதிரடுக்கில் நீள்முட்டை வடிவிலிருக்கும்.

மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மி.மீ அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன.

சகுரா மலர்கள் என்றாலே இளஞ்சிவப்பு நிறம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஜப்பானில் 200-க்கும் மேற்பட்ட சகுரா வகைகள் உள்ளன. சில பூக்கள் வெண்மையாகவும், சில அடர் சிவப்பாகவும், ‘கியோய்கோ’ (Gyoiko) என்ற வகை சகுரா பச்சை நிறத்திலும் பூக்கும்.

ஜப்பானில் பள்ளி மற்றும் அலுவலகங்களின் ‘புதிய ஆண்டு’ ஏப்ரல் மாதத்தில்தான் தொடங்குகிறது. சகுரா மலர்கள் பூக்கும் அதே நேரத்தில் இந்தப் புதிய தொடக்கமும் அமைவதால், இது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்குகிறது. பகலில் மலர்களைப் பார்ப்பது ஒரு ரகம் என்றால், இரவில் பார்ப்பது தனி அழகு. பூங்காக்களில் ஆயிரக்கணக்கான காகித விளக்குகள் (Paper Lanterns) ஏற்றப்படும். நிலவொளியிலும், செயற்கை விளக்கு ஒளியிலும் சகுரா பூக்கள் மின்னுவதை ’யோசகுரா’ (Yozakura – இரவு அழகு) என்று அழைக்கிறார்கள்.

ஜப்பானில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு: “ஹனா யோரி டாங்கோ”. இதன் பொருள், “மலர்களை ரசிப்பதை விட, அங்கு விற்கப்படும் இனிப்புப் பலகாரங்களை (Dango) உண்பதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்பதாகும். கொண்டாட்டங்களில் உணவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது குறிப்பிடுகிறது.

ஹனாமி சிறப்பு உணவுகள்

  ஹனாமி டாங்கோ (Hanami Dango): இது இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இனிப்பு உருண்டைகள். இவை வசந்த காலம், பனிக்காலம் மற்றும் வரவிருக்கும் கோடை காலத்தைக் குறிக்கின்றன.

  சகுரா மோச்சி (Sakura Mochi): இளஞ்சிவப்பு நிற அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே இனிப்பு பீன்ஸ் பேஸ்ட் வைக்கப்பட்டிருக்கும். இது உப்பில் நனைக்கப்பட்ட சகுரா இலையினால் சுற்றப்பட்டிருக்கும்.

  சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகளும் இதே பெயரில் இருக்கின்றன.

  ஜப்பானியர்கள் ‘சாகே’ (Sake) எனப்படும் அரிசி மதுவில் செர்ரி மலர்களை மிதக்கவிட்டு அருந்திக் கொண்டே மலர்களை ரசிப்பார்கள்.

  சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேநீர், சோயா பால் மற்றும் கோலா.

  Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு, பொறித்த காய்கறிகள், போன்றவை இருக்கும் மதிய உணவுப்பெட்டி.

  Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால், சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்.

  மஞ்சள் கலந்த குடிநீர்.

சகுரா இதழ்கள் காற்றில் விழுவதைப் பார்ப்பதற்கு “இளஞ்சிவப்பு பனிப்பொழிவு” (Sakura Fubuki) போல இருக்கும். ஜப்பானியக் கவிதைகளில் இது வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கும் ஒரு அழகான குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும் காலத்தில், நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படுகிறது.

ஹனமியின் போது பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்குக் கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். ஹனமி கொண்டாட்டத்தின் போது பிரபலமான பூங்காக்களில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். அலுவலகத்தின் இளநிலை ஊழியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகாலையிலேயே சென்று ‘ப்ளூ ஷீட்’ எனப்படும் நீல நிற விரிப்பை விரித்து இடம் பிடித்துக் காத்திருப்பார்கள்.

ஹனாமி பெண்டோ எனப்படும் பிரத்யேகமான உணவுப் பெட்டிகள் தயார் செய்யப்படும். இதில் வண்ணமயமான சுஷி, காய்கறிகள் மற்றும் மீன் உணவுகள் இருக்கும். இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும் ஓய்வெடுத்தும் மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்.

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக் காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.

இங்கு 100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பல நாடன் பாடல்களும், பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் காலத்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுப்புத்தகங்கள், குடைகள், அலங்காரப் பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

நதிகள் மற்றும் ஏரிக்கரைகளில் உள்ள சகுரா மரங்களை ரசிக்க மக்கள் படகு சவாரி செய்வார்கள். உதாரணமாக, டோக்கியோவின் சிடோரிகாபுச்சி (Chidorigafuchi) போன்ற இடங்களில் படகில் சென்று கொண்டே மலர்களைப் பார்ப்பது மிகவும் பிரபலம்.

ஜப்பானியர்கள் கொண்டாட்டத்தின் போதும் சில விதிகளைத் தவறாமல் பின்பற்றுவார்கள் :

  தங்களின் குப்பைகளைத் தாங்களே வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் போட வேண்டும்.

  மரக்கிளைகளை ஒடிக்கவோ அல்லது பூக்களைப் பறிக்கவோ கூடாது. மரங்களின் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றின் மீது மிதிக்காமல் அமர வேண்டும். ஆகியவை மிக அடிப்படையான விதிகள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா, வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் மேகாலயாவில் Prunus cerasoides வகைச் செர்ரிமரங்களின் மலர்தல் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

சகுரா மலரும் ஹனமி கொண்டாட்டம் முடிந்த பிறகு, ஜப்பானின் நிலப்பரப்பையே இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும் மற்றொரு பிரமாண்டமான மலர்க் கொண்டாட்டமான ஷிபாசகுரா நடைபெறுகிறது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் ஜப்பான் சென்றால், இந்த ஷிபாசகுரா திருவிழாவைக் கண்டு மகிழலாம்.


ஷிபாசகுரா விழாவில் கொண்டாடப்படுவது ‘மாஸ் பிளாக்ஸ்’ (Moss Phlox) என அழைக்கப்படும் Phlox subulata என்னும் தரையை ஒட்டி அதிகபட்சமாக 10 செ.மீ உயரம் மட்டுமே வளரும், ஒரு கம்பளம் போலப் படர்ந்து வளரும் ஒரு தரை படர்த் தாவரத்தின் இளஞ்சிவப்பு மலரைத்தான். இந்தத் தாவரம் ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்டதல்ல; இது வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஜப்பானிய மொழியில் ‘ஷிபா’ என்றால் புல்வெளி என்று பொருள். இந்த மலர்களும் மரங்களில் பூக்கும் சகுரா மலர்களைப் போலவே இருப்பதால், இது ‘புல்வெளி சகுரா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திருவிழாக்களில் சுமார் 8-வகை பிளாக்ஸ் மலர்கள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக:

  McDaniel’s Cushion: அடர் இளஞ்சிவப்பு நிறம்.
  Mont-blanc: தூய வெள்ளை நிறம்.
  Autumn Rose: மென்மையான ரோஜா நிறம்.
  Oakington Blue-eye: நீல நிறச் சாயல் கொண்ட மலர்.

இது ஜப்பானின் இயல் தாவரமில்லையென்றாலும் இந்த மலர்தலும் ஜப்பானின் வசந்த கால அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஹனமி கொண்டாட்டங்களின் போதே வயோலா மலர்களும் ஜப்பானியப் பூங்காக்களில் நிறைந்து மலர்ந்து கண்ணைக் கவரும்.

பண்டைய ரோமின் ஆரவாரமான ‘புளோராலியா’ முதல் ஜப்பானின் அமைதியான ‘ஹனாமி’ மற்றும் நவீன கால ‘ட்யூலிப்’ திருவிழாக்கள் வரை, மனிதகுலம் மலர்களை வெறும் அழகிற்காக மட்டும் கொண்டாடவில்லை; அவை வாழ்வின் நம்பிக்கையையும், மறுபிறப்பையும் குறிக்கும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. காலப்போக்கில் இந்தச் சடங்குகளின் தீவிரம் குறைந்து அதன் வடிவங்கள் மாறிவிட்டிருந்தாலும், இயற்கையின் அழகிய மாற்றங்களை ரசிப்பதும், நிலத்தின் வளமைக்கு நன்றி செலுத்துவதும் இன்றும் மாறாமல் உள்ளன.

2026-ல் நிகழவிருக்கும் சகுரா மற்றும் ஷிபாசகுரா போன்ற திருவிழாக்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பை மீண்டும் புதுப்பிக்கும் ஒரு பாலமாக அமைகின்றன. மலர்ந்து உதிரும் ஒவ்வொரு இதழும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்—வாழ்க்கை நிலையற்றது, எனவே மலரும் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகக் கொண்டாடுவோம்!

பைனும் இல்லாத ஆப்பிளும் இல்லாத பைன் ஆப்பிள்!

கரீபியன் கடல் தீவு கூட்டங்களில் ஒன்றான குவாடலூப்பில் (Guadeloupe.) நவம்பர்  4,  1493’ல் தனது இரண்டாம் பயணத்தின் போது வந்திறங்கிய கொலம்பஸுக்கு அத்தீவின் ஆதிகுடிகள்  உணவளித்து வரவேற்றார்கள். அவரது முதல் பயணத்தின் படுகொலைகள் ஏற்கனவே அத்தீவுக்கூட்டங்களில் அறியப்பட்டிருந்ததால் அங்கு கொலம்பஸுக்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை. 

அவர்கள் அளித்த ஒரு வகைச் சாறு நிரம்பிய புளிப்பும் இனிப்புமான பழமொன்று கொலம்பஸ் அதுவரை கண்டிராத  சுவை கொண்டிருந்தது. ஆதிகுடிகள் அதை ‘பழம்’ என்னும் பொருளில்  நனாஸ் அல்லது  ’மிகச் சிறந்த பழமென்னும்’ பொருளில் அனானஸ் (Ananas) என்றும் அழைத்தனர். (துபி மொழியில்).  அப்பழம் கடினமாக உச்சியில் கூர்நுனி கொண்ட சிற்றிலைகளுடன் பொன்மஞ்சள் நிறத்தில் இருந்தது.   

அப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதுவும் கொலம்பஸுக்கு அளிக்கப்பட்டது, அச்சுவையில் கிறங்கிய கொலம்பஸ்  அந்த பழம் கிடைக்கும் செடியை  காணச்சென்றார். நான்கடி உயரத்தில், வாள் போன்ற விறைப்பான இலைகளுடன் மத்தியில் கிரீடம் போன்ற சிற்றிலைக் கொத்துக்களுடன் பழங்களை கொண்டிருந்த அச்செடி ஆதிகுடிகளால்  சாகுபடி செய்யப்பட்டு கொண்டிருந்ததையும், ஒவ்வொரு குடிசை வாசலிலும் அப்பழம் வரவேற்பின் அடையாளமாக தொங்கவிடப் பட்டிருப்பதையும்  கண்டார்.  

கொலம்பஸ் அங்கிருந்து அக்கனியின் விதைகளையும்  தன்னுடன் வந்திருந்த 17 கப்பல்களில்  ஏராளமான பழுத்த கனிகளையும் ஸ்பெயினுக்கு திரும்பிச் செல்லுகையில் கொண்டு வந்தார். அவற்றுடன் அனானாஸ் என்னும் பெயரும் பயணித்தது. இன்று நாம் தமிழில் அன்னாசி என்று அழைக்கும் பைனாப்பிள் தான் அன்று கொலம்பஸால் கண்டறியப்பட்டது.

கொலம்பஸின் பால்யகால நண்பரும் இரண்டாம் கடற்பயணத்தின் போது உடனிருந்தவருமான மைக்கேல் டி குனியோ (Michael de Cuneo) //ஆர்டிசோக்கை போல இருந்த அச்செடியில் பைன் மரங்களின் கோன்களை போல தோற்றமளித்த,  அவற்றைக் காட்டிலும் இரு மடங்கு பெரிய, நல்ல ருசி கொண்ட கனிகள்,  டர்னிப்புக்களை போல கடினமான அவற்றை கத்தியால் மட்டுமே வெட்டி உண்ண முடியும். இக்கனி சத்துக்கள் நிரம்பியது//  என்று தனது பயணக் கட்டுரைகளில் முதன்முதலாக குறிப்பிட்டிருந்தார்.

நீண்ட பயணம் ஆதலால் கொலம்பஸ் கொண்டு வந்திருந்தவற்றில்  சில மட்டுமே கெட்டுப்போகாமல் இருந்தன. அந்த பழத்தை அப்போதைய இளவரசி  இஸபெல்லாவிற்கு கொலம்பஸ் பரிசளித்தார்.  அது போன்ற புதிய உணவு பொருட்களில் நஞ்சிருக்கும் என்னும் சந்தேகத்தினால் வழக்கமாக பிறர் உண்டபின்பு அரசகுடியினர் உண்பது வழக்கத்தில் இருந்தது. எனவே இளவரசியின் ஆசிரியர் பீட்டர் அதை முதலில் உண்டு ஆபத்தில்லாதது என உறுதி செய்த பின்னர் இஸபெல்லா அதை சுவைத்தார். புளிப்பும், இனிப்பும், வாசனையுமான அது அவருக்கு மிக பிரியமானதொன்றாகி விட்டது. இஸபெல்லாவின் காலையுணவில் மறுநாளிலிருந்து அவை தவறாமல் இடம் பிடித்தன

பீட்டர் தனது நாட்குறிப்பில்  ’அந்த’ நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு பழத்தை தான் சாப்பிட்டதாகவும், அது வடிவத்திலும் நிறத்திலும் ஒரு பைன் நட்டை போன்றது, செதில்களால் மூடப்பட்டது மற்றும் முலாம் பழத்தை விட உறுதியானது அதன் சுவை மற்ற அனைத்துப் பழங்களையும் விட சிறந்தது. என பதிவு செய்திருந்தார்

 அப்பழங்கள் பைன் கோன்களை போல இருந்ததால் கொலம்பஸ் அதற்கு இண்டீஸ் பைன் என்று பெயரிட்டார்.   இன்று இந்த பழம் ஆங்கிலத்தில் பைனாப்பிள் எனவும் டச்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் அனானாஸ் என்றும் அழைக்கப்படுகிறது கொலம்பஸ் அக்கனியின் விதைகளை  ஸ்பெயினில் பயிரிட்டார். எனினும் வெப்ப மண்டலப்பயிரான அது அங்கு வளரவில்லை.

அன்னாசியின் தோற்றம்:

அன்னாசியின் காட்டு மூதாதைப் பயிர்கள் பிரேசிலுக்கும் பராகுவேவிற்கும் நடுவில்  பரனா-பெராகுவே ஆற்று வடிகால்களில் வளர்ந்தன. இவற்றை வடக்கு பராகுவேயின் காருனி பழங்குடி  இந்தியர்கள் முதன் முதலாகச் சாகுபடி செய்தனர்.

அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டுச் சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில்  200 கிமு – கிபி 700  காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி  செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி  15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து. 

1400-களில் சாகுபடி செய்யப்பட்ட அன்னாசி அமெரிக்க பழங்குடியினரின் அன்றாட உணவுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது அதன் பிறகே கொலம்பஸ் அதனை கண்டறிந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்

பெயர்கள்

1577ல் கத்தோலிக்க இறைப்பணியாளரான  André Thevet’s தனது “The New Found World.” ’புதியதாக கண்டறிய பட்ட உலகம்’ என்னும்  தனது பயண அனுபவங்களின் தொகுப்பு நூலில் பைனாப்பிள் பழத்தை பற்றிய குறிப்புகள் கொடுத்திருந்தார். அவர்  அன்னாசியை குறிக்க Hoyriri, என்னும் சொல்லை உபயோகித்திருந்தார்.

முதன்முதலாக பைனாப்பிள் என்னும் ஆங்கிலச்சொல் 1398’ல் ஊசியிலை மரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது.  அன்னாசி பழத்தை முதலில் பார்த்தபோது ஐரோப்பியர்களுக்கு முட்செதில்கள் கொண்ட உருளை வடிவ அப்பழம் காண்பதற்கு  பெரிய அளவு பைன் மரக்கோன்களை போலிருந்ததால் அதையும்  பைனாப்பிள் என்றே அழைத்தனர். 1964ல் அன்னாசியின் ஆங்கில பெயர்  “pineapple” என்பது அச்சில் குறிப்பிடப்பட்டது.

ஸ்பேனிஷ்  மொழியில் இவை பைனா என்றழைக்கப்படுகின்றன  எனினும் கப்பலில் அன்று கொலம்பஸுடன் பயணித்த அனானஸ் என்பதுதான் உலகின் பல மொழிகளிலும் இதன் பெயரக இருக்கிறது. தமிழிலும் இது அன்னாசிதான். செந்தாழை என்றும் தமிழில் அன்னாசிக்கு பெயருண்டு. 

17-ம் நூற்றாண்டில் தாவரவியலாளர் சார்லஸ் ப்ளுமரால் இதன் தாவரவியல் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. சார்லஸ் அந்த தாவரத்துக்கு   Ananas aculeatus fructu ovato, carne albida. என்று பெயரிட்டார். ஸ்வீடன் தாவரவியலாளரான ப்ரோமெல்லை கெளரவப்படுத்த ப்ரோமீலியா என்னும் பேரினம் சார்லஸால் பெயரிடப் பட்டிருந்தது. பின்னர் 1753’ல் வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் Bromelia ananas/ Bromelia comosa. என அன்னாசிக்கு அறிவியல்  பெயரிட்டார்.

பிரபல அமெரிக்க தாவரவியலாளரும், ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தின் அனைத்து தாவர வகைகளையும் பதிவு செய்து ஒரு மில்லியன் உலர் தாவர சேகரிப்புக்களை வைத்திருந்த மெரில் என்பவரால் அன்னாசி (Elmer Drew Merrill)  Ananas comosus என்று இறுதியாக பெயரிடப்பட்டது.

பிரேசில் பழங்குடியினரின் துபி (Tupi) மொழியில் நனாஸ் என்றால் பைன் அல்லது பழம், காஸ்மோஸஸ் என்பது அன்னாசிச் செடியின் அடர்ந்த இலைகளை குறிக்கிறது. இதன் அடிப்படையில்தான் இந்த அறிவியல் பெயர் வைக்கப்பட்டது.

ஹவாயில் அன்னாசி ’வெளிநாட்டு பழம்’ எனும் பொருளில் ஹலா -காஹிகி (Halakahiki)  என்றழைக்கப்படுகின்றது, ஹலா என்றால் கனி, காஹிகி என்றால் வெளிநாடு. பிரேசில் மற்றும் பராகுவேயை சேர்ந்தவை என்பதால் அன்னாசி முதன் முதலாக ஹவாய்க்கு அறிமுகமான போது அவற்றை வெளிநாட்டுப் பழம் என்று அம்மக்கள்  அழைத்து அதே பெயர் இன்று வரை நிலைத்து விட்டிருக்கிறது

அன்னாசி ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்றழைக்கப்பட்டாலும் இது பைனுக்கோ அல்லது ஆப்பிளுக்கோ தொடர்புடையது அல்ல .பெரி எனப்படும் சதைப்பற்றான கனிவகையை சேர்ந்தது. coenocarpium எனப்படும் பல நுண் கனிகளின் கூட்டுக்கனிதான் அன்னாசி.

தாவரவியல் தகவல்கள்

அன்னாசியின் முதல் சித்திரம் ஸ்பெயினை சேர்ந்த ஓவியரும் தாவரவியலாளரும், வரலாற்றாய்வாளருமான ஒவியெடோவால் (Oviedo)  1535 ல் அவரது Historia General de Las Indias  என்னும் நூலில் வெளியானது.

ப்ரோமிலியேசியை சேர்ந்த அன்னாசி பல வருடங்கள் வளரும் ஒருவித்திலை பல்லாண்டுத் தாவரம். குறைந்தது 50 ஆண்டுகள் இது வளர்ந்து பலன் தரும் 

அன்னாசிச் செடி வளர்ந்து 3 வருடங்களில் தன் முதல் கனியை அளிக்கும். ஒரு வருடத்தில் ஒரு செடியில் ஒற்றை கனிதான் உருவாகும்

30-லிருந்து 40 விறைப்பான சதைப்பற்றான நெருக்கமாக அமைந்திருக்கும் வாள் போன்ற இலைகள் வட்ட அடுக்குகளில் இருக்கும். இலை நுனி ஊசி போல கூர்மையாக இருக்கும். நட்ட 20 -வது மாதத்தில் மலர்த் தண்டு செடியின் மையத்திலிருந்து உருவாகி  மஞ்சரி தோன்றும். 100லிருந்து 200 வரை சிவப்பு அல்லது இளம் ஊதா நிற தனித்தனி சிறு மலர்கள் இணைந்து ஒற்றை மஞ்சரியாக காணப்படும். அவை கருவுற்று 5 அல்லது 6 மாதங்களில் 50 லிருந்து 200  வரை இருக்கும்  ஒவ்வொரு சிறு மலரின் அடிச்சூலகங்களும் மையத்தண்டுடன் இணைந்து அன்னாசி என்னும் கூட்டுக்கனி உருவாகும் . சுமாராக ஒரு கனி 1லிருந்து 2 கிலோ எடை கொண்டிருக்கும்,

அன்னாசியின் கடினமான சொறசொறப்பான செதில்கள் கொண்டிருக்கும். வெளிப்புறம் இருக்கும் பலகோண வடிவங்கள் அனைத்தும் பழுத்த சூலகங்கள்தான். அன்னாசி விதைகளற்றது.  தென்னமெரிக்க காட்டு அன்னாசிகள் மட்டுமே இறகுகள் கொண்ட சிறு விதைகள் கொண்டவை . 

வரலாறு மற்றும்  பரவல்

கொலம்பஸ் அறிமுகப்படுத்திய பின்னர்  ஸ்பெயின் அரச குடும்பங்களில் காலை உணவுகளில் அன்னாசி தவறாமல்  இருந்தது. அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே ஐரோப்பியர்களின் பிரியத்துக்குரியதாகிய அப்பழம் அப்போதிலிருந்தே பிரபுத்துவம் மற்றும் கலைத் திறனுக்கு அடையாளமாக இருந்தது

வெப்ப மண்டலங்களில் வளரும் அன்னாசி ஐரோப்பாவின் குளிர்ந்த காலநிலைகளில் வெப்ப அறைகளில்  அதிக பொருட்செலவில் சாகுபடி செய்யப்பட்டது.  எனவே  அன்னாசி செல்வத்தின், வளமையின், செல்வாக்கின் அடையாளமாக கருதப்பட்டது மேலும் தோட்டக்கலைத்துறையாளர்களின் பெருமிதங்களில் ஒன்றாகவும் இருந்தது

ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் விருந்து மேசைகளின் மத்தியில் ஒரு ஆடம்பரப் பொருளாக அன்னாசி காட்சிப்படுத்தப்பட்டது.  அப்போது அங்கு அன்னாசி அதிக அளவில் சாகுபடி செய்ய முடியாததால் பெரும்பாலும் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டது. எனவே தங்கள் செல்வச்செழிப்பை அப்போது பலரும் இப்படி அன்னாசியை காட்சி படுத்துவதன் மூலம் காட்டிக்கொண்டர்கள். ஒரு சிலர் அன்னாசியை ஒரு மாலை விருந்துக்கு கடன் வாங்கியும் சென்றார்கள். பல சமயங்களில் காட்சிப்படுத்தப்படும் அன்னாசி உண்ணப்படாமல் அழுகிப்போகும்.

வீடுகள் பெரும் கட்டிடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகளில் எல்லாம் அன்னாசி வடிவம் தவறாமல்  இடம் பெற தொடங்கியது.

அக்காலத்தில் அன்னாசியின் சுவைக்கு பலரும் அடிமையானதற்கு அதன் இனிப்புச் சுவையே பிரதான காரணம். அக்காலத்தில் கரும்புச்சர்க்கரைக்கு மிக அதிக விலை இருந்தது எனவே இயற்கையாகவே இனிப்புச்சுவை கொண்டிருந்த அன்னாசி மக்கள் நாவில் நீங்கா இடம்பெற்றது.  அன்னாசியை பழரசமாகவும், இனிப்புகளில் சேர்த்தும் உண்டு மகிழ்ந்தார்கள்.பல சிறார் பாடல்களிலும் அன்னாசி இடம்பெற்றிருந்தது.

1500-களில் அன்னாசியின் இலைகளிருந்து நாரெடுத்து துணிகளும் பிலிப்பைன்சில் உருவாக்கப்பட்டன. 1510-ல் கோவாவுக்கு போர்ச்சுக்கீசியர்கள் அன்னாசியை அறிமுகப்படுத்தினார்கள். K T Achaya  தனது The Historical Companion to Indian Food- ‘இந்திய உணவுகளின் வரலாறு’  என்னும் நூலில் 1564- ல் இந்தியாவில் அன்னாசிப்பழங்கள் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார்

அனைவருமே ஒரு துண்டு அன்னாசியாவது சுவைக்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தனர். எனினும் அரசகுடும்பத்தினருக்கு அதில் முன்னுரிமை இருந்தது.

ஐரோப்பாவில் வெப்ப அறைகளை உருவாக்கி அவற்றில் அன்னாசி சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றது. வெப்ப அறைகளில் ஓக் மரப்பட்டைகளை அரைத்து தூளாக்கி எரித்து 27 பாகை எப்போதும் இருக்கும்படி சுவர்களின் துளைகள் வழியே வெப்பமூட்டப்பட்டது.

பலர் கரீபியன் தீவுகளுக்கு அன்னாசிகளுக்கென்றே கடற்பயணம் மேற்கொண்டார்கள். 16-ம் நூற்றண்டின் இறுதிக்குள் உலகின் வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் அன்னாசி சாகுபடி  துவங்கி இருந்தது.

 1655-ல் தென்னாப்பிரிகாவில்,16’ம் நூற்றண்டின் இறுதியில் சீனா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில்  அன்னாசி சாகுபடியானது

 1675 லிருந்து 1680,க்குள் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அவரது அரண்மனை தோட்டக்காரர் ஜான் ரோஸ் முழந்தாளிட்டு அவருக்கு அங்கு விளைந்த முதல் அன்னாசியை அளிக்கும் காட்சியை பிரபல ஓவியர்  ஹெண்ட்ரிக்கைக் (Hendrick Danckurts) கொண்டு வரைந்து காட்சிப்படுத்தினார், அதன்பிறகு அன்னாசிகள் அரசர்களின் அடையாளமாகியது  

உயர்குடி பிரிட்டன் மக்கள் வசித்த பார்ன்படோஸ் நாக்ரில் Barbados, அன்னாசி பசுங்குடில்களில் சாகுபடி செய்யபட்டது. இங்கிலாந்துக்கு சென்ற பலர்  அன்னாசியை கண்டதை பயணக்குறிப்புக்களில்  குறிப்பிட்டனர்.

இங்கிலாந்தின் இரண்டாம் வில்லியமுக்கு அளிக்கவென 1699ல் உருவாக்கப்பட்ட ஒரு வெள்ளிச் சிறு மேசையில் அழகிய அன்னாசியின் உருவம் இருந்தது.  உயர்குடியினரின் நாற்காலிகளின் மெத்தைகளில் கூட அன்னாசி உருவம் வரையப்பட்டிருக்கும் துணிகளே உபயோகப்படுத்தப்பட்டன.1700 களில் அன்னாசிக்காய்ச்சல் எங்கும் பரவி இருந்தது விக்டோரிய காலத்தில் கண்ணாடிக்குடில்களில் அன்னாசி வளர்க்கப்பட்டது 

16, 17-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் அன்னாசி உயர்குடிகளின் பழங்களாக கருதப்பட்டது. அச்சமயத்தில் போர்த்துக்கீசியர்கள் உலகின் பிறபகுதிகளுக்கு கரீபிய தீவுகளிலிருந்து அன்னாசியை  அறிமுகப் படுத்திதாதல் ஐரோப்பாவில் அன்னாசி பழங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன. 

இங்கிலாந்தில் அன்னாசி அறிமுகமாவதற்கு 100 வருடங்கள் முன்பே இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களால் 15-ம் நூற்றாண்டில் அறிமுகமாயிருந்தது அக்பரின் அரசாட்சியை குறித்த 16-ம் நூற்றாண்டு நூலான அயினி அக்பரில் அன்னாசி பழங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் அரண்மனை கணக்கு வழக்குகளில் ஒரு அன்னாசியின் விலை பத்து மாம்பழங்களின் விலைக்கு இணையானது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது 

1681-ல் அன்னாசி கிருஸ்துவத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது ரோமானிய கட்டிட கலைகளில் இடம்பெறும் பைன் கோன்களுக்கு இணையாக உலகின் பல நாடுகளின் கட்டிடங்களில் அன்னாசி வடிவங்கள் இடம் பெற துவங்கின.  

ஐரோப்பியர்களின் உணவு மேசைக்கென உலகின் பல நாடுகளில் அன்னாசி விளைந்தது. அன்னாசிப் பழங்களுக்கென்றே ஐரோப்பாவின் விரைவுக் கப்பல்கள் பிரத்யேகமாக இயங்கின.

1687-ல் பூச்சிகள் மற்றும் மலர்களின் சித்திரங்களை தொகுத்தற்காக உலகப்புகழ்பெற்ற, ஆக்னஸ் (Agnes Block) நெதர்லாந்தில் இருந்த தனது வெளிநாட்டு  தாவரங்களுக்கான பிரத்யேக தோட்டத்துக்கு அன்னாசிச் செடியைக் கொண்டு வந்தார்.

ஹாலந்தில் முதல் கனி 1690களில் அறுவடை செய்யப்பட்டது அங்கு முதல் வெற்றிகரமான பசுங்குடில் அன்னாசி சாகுபடியும் அறுவடையும் 17ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது

அப்போது அன்னாசிச் செடிகளை செயற்கையாக , வலுக்கட்டாயமாக மலரவைப்பது குறித்த தொழில்நுட்பங்கள் தோட்டக்கலை சஞ்சிகைகளில் வெளியாகின. 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் நெதர்லாந்தில் அன்னாசி சாகுபடி செழித்திருந்தது. 

 1807களில் அன்னாசித் திருட்டுக்கள் குறித்த பல செய்திகள் உலகின் பல நாடுகளின் நாளிதழ்களில் வெளிவந்தன. ஆஸ்திரேலியாவில் ஏழு அன்னாசி திருடிய ஒருவருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

அன்னாசிகளை கரீபியன் தீவுகளில் இருந்து ஐரோப்பா கொண்டு  செல்வது 1800களில் நீராவிக் கப்பல்கள் வந்தபின்னர் மிக எளிதாகியது.  

நீராவிக்கப்பல்கள் இயங்கத் தொடங்கியபோது இங்கிலாந்தை சேர்ந்த குடுவைத் தோட்டத்தை (Terrarium) கண்டுபிடித்தவரான வார்ட் (Nathaniel Bagshaw Ward)   கண்ணாடிகூண்டுகளை பிரத்யேகமாக அன்னாசி பழங்களை கொண்டு செல்லவேண்டியே வடிவமைத்து கொடுத்தார். அதிலும்  அன்னாசி பழங்கள் பல நாடுகளுக்கும் பயணித்தன

 வார்ட் 1842 ல் வெளியான தனது  தனது   On the Growth of Plants in Closely Glazed Cases என்னும் நூலில் அன்னாசியின் இந்த மூடிய கண்ணாடிக்கூண்டு பயணத்தை விவரித்திருக்கிறார்.

ஐரோப்பாவின் அன்னாசி சாகுபடி மையமாகவே  நெதர்லாந்து இருந்தது, 1816 ல் அறிமுகமான கொதிநீர் வெப்ப சாகுபடி முறைகளுக்கு பின்னர் அன்னாசி எளிதாக சாதாரண மக்களும் வாங்கும் படியான ஒரு பழமானது

 சார்லஸ் டிக்கின்சனின் டேவிட் காப்பர்ஃபீல்ட் புதினத்தில் கோவண்ட் கார்டன் மார்க்கெட்டில் பார்த்த அன்னாசிப்பழத்தால் கதாநாயகன் ஈர்க்கப்பட்டு

//,,அல்லது நான் கோவண்ட் கார்டன் சந்தை வரை நடந்து சென்று அன்னாசிப் பழங்களை உற்றுப் பார்த்திருக்கிறேன்// என்றுசொல்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

“… or I have strolled, at such a time, as far as Covent Garden Market, and stared at the pineapples.” 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில்  Big Pineapple  என்னும் மிகபெரிய அன்னாசி  வடிவக் கட்டிடம் கட்டப்பட்டது அது இப்போதும் பிரபல சுற்றுலா தலமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் பாத்ரஸ் (Bathurst) நகரில் குயின்ஸ்லாந்தின் அதே மாதிரியில் பெரிய அன்னாசி என்னும் கட்டிடம் அமைக்கப்பட்டது  16.7 மீ உயரம் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் அன்னாசியை குறித்த ஆய்வுகள் நடக்கின்றன.   

அன்னாசி வடிவம் கதவுகளில் செதுக்கப்பட்டன மேசைவிரிப்புகள், கைக்குட்டைகள், போர்வைகளில் அன்னாசியின் சித்திரம் வரையபட்டது கட்டிடக்கலையில், இறையியலில், சுவர் சித்திரங்களில் இடம்பெற  துவங்கிய அன்னாசி இங்கிலாந்தில் விருந்தோம்பலின் அடையளமாக இருந்தது. இன்றும் இங்கிலாந்து விருந்துகளில் அன்னாசிக்கென சிற்ப்பான இடம் இருக்கிறது.

கிரீடம் போன்ற இலைக்கொத்தும் கொண்டிருந்த்தால், 1800 களில் பழங்களில் அரசனாக இருந்த அன்னாசி சுவையின் உலகை ஆண்டது என்றே சொல்லலாம்   

பிரான்சுக்கு 1730’ல் அன்னாசி அறிமுகமானது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிக கடினமான இலைகளுடன் கூடிய அன்னாசி செடிகள் 1838-ல் அறிமுகமாயின.  இங்கிலாந்தின் கியூ தோட்டத்தில்  இலங்கை, ஜமைக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட  பல புதிய அன்னாசி ரகங்கள்  வளரத்  துவங்கின 

அன்னாசியின் வரத்து அதிகரித்ததால் அதை சாதாரண மக்களும் வாங்க முடிந்தது குறிப்பாக மாலுமிகள் கடற்பயணம் முடித்து திரும்புகையில் வீட்டின் கதவில் அன்னாசிப் பழத்தைக் கட்டி தொங்கவிடுவது ஒரு வழக்கமாக இருந்தது.18-ம் நூற்றாண்டில் அன்னாசி எளிதாக இறக்குமதி செய்யப்படும் ஒன்றாகிய போது அதன் புகழ் மங்கியது அப்போதிலிருந்து அன்னாசி செல்வத்தின் அடையாளமாக இல்லாமல் அசலான அதன் ஆதி உபயோகமான உணவு, மது மற்றும் வரவேற்புக்கானதாகியது என்று பதிவு செய்கிறார் வரலாற்றாய்வாளர் நிக்கோலா கர்னிக் (Nicola Cornick) 

ஹவாய் அன்னாசி

1886 ல் ஜேம்ஸ் டோல் என்பவரால் ஹவாயில் முதல் வணிக ரீதியான அன்னாசி சாகுபடி துவக்கப்பட்டது. அது மிக வெற்றிகரமாக இருந்ததால் ஜேம்ஸின் தொழில் 30 வருடங்களில் பன்மடங்கு விரிவடைந்தது 1911ல் அவரது நிறுவன ஊழியர் ஒருவரால் அன்னாசியின் கடினமான வெளித்தோலையும் நடுப்பகுதியையும் பிரித்தெடுக்கும் இயந்திரமும் கண்டு பிடிக்கபட்ட போது அந்நிறுவனம் மாபெரும் சாம்ராஜ்யம் ஆகியது.

 1900’ல் ஜேம்ஸினால் ஹவாயில் மிகப்பெரிய அளவில் சாகுபடி செய்யப்பட்ட போது அங்கு மட்டுமே உலகின் 75 சதவீத அன்னாசி உற்பத்தியானது. ஜேம்ஸ் டோல் அனைவராலும் அன்னாசி அரசரென்று அழைக்கப்படலானார். 

1970 ல் இருந்து குளிர்சாதன வசதி கொண்ட கப்பல்கள் அன்னாசியை உலகெங்கும் சேதமின்றி கொண்டு சென்றபோது, உலகின் அன்னாசிக்கான ஹவாயின் தேவை குறைந்தது, இதனால்  ஹவாயின் அன்னாசி சாகுபடி குறைய தொடங்கியது. டோல் தனது அன்னாசி தயரிப்புக்களை   முற்றிலுமாக நிறுத்தினார். 2013-ல்  ஹவாயில் இயங்கிய  உலகின் மிகபெரிய காய்கறி மற்றும் பழங்களுக்கான பன்னாட்டு நிறுவனமான டோல் வயல்களின் (Dole Plantation) உற்பத்தி உலக அன்னாசி உற்பத்தியில் 0.1 % தான் இருந்தது   எனினும் ஜேம்ஸ், ஹவாயின் அன்னாசி அடையாளமாகவே நீடிக்கிறார்

அவர் பெயரில்  ஹவாயில் 3 ஏக்கரில் அமைந்திருக்கும் அன்னாசி செடி வடிவிலான  புதிர்வழித்தோட்டம் உலகின் மிகப்பெரியது.(Dole Plantation’s Pineapple Garden Maze) இது சுமார் 14000 வண்ணமயமான ஹவாயின் தாவரங்களைக் கொண்டு 3 மைல் நீள சிக்கலான புதிர் பாதை அமைக்கப்பட்டு மத்தியில் அன்னாசி வடிவம் இருக்கும்படி உருவாக்கபட்டுள்ளது.

ஹவாயில் பிசுபிசுத்து தூறும் மழையை அன்னாசிச்சாறு மழை என்பார்கள். பல வருடங்களுக்கு இதன் அடித்தண்டிலிருந்து இலைகள் முளைத்து வருடா வருடம் கனிகள் உருவாவதால் ஹவாயில் வயதான தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அன்னாசிப் பயல், அன்னாசிப் பெண் என்று செல்லமாக அழைக்கப்படுவார்கள் 

சாகுபடி

19’ம் நூற்றாண்டில் தோட்டக்கலை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளின் மேம்பாடு நிகழ்ந்தபோது, 1816’ல் அறிமுகமான கொதிநீர் வெப்பமூட்டும் முறை மற்றும் 1833 ’ல் அறிமுகமான கண்ணாடித்தட்டு சாகுபடி, இவை  இரண்டும் அன்னாசியின் சாகுபடியை வேகம் பிடிக்கச் செய்தன. 

அப்போதிலிருந்து  வெப்பமூட்டப்பட்ட கண்ணாடிஅறைகளில் அன்னாசி வளர்கின்றது. ஐரோப்பாவின் அன்னாசிப் பசுங்குடில்கள் பைனரிகள் என அழைக்கப்பட்டன

உடல் இனப்பெருக்கம் செய்யும் அன்னாசியின் கிரீடம் போன்ற கனிகளின் உச்சியில் இருக்கும் இலைத்தொகுதியை மட்டும் கத்தரித்து நிலத்தில் நட்டு வைத்தால் அன்னாசி செடி அதிலிருந்து உருவாகி பலனளிக்கத் துவங்கும்

ஒரு ஏக்கரில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் செடிகள் சாகுபடி செய்யப்படும். அன்னாசியின் அடிப்பகுதி தண்டுகள் மூலமாகவும் இவை  சாகுபடி செய்யப்படுகின்றன 

பல வகைகளில் முதல் வருடம்  செடியின் மையத்தில் உருவாகும் கனியை அறுவடை செய்த பின்னர்  கூடுதல் இனிப்புடைய பல சிறுகனிகள் மஞ்சரித்தண்டில்  உருவாகும்.அவையும் அறுவடை செய்யப்படும்.  

 வகைகள்

 உலகெங்கிலும் அதிகம் சாகுபடியாகும் அன்னாசியின் இரு வகைகள் cayenne மற்றும் Queen. வகைகள் 

Cayenne  group: மென்மையான வெளிப்புறமும் உருளை வடிவமும் கொண்டவை,  மஞ்சள் நிற சதைப்பகுதி கொண்டவை. இந்தியாவின் கோவா மேகாலாயா வங்காளம் ஆகிய பகுதிகளில் அதிகம் விளைபவை 

Queen group:  சிறிய அதிக முட்கள் கொண்ட செடிவகை.  தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில்  அதிகம் விளைகின்றன 

பிற பிரபல வகைகள்

  • “Hilo” 1 -கிலோ கச்சிதமான அளவுள்ள  ஹவாய் வகை 
  • “Kona sugarloaf” -3 கிலோ எடைகொண்ட வெள்ளைச் சதைப்பகுதி கொண்ட அதிகச் சர்க்கரை கொண்ட வகை
  • “Natal queen”- 2 கிலோ எடை கொண்டிருக்கும் இது மஞ்சள் சதைப்பகுதியும், மென்மையான நறுமணமும்  கொண்டது
  • “Pernambuco”- 4 கிலோ எடை கொண்டிருக்கும் இவ்வகை இளமஞ்சள் நிற சதைப்பகுதி கொண்டது. அதிகதூரம் பயணித்தாலும் இயல்பு மாறாமல் இருக்கும் . 
  • “Red Spanish” 1லிருந்து 2 கிலோ எடை கொண்ட பிரபல வகை. ஸ்பெயினிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த ச்சிவப்பு ஸ்பானிஷ் அன்னாசி வகை இலை நார்களுக்காகவும் 17ம் நூற்றாண்டில் இருந்து வளர்க்கப்படுகிறது,
  • “Smooth cayenne”- 3 கிலோ எடை கொண்டிருக்கும் பிரபல வகை. உருளை வடிவ பழங்கள் அதிக சர்க்கரை அளவும் அமில அளவு கொண்டவை கேன்களின் பதப்படுத்தப்படும் வகை. இலைகள் முட்கள் இல்லாது மென்மையாக இருக்கும்
  • comosus ‘Variegatus’ –  மிகச்சிறிய உருளை  வடிவ பழங்களுடன் அலங்காரசெடிகளாக  தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன 
  • Vazhakulam pineapple -கேரளாவின் வாழக்குளம் அன்னாசி . வாழக்குளம் பகுதில் விளையும் இந்த அன்னாசிப்பழம் புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது. சுமார் 1500 கிராம் எடை கொண்டிருக்கும் இப்பழங்கள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும் . சதை பொன்மஞ்சள் நிறத்தில் இனிப்புச் சாறு நிரம்பியதாக இருக்கும் 
  • Spanish group:  அன்னாசி செடிகள் குட்டையானவை, மங்கிய நிறம் கொண்ட சதைப்பகுதி கொண்ட கனிகள் 
  • Abacaxi group:  லத்தீன் அமெரிக்க பகுதிகளின் அன்னாசி இது அன்னாசி சாறுக்கான பிரத்யேக வகை 
  • Maipure group:  மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் விளைகின்ற வகை  
  • comosus  var. parguazensis உருண்டையான பழங்களுக்கான வகை
  • comosus var. Bracteatus, A. bracteatussensu  & A. fritzmuelleri- உயரமாக வளரும் உயிர் வேலி வகைகள்.
  • A. comosus var. erectifolius   மிகசிறிய சுவையற்ற கனிகளை அளிக்கும். இலை நார்களுக்கானவை. இலைகள் மென்மையாக நீளமாக இருக்கும்  
  • Antigua Black- உலகின் மிக அதிக சர்க்கரை கொண்ட அன்னாசி வகை

வேதிப்பொருட்கள்/சத்துக்கள்

அன்னாசியின் தோலில், சதைப்பகுதியிலும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றில் பாலிஃபீனால்கள், கேலிக் அமிலம், சிரிஞ்சிக் அமிலம், ஃபெருலிக் அமிலம், வனிலின், ப்ரோமெலைன் ஆகியவை முக்கியமானவை

 ப்ரோமெலைன் நொதி மருத்துவ குணங்களை கொண்டது. தசையை தளர்த்தி ஜீரணத்தை எளிதாக்கும், கட்டிகளை கரைத்து உடல் நலத்தை காக்கும்.

அன்னாசியில் அதிக கால்சியம், நீர்ச்சத்து, பொட்டசியம், நார்ச்சத்து ஆகியவையுடன் வைட்டமின் B1, B6, ஆகியவையுமுள்ளன. மேலும் அன்னாசியின் அதீத வைட்டமின் C, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்

உணவு வகைகள்

அன்னாசிப்பழங்களின் சதையும், சாறும் உலகெங்கிலும் பல வகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. 

பால்டிமோரில் முதன்முதலாக 1865ல் அன்னாசி பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு சந்தப்படுத்தபட்டது

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தெருவோரக்கடைகளில் அன்னாசி ஒரு தின்பண்டமாக கிடைக்கிறது. மேற்கத்தைய நாடுகளில்  பன்றி இறைச்சி உணவுகளை சீவிய அன்னாசி துண்டுகளால் அலங்கரித்து அளிப்பது வழக்கமாக இருக்கிறது

அன்னாசிபழத்துண்டுகளை பழக்கூழ்களில் கலப்பது உலகெங்கிலும் பொதுவான வழக்கமாக இருக்கிறது, அன்னாசிப்பழம் பீட்ஸாவிலும் இருக்கிறது. 

நூற்றாண்டுகளாக பிலிப்பைன்ஸில் அன்னாசிச்சாற்றில் வேகவைக்கப்பட்ட பன்றி இறைச்சி உணவு Hamonado  பிரசித்தம். அதைப்போலவே  அங்கு afritada என்னும் அன்னாசி சாற்றில் வேகவைக்கப்பட்ட கோழிக்கறி உணவும் பிரபலம்.

kaeng som pla என்னும் தாய்லாந்து, மலேசியாவின் பிரபல மீன் உணவும் அன்னாசி சாற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது, 

ஹவாயின் haystack  என்பதுவும் அன்னாசி கலந்த அசைவ உணவுதான்

உலகெங்கிலும் அன்னாசிச்சாறு அருந்தப்படுகிறது அன்னாசி சாறு தயிரில், இனிப்புகளில், ஐஸ்கிரீம்களிலும் கலந்து விரும்பி உண்ணப்படுகிறது Puerto Rico வின் பிரபல பானமான piña colada அன்னாசிச்சாறு, தேங்காய்ப்பால் மற்றும் ரம் ஆகியவற்றின் கலவைதான்.

 மெக்ஸிகோவின் பிரபல மது வகையான tepache. அன்னாசிப்பழத்தின் வெளித்தோலை அரைத்து நொதிக்கச்செய்து அத்துடன் கரும்புச்சர்க்கரை சேர்த்து தயரிக்கப்படுவது  

அன்னாசி வினிகர் ஆப்பிரிகா பிலிப்பின்ஸ் நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது 

18 ம் நூற்றண்டில் இருந்து பிலிப்பைன்ஸின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருப்பது nata de piña என்னும் அன்னாசி ஜெல் உணவு. பப்பிள்கம் போல மென்று உண்ணவேண்டிய இது Komagataeibacter xylinus எனும் பாக்டீரியாவால் அன்னாசிச் சாற்றை நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது.

அன்னாசியை நொதிக்கச்செய்து பல நாடுகளில் அன்னாசி மதுவும் உருவாக்கப்படுகிறது

நாம் உண்ணுகையில் நம்மை உண்ணும் அன்னாசி

அன்னாசியை நாம் விரும்பி சாப்பிடும் போது நம்மையும் அன்னாசி சாப்பிடுகிறது. இது எதோ சிறார்களுக்கான மாயாஜால கதையல்ல உண்மையிலேயே அன்னாசியிலிருக்கும் புரோமெலைன் (Bromelain) புரதத்தை உடைத்து அழிக்கும் இயல்புகொண்டது எப்போதெல்லாம் அன்னாசி உண்ணப்படுகிறதோ அப்போதெல்லாம் நாக்கின் புரதத்தை கொஞ்சம் இந்த நொதி அழிக்கிறது 

ப்ரோமெலைன் அன்னாசியின் பழங்கள், தண்டு, இலைகள் இலைக்கொத்து ஆகியவற்றில் காண்படுகின்றது

அன்னாசியை சாப்பிடுகையில் கவலைப்படவேண்டிய அளவுக்கு அதில் ப்ரோமெலைனின் அளவு இல்லை

மேலும் ப்ரோமெலைன் குடல்பகுதிக்கு செல்வதற்குள் உருமாறி விடுவதால் அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை

 எனினும் அன்னாசித் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பழங்களை அறுவடை செய்கையில் இந்த நொதி சருமத்தில் பட்டுக்கொண்டே இருப்பதால்  கைகள் அரிக்கபட்டு கைரேகைகள் முற்றிலும் அழிந்துபோகின்றன.

இதே புரோமெலைன் மூட்டுவலிக்கும் நிவாரணமளிக்கிறது

அறுவடைக்கு பின்னர் அன்னாசி

அன்னாசிப்பழங்கள் பச்சையாக உறுதியாக இருக்கையில் அறுவடை செய்யப்பட்டு அவை கனிவதற்காக எதிலீன் வாயு செலுத்தப்படுகிறது அதன்பிறகே அன்னாசிப்பழங்கள் பொன்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் பெறுகின்றன

 அதற்குப் பின்னர் அவை மேலும் கனியாது . நாம் வீடுகளுக்கு அன்னாசி வாங்குகையில் பொன்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம்கொண்ட கனிந்த பழங்களை வாங்கவேண்டும். 2 நாட்களில் கெட்டுப்போய்விடும் அன்னாசிப் பழங்களை மேலும் சிலநாட்கள்  பாதுகாக்க அவற்றின் இலைகள் கீழிருக்கும் படி தலைகீழாக வைக்கலாம். 

பச்சைநிறப் பழங்கள் சிலநாட்களில் கனிந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. எனினும் பழுக்காத அன்னாசிப்பழங்களை தக்காளி , ஆப்பிள், வழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து வைக்கையில் அவை வெளியிடும் எதிலீனால் சிறிது பழுக்க வாய்ப்புள்ளது

அறுவடைக்கு பின்னர் கனிகளின் கடினமான வெளித்தோலும் மையத்தண்டும் நீக்கப்பட்ட பின்னர் அன்னாசி உலரச்செய்தோ, பதப்படுத்தப்பட்டோ அல்லது சாறாக்கியோ பல வகையாக சந்தைப்படுத்தப்படுகிறது. 

பைனா நாரிழை

 பிலிப்பன்ஸின் ‘Red Spanish’ அன்னாசி இலைநார்கள் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பிருந்தே பிலிப்பைன்ஸில் புழக்கத்தில் இருக்கின்றது

 பிலிப்பன்ஸின்  ஆண்களுக்கான தேசிய உடையான barong tagalog மற்றும் பெண்களின் தேசிய உடையான baro’t saya, ஆகியவை பைனா நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் உயர்குடிபெண்களுக்கான பிரத்யேக உடையான  traje de mestiza மற்றும் பெண்களின் கைக்குட்டைகள் ஆகியவையும் பைனா நாரிழைகளைக்கொண்டே உருவாகின்றன 

உற்பத்தி

வெப்ப மண்டல பயிர்களில் வாழைக்கும் மாங்கனிகளுக்கும்  அடுத்தபடியாக முக்கியமான பயிராக இருப்பது அன்னாசிதான் .. பிலிப்பைன்ஸ் , பிரேஸில் மற்றும் கோஸ்டாரிக்கா உலகின் மூன்று முன்னணி உற்பத்தியாளர்கள்  

நெதெர்லாந்து உலகின் முன்னணி அன்னாசிச்சாறு  இறக்குமதியாளராக இருக்கிறது. 2017 நிலவரப்படி மிக அதிக அன்னாசிச்சாறு உபயோகிப்பாளர்களாக தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் நாடுகள் இருந்தன

அதிக மக்கள் தொகை இருந்தும் சீனாவும் இந்தியாவும் அன்னாசி பயன்பாட்டில் மிக கடைசி இடத்தில் இருக்கின்றன   

2020ல் உலக அன்னாசி உற்பத்தியில் 28 மில்லியன் டன்  பிலிப்பைன்ஸ் கோஸ்டாரிக்கா, பிரேசில் இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது.  

உலக அன்னாசி சந்தையில் பதப்படுத்தப்பட்ட அன்னாசி பொருட்கள் அதிக அளவு இருக்கின்றன. 250 மில்லியன்  அமெரிக்க டால்ர்களை காட்டிலும அதிகமாக அன்னாசி சாறும், 600 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக டின்களில் அடைக்கப்பட்ட அன்னாசியும் சந்தைப் படுத்தப்படுகின்றன

அன்னாசியில் இருக்கும் புரோமெலைன் இறைச்சியை மென்மையாக்குவதால் உணவுத்தொழிற்சாலைகளில் இதன் தேவை அதிகம். அன்னாசியின் கழிவுகள் கால்நடை தீவனங்களில் கலககப்படுகின்றது  

 அன்னாசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் முதல் 6 நாடுகள்

  1. கோஸ்டா ரிக்கா
  2. பிரேஸில்
  3. பிலிப்பைன்ஸ்
  4. தாய்லாந்து
  5. இந்தோனேஷியா
  6. இந்தியா 

தழைகீழ் அன்னாசிப்பழ சித்திரங்களை தங்களது கைப்பையில் லேப்டாப்புகளில் சூட்கேஸ்களில் வரைந்துகொள்வதற்கு விபரீதமான அர்த்தம் இருக்கிறதென்கிறது இணையம்.

பொதுவாக ஆசிய பகுதிகளில் அன்னாசியை கர்ப்பிணிப்பெண்கள் உண்டால் கருக்கலைப்பு நிகழும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது.  இதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஒரு கர்ப்பிணிப்பெண் ஒரே சமயத்தில் 10 அன்னாசிகளை சாப்பிட்டால் மட்டுமே அது கவலைக்குரிய விஷயமாகிறது.

2011ல் உலகின் மிகப்பெரிய அன்னாசி பழம் ஆஸ்திரேலியாவில் கிரிஸ்டைன் என்பவரால் உருவாக்கப்பட்டது. 32 செமீ நீளமும்,66செமீ சுற்றளவும் கொண்டிருந்த அந்த அன்னாசிப்பழம் 8.3 கிலோ எடை கொண்டிருந்தது 

அன்னாசிகளுக்கு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸின்  பைன்யாசான் திருவிழா ( Pinyasan Festival,) ஏப்ரல் 14, 1993லிருந்து நடத்தப்படுகிறது

அடுத்த முறை அன்னாசியை சுவைக்கையில் 1640-ல்  ’’இனிப்பு மணமும் வைனும் பன்னீரும் சர்க்கரையும் கலந்த சுவையும் போல’’ என்று தாவரவியலாளர்களால் 1640-ல் விவரிக்கப்பட்ட அதன் அசல் சுவையை அனுபவியுங்கள்.

« Older posts

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑