தனித்திருக்கும் மற்றுமோர் இரவில் நானுமாய் நேற்றிருந்தோம்
உன்னுடனேதான் நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்
உன் ஜன்னலுக்கு வெளியே பொழிந்த மழையில்
தாமதமாகவேனும்?
லோகமாதேவியின் பதிவுகள்
தனித்திருக்கும் மற்றுமோர் இரவில் நானுமாய் நேற்றிருந்தோம்
உன்னுடனேதான் நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்
உன் ஜன்னலுக்கு வெளியே பொழிந்த மழையில்
தாமதமாகவேனும்?
சிறிய கோவில்தான் ஆனால் வெளியில் ஏகத்துக்கும் இடம், நல்ல கூட்டமும் கூட
சமீபத்தில் குண்டம் இறங்கி இருந்திருக்கிறார்கள் , அந்த சாம்பலை நிறைய அள்ளி நெற்றிக்கு இட்டுக்கொண்டும்,வீட்டிற்கு எடுத்துக்கொண்டும் செல்பவர்களை பார்த்தேன்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது பிரகாரத்தில் நடு வயதில் ஒரு பெண் நன்கு உடுத்திக்கொண்டு பின்னலில் கொஞ்சமாய் பூவெல்லாம் வைத்துக்கொண்டு கையில் ஒரு மஞ்சள் பையை பிடித்தபடி, அம்மன் இருக்கும் திசை நோக்கி உட்கார்ந்து கொண்டு ‘’ கட்டையில் போறவளே என்று துவங்கி, நாசமாய் போயிருவே, நல்லா இருந்துருவியா ‘ என்று ஏகதுக்கும் வசை பாடிக்கொண்டிருந்தார்கள், அனைவரும் திரும்பி பார்க்கும் படிக்கு உரக்க வேறு சண்டை.
சில சமயம் தொண்டை காய்ந்ததோ என்னவோ தலைகுனித்துகொண்டு கொஞ்ச நேரம் அமைதி, பின் மீண்டும் வரவழைத்துக்கொண்ட ஆங்காரத்துடன் அதே வசை
சந்தனக்காப்பில் அருளிக்கொண்டிருந்த அம்மனுக்கு உள்ளேயும் அர்ச்சனை நடந்தது.
இது போலவே முன்பொருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி ஒரு கோவிலின் வாசலில் மண்ணைவாறி தூற்றிக்கொண்டிருந்தார்கள்
அவர்களும் என்னவோ கண்ணிருடன் வசைபாடிக்கொண்டிருந்தது இன்னும்நினைவில் இருக்கிறது
எல்லா ஆண்களும் பவ்யமாக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ’’சொல்லு ஆத்தா உனக்கென்ன குறை’’ என் று நிற்பார்கள்
அது வேறு வகையிலான out let என் று எனக்கு தோன்றும்
இது என்ன மாதிரி மனநிலை ?
பைத்தியம் என்று உறுதியாக சொல்ல முடியாதபடிக்கு சுயநினைவுடன் நல்ல தெளிவாகத்தான் பேசுகிறார்கள்
ஒரு வேளை கடவுள் இருப்பாரே ஆனால் வரிசையில் நின்று வேண்டிக்கொள்ளும் எங்களை விட, கடவுளை சொந்தமாய் நினைத்து, சண்டையிட்டு வசைபாடும் அளவிற்கு நம்பும் இவர்களுக்காவது எதாவ்து செய்யலாம்
கண்முன்னே நழுவிச்செல்கிறது காலம்
அதிலிருந்து தெறித்து வெளிவரும்
கணங்களில்
கைக்கு கிடைத்த
சிலவற்றை அள்ளி சேகரித்து
மடியில் இறுக்கக்கட்டிக்கொள்கிறேன்
உன்னுடன் வாழ
எனக்கும் வேண்டுமல்லவா
சில கணங்கள்!
’பெரும்பன்னி’ என்பது உயர் சாதியினர் விளிம்பு நிலை மக்களுக்கு இட்ட பெயராயிருக்கலாமென்பதையும் ’கும்பிடெறேன் சாமி’ என்று தலித் ஒருவர் உயர் சாதியினர் கூப்பிட சங்கடப்படட்டும் என்று வைத்துக்கொண்ட பெயரும் நிறைய யோசிக்க வைத்தது.
நான் முனைவர் பட்ட ஆய்விலிருக்கையில் அந்த பல்கலையின்
நீ பேசிக்கொண்டிருக்கையில்
செவிகளே உடலாகி
குரலாக மாறிவிட்ட உன்னை கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் கேட்க விரும்புவதைத்தவிர
வேறு என்ன என்னவோ பேசுகிறாய் எப்போழுதும்
எப்போதாவதுதான் தெரியாமல் கைபட்டு
இனிப்பை தொட்டுக்கொண்டது போல
என் மீதான் உனதன்பை கோடிட்டு காட்டுகிறாய்,
நீ பேசி முடித்த பின்னர்
கைப்பேசியின் உள்ளிருந்து உருவி எடுத்து
உன் வாக்கியஙகளை சொல் சொல்லாக பிரித்தெடுத்து
வேறு வேறாக அடுக்கி கட்டமைத்துப்பார்க்கிறேன்
ஒளிந்திருக்குமோ என்மீதான உன் காதல்
இவற்றுக்குள் எங்கேனுமென்று!!
கவிதை மொழியிலேயே பேசுகிறாய் என்னுடன் எப்பொழுதும்,
உன் கவிதையைப்பிடித்தபடிதான்
உன் உலகிற்குள் நுழைந்திருக்கிறேன்.
ஆயினும், ஒன்றே போலிருப்பதில்லை உனது கவிதைகள் யாவும்.
ஒரு சில திரிசூலமும், மழுவும், உடுக்கையுமாய்
மூன்றாம் கண்ணுடன் முப்புரம் எரிக்கையில்
திகைத்து தள்ளி நின்று கொள்கிறேன்.
இன்னும் சில ஆயிரம் தடக்கைகளில்
ஆயுத்தத்துடன் ஆங்காரமாய் வ்ருகையில்
அடைக்கலம் கோருகிறேன்.
முள்கிரீடம் அணிந்து , சிலுவையில் அறைபட்டு
குருதி கசிகிறது சிலவற்றில்
அவற்றை, பதறி எடுத்து மடியிலிட்டு முந்தானையால் துடைக்கிறேன்.
குப்பைத்தொட்டியில் போடப்பட்ட
பச்சிளம் சிசுவாய் பரிதவித்து வீரிடும்
கவிதைகளை
அள்ளிஎடுத்து என் முலைகொடுக்கிறேன்.
ஒரு சிலவே மென் திரையாக இருப்பதால்
மெல்ல விலக்கி கடந்து செல்கிறேன்.
வெகு சிலவே சிற்றகலின் ஒற்றைச்சுடரின்
ஒளியில் தெரியும் கடவுள்களைப்போல
சொந்தமென்னும் உணர்வையும் நம்பிகையும் அளிக்கின்றன.
கனத்த சில கவிதைகள்
குளிரும் இரவுகளில் என்னை முழுவதும் மூடியிருக்கும்
கதகதப்பான மகிழம்பூ மணக்கும் கம்பளியாகின்றன.
இன்னும் ஒன்றே ஒன்றுதான்
உன்னால் எழுதாக்கவிதையாய் இருக்கிறது
என் கழுத்தின் குருதிக்குழாயை
வலியின்றி வெட்டும் நஞ்சு தோய்ந்த
உன் கூர் வாள் கவிதையொன்றினையும் எழுதி விடேன்.
உன் கவிதைகளோடு வாழ்வதைப் போலவே இனிதானது
குருதி கொப்பளிக்க அவற்றாலேயே சாவதும்!
பேருந்தின் படிக்கட்டுகளில்
ஒற்றைக்கையால் பற்றிக்கொண்டு
ஊசலாடும் பயணமொன்றில்
அறுந்து விட்டதென் செருப்பின் நீல வாரொன்று,
அவசரமாய் உதறினேன் இரண்டையுமே
காலடியில்
விரைந்து கொண்டிருந்த கரிய தார்ச்சாலையில்,
பலநாட்களாய் உயிருக்கு போராடிய
அவற்றினின்றும் விடுதலை பெற்ற
கடந்த வருடம் எனக்கும் என் அம்மாவிற்குமாய் தீவிரசிகிச்சை அளித்த ஒரு மருத்துவருக்கு நான் எழுதிய ஒரு கடிதம்இது. தவிர்க்க முடியாதபடி மருத்துவத்திற்கு ஆளாகவேண்டியுள்ள நோயாளிச் சமூகத்தின் பிரதிநிதியாக என் trigeminal neuralgia விற்கு பிறகு மீண்டும் அவரிடம் குடும்பமாய் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டி இருந்ததால் இரண்டிற்கும் சேர்த்து இந்த நன்றிக்கடிதத்தை கோவை மருத்துவர் திரு பாலகுமார் அவர்களுக்கு எழுதினேன்.
எனக்கு ஏற்பட்ட வலியை எங்களூரில் பல் வலியென்று கண்டுபிடித்து (?) root canal சிகிச்சைக்கெல்லாம் என்னை தயார் படுத்தினார்கள். பின்னரே நான் அவரிடம் மருத்துவ ஆலோசனைக்காக வந்தேன். 20 நிமிடங்களில் இது ஒரு நரம்பு, அதன் பாதுகாப்பிற்கென இருக்கும் மேற்பூச்சை இழப்பதால் வரும் கடுமையான வலி என்னும் மிகச்சரியானதோர் கண்டறிதலுக்கு வந்து, சரியான ஆலோசனை வழங்கினார். Remarkable diagnosis!!
MRI , CT எல்லாம் எடுக்க சொல்லவில்லை.மிகத்துல்லியமான கண்டறிதல், அதற்கான குறிப்பிட்ட வலிநிவாரணியைப் பரிந்துரைத்தார்.. ஒரு வேளை இதற்கு மேலதிக சில பரிசோதனைகள் செய்ய வேண்டுமெனச்சொல்லியிருந்தாலும் கட்டுப்பட்டிருப்பேன். எனினும் அப்படி சொல்லாமல் எளிமையான முறையில் மிக விலைகுறைந்த (20 மாத்திரைகள் 11 ரூபாய்கள்) சரியான மருந்துகளை பரிந்துரைத்தார். கோவை தற்போது medical capitol என்று அழைக்கப்பட்டாலும் அங்கும் நோயாளிகளை கசக்கிப்பிழியும் அறமற்ற மருத்துவமனைகளே ஏராளம் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் குடும்ப மருத்துவர் வசந்திற்கு அடுத்து அறத்தின் பேரிலான நிலைப்பாட்டுடன் சிகிச்சை அளிப்பது இவர்தான்
எனக்குப்பின்னர் வெகு சில நாட்களிலேயே என் பெற்றோர்களுக்கும் சிகிச்சை அதிலும் என் அம்மாவிற்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோயாளியான அம்மாவை 75 வயதிற்கு பின்னரான இந்த இருதய அடைப்பிலிருந்தும் அதன் உடனான சில கோளாறுகளிலிருந்தும் மீட்டெடுத்து உயிரளித்தது மருத்துவ இயலின் எல்லைகள் தாண்டிய ஒரு சிகிச்சை.
அவரிடம் மிகச் சிறப்பானதென்னவென்றால் நம்பிக்கை ஊட்டும் உடல் மொழி. அம்மா அப்பாவை மெல்ல தொட்டு அல்லது தட்டியபடி புன்னகையுடன் பேசும் அந்த உடல்மொழியிலேயே உடல்நிலை பெரும்பாலும் சீராகிவிடும்., அவ்வப்போது நல்ல தமிழிலும் பேசுகிறார்..
இந்தியாவில் பெரிய சிக்கல். டாக்டர்களின் ஈகோ என்பார் ஜெயமோகன். செகண்ட்ஒப்பீனியன் கேட்பதை பெரிய குற்றமாகவே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனமுவந்து அம்மாவை அம்மாவின் விருப்பத்திற்குரிய மருத்துவரிடம் காட்டவேண்டுமென்றால் காட்டசொல்லியதையும் நினைவு கூறுகிறேன்.. இரண்டாம் கருத்தை நாடினார் என்பதற்காகவே நோயாளிகளை தண்டிக்கும் டாக்டர்களைப்பற்றி நாம் ஏராளம் கேள்விப்பட்டிருக்கிறோம். அறத்துடன் திறமையும் பெருந்தன்மையும் சேர்ந்த ஒரு மருத்துவராக அவர் மேல் என் மதிப்பு பலமடங்கு கூடி இருக்கிறது இப்போது.
நோய்களுக்கு சிகிச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அவநம்பிக்கையை போக்குவதையும் ஒரு சிகிச்சையாகவேசெய்யவேண்டுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், ,. உடல்நோய்களின் விளைவாக அவநம்பிக்கையிலும் வாழ்வு குறித்த எதிர்மறைசிந்தனையிலும் இருக்கும் நோயாளிகளை. வாழவேண்டுமென்ற விருப்புறுதி நோக்கி தள்ளிச்செல்வது மருத்துவரின் உடல்மொழியே.( ஜெயமோகன்) அதுவே நோய்களுக்கு முதல் மருந்து. அது அவரிடம் இருக்கிறது.
. என் அம்மாவைப்போல முதுமையில் வலியின் முன் மண்டியிட்டு மன்றாடி மருத்துவரிடம் உடலை பலர் ஒப்படைக்கிறார்கள். நோய் எனும் அந்த ராட்சத வல்லமைக்கு சரியான பதில் சொல்கிற ஒரு சில திறன் வாய்ந்த மருத்துவரகளில் அவரும் ஒருவர். அம்மா அடைந்த வேதனைகளிலிருந்து அவர்களை விடுவித்து. குணப்படுத்தினார். அவருக்கும் அவருடன் இணைந்திருந்த மருத்துவர்களுக்கும் என் நன்றிகள். ஒரு நேர்மையான திறமையான மருத்துவராக தனது பங்கை சரியாக செய்த ஒருவருக்கான நன்றிக்கடிதம் இது.
மருத்துவத்துறையின் இந்த அறமின்மைக்கு மாற்றாக அவர் வெகு சீக்கிரம் துவங்கப்போகும் சொந்த மருத்துவமனை, இருக்குமென்பதால் அதற்கு “அறம் ” என்றே கூட பெயரிட்டுவிடலாம்.
மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டநிலையில் எந்த தகிடு தத்தங்களும் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்பதற்கும் என்னைப்போன்றவர்கள் முற்றிலும் நம்பிக்கையிழக்காமலிருப்பதற்கும் திரு பாலகுமாரும்,திரு வசந்த் அவர்களுமே காரணம். எதிர்காலத்தில்இவரும் திரு ஆல்வாவாகவே எளிய மக்களின் வாழ்வில் அறியப்படுவார் என்றே நம்புகிறேன், விரும்புகிறேன்,. அவரின் எதிர்கால புதிய சொந்த மருத்துவமனைக்கு என் வாழ்த்துக்களுடனும் ,மீண்டும் அனைத்திற்குமான நன்றிகளுடனும்
,
மொழி சார்ந்த பல சிரமங்களுக்கு திருமணமாகி கொங்கு நாட்டிலிருந்து அபுதாபிக்கு சென்றதும் நான் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பதைப்போல தமிழ் ஆட்கள் இல்லை சுற்றிலும் மலையாளிகளே .எனக்கு பேசவும் யாரும் இன்றி அவர்கள் பேசுவதும் புரியாமல் நிலவரம் ஒரே கலவரமாக இருந்தது முதல் 6 மாதங்கள்
’’எந்தா சேச்சி கண்ணடை இட்டிருக்குனு? காழ்ச்சி கொறவுண்டா? , பாங்கு விளிக்குன்ன சப்தம் கேட்டோ?’’ என்றெல்லாம் வேக வேகமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டிருந்தேன் வெயிலடிக்கும் பொழுதுகளில் ’’நல்ல பனி குட்டிக்கு’’ என்பதைக்கேட்டு குழம்பி இருக்கிறேன். பனிபிடிப்பது என்றால் காய்ச்சலென்று தெரிய வெகு நாட்களாகியது
’’இன்னலே’’ என்றால் நான் இன்றைக்கு என்று பலநாட்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் அதற்கு ‘’நேற்று’’ என்று அர்த்தம என்பதே பல மாதங்கள் கழித்துத்தான் தெரியவந்தது.
சரண் வயிற்றிலிருந்த போது எனக்கு இனிப்புகள் தர வந்த ஒரு மலையாளி பெண்மணி ’’ தேவி நல்ல வண்ணம் வச்சுட்டுண்டு’’ என்றதும் நான் நல்ல நிறமாகிவிட்டேன் என்று நினத்து பூரித்துப்போய், பின்னர் சரண் அப்பா வண்ணம் வைப்பது என்றால் குண்டாவது என்று விளக்கமளித்தபின்னர் ஏகத்துக்கும் கவலைப்பட்டேன்
புதியதாய் வாங்கிய இட்லிச்சட்டியில் ’’இன்னும் கொறைச்சு வெள்ளம் வைக்கணும்’’ என்று என்னிடம் சொல்லப்பட்டதை நான் இன்னும் குறைவாக என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு மிகக்குறைவாக தண்ணீர் வைத்து பாத்திரம் கரிப்பிடித்த கதையெல்லாம் நடந்த பின்னர் சுதாரித்துக்கொண்டேன்
காரியமாக தினம் ஏசியானெட்டும் கைரளியுமாகப் பார்த்து பேப்பரும் பேனாவுமாய் களம் இறங்கி 3 வருடங்களில் சரளமாக மலையாளம் பேசவும், மனசிலாக்கவும் முடிந்தது, ஆசான் சுரேஷ் கோபியின் கற்பித்தலில் பல மலையாளக்கெட்டவாரத்தைகளும் கூட கற்றுக்கொண்டேன்!!!
இப்போது இங்கு கல்லூரியில் கேரளாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை என்றால் கூப்பிடு லோகமாதேவியை என்னுமளவிற்கு மலையாளம் அத்துப்படி. கேரளவிலிருந்து வருபவரகளிடம் ‘’ஒண்ணு வேகம் போய் ஃபிஸ் அடைக்கணும் கேட்டோ, நமக்கு கோர்ஸினைக்குறிச்சு பின்ன சம்சாரிக்காம் ‘’ என்பேன் அவர்களும் உடன் பணம் கட்டிவிடுவார்கள்.
ஆனால் மலையாளம் அத்தனை இனிமையான மொழி. அந்த பாஷையின் இனிமையிலிருந்து வெளியெற மனசின்றி இன்னும் இன்னுமென பேசிப்பேசி அதிகம் நான் இப்போழுது பேசுவதும் விரும்புவதும் தமிழை விடமலையாளத்திலேயே !
© 2025 அதழ்
Theme by Anders Noren — Up ↑