கணக்கு தப்பிய புள்ளிக்கும்

வரிசை தப்பிய நெளிவுக்குமாக

இருமுறை நீரூற்றி அழித்த கோலத்தை

மீண்டும் சரியாக போட்டுவிட்டு நிமிர்ந்த என்னை

பார்த்துக்கொண்டிருந்தது,

குருதிச்சிவப்பு மலர்களுடனான

செம்பருத்திச்செடியின்

கிளைகளிரண்டை இணைக்கும்

 நூல்வலையின் நடுவிலிருந்த

 சிலந்தி